5.2.11

பின்நகர்தல்


எதையும் அந்தரத்தில் இருந்து பார்க்கிற கொடுப்பினை இல்லை.
குழந்தைகளைக் கண்டால் தன்னைச் சுருக்கிக்கொண்டு,
அவர்கள் மொழி பழகி அவர்களின் கவன் கல்லை யாசகம் கேட்கிற சிறுவனாகவே மாறிப்போகிற சமியாடி சன்னாசிக் கிழவனைப்போல ஆகத்தான் பிடிக்கிறது.
பிராயத்து நினைவுகள் மட்டுமே மேடாகி உயர்ந்து நிற்கிறபோது இயற்கையை மறுதலித்து பின் நகர்தல் வந்து சேர்கிறது.
எடுத்துவை சோத்தை எதுத்துப்பேசாதே என்கிற வார்த்தைகள் உருவாகும்போது நடுநிசிநினைவுகள் வந்து சடேரெனப்பொடதியில்
அடிக்கிறது.
எவ்வளவு கொடுத்தால் பொய்ச்சான்றிதழ் பெறலாம் என்றுகேட்டதும் கருவிழிக்குள் ஊடுறுவுகிற இளையமகனின் பார்வையில்
தவிடு பொடியாகிறது மேடைவார்த்தைகள்.அப்போது முன்வைத்த காலை பின்வைக்கிற பேடியாகிப் பெருமிதம் கொல்கிறேன்.
 

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்குய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

//அவர்களின் கவன் கல்லை யாசகம் கேட்கிற சிறுவனாகவே மாறிப்போகிற சமியாடி சன்னாசிக் கிழவனைப்போல //

அருமை அருமை.....

சிவகுமாரன் said...

இளமைப் பிராயம் எவ்வளவு இனிமையானது நேர்மையானது என்பதயும் , வளர வளர அது எவ்வளவு சுருங்கிப் போகிறது என்பதையும் அழகாக சொல்கிறீர்கள். அருமை.

Unknown said...

//யாசகம் கேட்கிற சிறுவனாகவே மாறிப்போகிற சமியாடி சன்னாசிக் கிழவனைப்போல ஆகத்தான் பிடிக்கிறது...//

எனக்கும்...

பா.ராஜாராம் said...

//அப்போது முன்வைத்த காலை பின்வைக்கிற பேடியாகிப் பெருமிதம் கொல்கிறேன்//

ஆர்டினரி தகப்பனாக இருந்து விடுவதில் சில சவுக்கர்யங்கள் உண்டு காமு. மனதளவில், கொள்கை ரீதியாக, பெரிய புரட்டல் இருக்காது.

ஸ்பெசல் :-) தகப்பன்களுக்கு இந்த வலிதான்.

கொல்கிறேன்- பதத்தை விரும்பியேதான் சேர்த்திருப்பீர்கள் எனில்-ஸ்பெசல் அப்பாவிற்கு சல்யூட்!

கொள்கிறேன்- என இருந்தாலும் அழகே! ஆர்டினரி அப்பா, பரிபூர்ண அப்பாவாக பரிணாமம் பெரும் இடம்!

எப்படி பார்த்தாலும் அப்பா அழகு! புரண்டு படுத்தாலும், அப்பா அழகு!

அப்பா மட்டுமே அழகு!

உயிரோடை said...

இதை சார்ந்து இன்னும் கொஞ்சம் எழுதலாம்.

ஈரோடு கதிர் said...

\\புனைவல்ல\\

புனைவாக இருக்கவே முடியாதே!