30.1.09

வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா



இன்று காந்தி நினைவு நாள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்த நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக அணுஷ்டிக்கிறது.

சாத்தூரில் ஒரு ஐந்து சுதந்திரப்போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கத் திட்டமிட்டோம். தேடினோம். 1947 ல் சிறுவர்களாக வாலிபர்களாக இருந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குப்போனவர் ஒருவர் இருப்பதைக் கேள்விப்பட்டு நேற்று அவரைத் தேடிப்போனோம். ஊரின் கடைசியில் அண்ணாநகர் எனும் ஒரு ஒதுக்குப்புறத்தில் அவர் வசிப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் காலை ஏழு மணிக்கு அங்கு போனோம்.


இரு சக்கர வாகனத்தில் நானும் , மாதவராஜும், சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் விஸ்வநாத்தும் முன்னதாக போய்ச்சேர்ந்துவிட்டோம். அந்தப்பகுதியில் நின்று ஒவ்வொரு வீடாக நோட்டம் விட்டோம். பங்களா, காரைவீடு, ஓட்டுவீடு, தொகுப்புவீடு, வாடகைக் குடியிருப்பு இப்படி எல்லா தரப்பு வீடுகளும் இருக்கிறது. நாங்கள் திகைத்து நிற்கிறோம். இரண்டு நிமிடம் கழித்து தடதடவென ப்ரியா கார்த்தி வந்தார் " என்ன நிக்கிறீங்க இதா தியாகி ஜெயராமன் வீடு " என்று காட்டினார். அந்த இடத்தில் பத்து தென்னங் கூரைகள் கிடந்தது. அரிசிச் சாக்கை சுற்றிக்கட்டிய நான்கு கம்புதான் கதவு. உட்கார்ந்து தான் உள்ளே நுழைய முடிகிற பழங்கூடு .

எளிமை இல்லை வறுமை.

2 comments:

Anonymous said...

தியாகிகெளெல்லாம் சீரழியவும், கபடநாடகவேஷதாரிகளெல்லாம் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகத்தான் வைத்திருக்கிறது நம் சமுதாயம்.

காமராஜ் said...

அடேயப்பா எவ்வளவு வேகம்...
எப்போது ஊருக்குபோனீர்கள்.


வணக்கம் வடகரை வேலன்