5.10.09

பொதுக்கல்விக் காலத்தின் சரித்திரம் திருப்பி எழுதப்படுகிறது.

( 2006 ஆம் ஆண்டு வெளியான கல்வி கடைச்சரக்கல்ல எனும் எனது தமிழாக்க நூலின் ஒருபகுதி - கல்வியாளர் வீரேந்திர சர்மாவின் ஆய்வறிக்கையை தழுவி எழுதப்பட்டது )


உயர்கல்வியை சேவை வர்த்தகமாக மாற்றுகிற பொது ஒப்பந்தங்களின் கீழ் கொண்டுவர ( WTO ) இப்போது மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. கல்விச்சேவைக்கான கொள்கை மற்றும் விவகாரங்களில் தலையிடும் உரிமையை காட் ஒப்பந்தம் மூலம் நாம் ஏற்கனவே பறிகொடுத்திருக்கிறோம். கல்வியைச் சந்தைக்குள் தள்ளிவிட்டு வெகு நாளாகிறது. உலகம் முழுவதிலுமுள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வியை காட் ஒப்பந்தத்துக்கு விற்கிற நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். உயர்கல்வி விற்பனைக்கு வந்தால் இந்தியாவிலுள்ள கல்விக் கட்டமைப்பு சீரழிவதோடு கட்டுக் கட்டாகப் பணம் வைத்திருக்கிறவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் நுழயமுடியும் எனும் நிலைமை உருவாகும். கல்வி மானியத்தைப் பாதியாகச் சுருக்குவதற்கும், உயர்கல்வியிலுள்ள அரசின் பொறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவதற்கும் ஆதரவாக அரசு அறிக்கைகளையும், கட்டுக்கதைகளையும் இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறது.


உயர் கல்விக்கான மொத்தச்செலவில் 25 முதல் 30 சதவீதத்தை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்கிற திட்டமும் அரசின் கைவசம் இருக்கிறது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் கேட்கிற நிறுவனங்களுக்கு சுயநிதிப்பிரிவில் மட்டுமே ஒப்புதல் வழங்கவேண்டும் என்கிற உற்திப்பாடும் அரசு மற்றும் பகமாகு வின் கொள்கைமுடிவுகளில் ஒன்றாகும். இப்படியாக அரசு உயர்கல்விமீதான தனது தார்மீகங்களை உதறிவிட்டு, தனியார் துறைக்குத் தீனிபோடுகிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், சந்தைக்கனுப்புகிற வேலை ஆரம்பமாகவில்லை என்கிற பலரின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத அறியாமையின் வெளிப்பாடாகும். ஏனெனில் புதிய ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறை நியமனத்தை ஊக்குவிப்பதன் மூலம் கல்வியை விற்பதற்கான காபந்து கொள்கைக்கு அப்போதே அடிப்படை அமைத்தாகிவிட்டது.
தேசிய அறிவை மேம்படுத்தவும், அதற்கான அறிவியல் ஞானிகளின் சர்வதேசத் தொடர்புகளை, உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், மேலதிக தேசிய வளர்ச்சிக்கான திறமைகளை மேம்படுத்துவதற்கும் நமக்கு இப்போதிருக்கும் பொதுக்கல்வி முறையைத்தவிர வேறு கதியே இல்லை. கல்வி வியாபாராமாகும்போது, நிறுவணம், ஆசிரியர், பாடத்திட்டம் எல்லாமே தனிநபர் சார்ந்த வியாபாரமாக மட்டுமே மாறும். அங்கே லாபம் மட்டுமே லட்சியப்படுத்தப்பட்டு தேசியம் அலட்சியப்படுத்தப்படும். எனவே தேசத்தின் வளத்திற்கான ஆதாரம் கல்வி, அதை தனியாருக்கு அடகுவைக்க அனுமதிக்க முடியாது.


தேசநலனில் அக்கறையுள்ள ஒரு உண்மையான குடிமகன், இந்த தேசத்தின் கல்வி மற்றும் சுகாதரச் சேவையை பொதுப் பட்டியலிலிருந்து அகற்றத்துடிக்கிற அரசின் முயற்சியையும், எல்லா பிரச்சினைகளுக்கும் தனியார் துறைதான் தீர்வு என்கிற மூடக் கொள்கைக்கும் எதிராகச் சிந்திக்கவும், பயணப்படவுமான ஒரு அவசியம் இருக்கிறது. தவறுகிற பட்சத்தில் எல்லாவற்றுக்கும் வளர்ந்த நாடுகளிடம் கையேந்துகிற அவல நிலை உருவாகும். நமது அத்தியாவசியத் தேவைக்கும், தரமான மனித வளத்திற்கும் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்கம் வந்துசேரும். எதிர்காலம் எத்தியோப்பிய வடிவில் நமக்கு சூனியப்பட்டுப் போகும். எனவே நமது சந்ததிகளின் கல்வியைச் சந்தைக்குள் தேடுகிற அவலத்துக்கு எதிராகக் குரலெழுப்புகிற சமூகக் கடமை நமக்கு முன்னே காத்துக்கிடக்கிறது.


வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது,கள்வர்களால் கொள்ளை போகாது.கடைத் தெருவில் விற்காது.என்று எழுதிவைத்த ஓலைச்சுவடி மக்கிப்போனாலும், அந்தக் கிழவியின் பேராசை மட்டும் நூற்றாண்டுகள் கடந்தும் காற்றில் கலந்து அலைந்து கொண்டேயிருக்கிறது.உலகமயம் என்ற ஒற்றைச்சொல், விலைமதிப்பற்ற சமூக ஞாயங்களைச் சந்தைக்கனுப்பி விலைபேசுகிறது. வழிபாட்டுக்குரியவர் வரிசையில் இருந்த ஆசிரியன் இன்று படிக்கல்லும் தராசுமாக பசையுள்ள பைதேடி அலைகிறான். அன்னசத்திரம் ஆயிரம் நாட்டுவதும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதுமான அரசின் கடமை காட்டால் பறிபோகிறது. இந்தியாவில் அந்தணர்களுக்கும், அரசர்களுக்கும், மதியூக மந்திரிகளுக்கு மட்டும் என்று அடைத்து வைக்கப்பட்டிருந்த குருகுலக் கல்வியை மீட்டெடுத்த பொதுக்கல்விக் காலத்தின் சரித்திரம் திருப்பி எழுதப்படுகிறது.


நாம்வராது வந்த அந்த மாமணியைத்தோற்போமோ ?

18 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

கொஞ்சம் நிறுத்தி, யோசிக்க வைத்த தலைப்பு.தலைப்பு சரி!

ஆஹா வடைபோச்சேன்னு மட்டும் கூவத் தெரிந்த பதிவுலகில், மாற்று யோசனைகளை முன்வைத்திருந்தால் அது ஒரு பொருள் பொதிந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடும்!

காமராஜ் said...

ஆமாம் திரு கிருஷ்ணமூர்த்தி. பொதுக்கல்வி, பொதுத்துறை எல்லாம் சீரமைக்கப்பட்டே ஆகவேண்டும். அதற்கு குறைந்த பட்ச
அக்கறை வேண்டும். பாகிஸ்தானியர்மேலே காட்டும் துவேசம்தான் தேசப்பற்று என்று எண்ணுகிற எம் சோதரர். ஒரு துளி அக்கறையாவது பொதுச் சொத்துக்களின் மேல்காட்டினாலே போதும். அதுவே தேசப்பற்று என்று சொல்லலாம்.

மாதவராஜ் said...

தோற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த பிரக்ஞையையாவது முடிந்தவரையில் மூட்ட வேண்டியிருக்கிறதே! அவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி தோழனே!

ஆ.ஞானசேகரன் said...

//இந்தியாவில் அந்தணர்களுக்கும், அரசர்களுக்கும், மதியூக மந்திரிகளுக்கு மட்டும் என்று அடைத்து வைக்கப்பட்டிருந்த குருகுலக் கல்வியை மீட்டெடுத்த பொதுக்கல்விக் காலத்தின் சரித்திரம் திருப்பி எழுதப்படுகிறது.//

ஆம் யோசிக்க வேண்டிய நல்ல இடுக்கை. நாம் எதையோ தொலைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா

காமராஜ் said...

வா மாது. பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள் என்று சொன்னாயே.
அதன் எதிர்ப்பதம் தான் இதுவா?

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன். நன்றி

ஏற்கனனே லட்சக்கானவர்கள் Bed முடித்துக் காத்துக்கிடக்க
அரசு இப்போது bed கல்லூரிகளுக்கு அள்ளி அள்ளி உரிமம் வழங்குக்கிறது அரசு.
குறைந்த பட்சம் 50000 ரூபாய் மூட்டை கட்டிக்கொண்டு அங்கேயும் அலைகிறது
மாணவர் சமூகம். குறைந்த பட்சக்கேள்விகள் கூட மழுங்கடிக்கப்பட்டுப்போனது.

ஆரூரன் விசுவநாதன் said...

கல்வியை கடவுளாக்கி, உண்டியல் வைத்து வசூல் செய்து, வயிறு வளர்க்கும் கூட்டத்திற்கு இதெல்லாம் புரியாது தோழர்....

தேசமாவது, ..வெங்காயமாவது...

வெறுத்துப்போகிறது தோழா, இயலாமையும்,கோபமும் பல்கி, பெருகி....கடைசியில் வெறுப்புணர்ச்சிதான் மிஞ்சுகிறது.

ஈரோடு கதிர் said...

கல்வி என்பது அறிதலுக்காக என்பதாக இல்லாமல் அந்தஸ்துக்காவும், பணம் ஈட்டுவதற்கான தகுதியாகவும் மட்டும் போன காலகட்த்தில் இது முழுக்க முழுக்க வியாபாரமாக மட்டுமே இருக்க முடியும்

Unknown said...

கோடிஸ்வரர்களாக இருந்தாலும் அவர்கள் குறிப்பிட்ட சாதிகளில் பிறந்திருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு, கல்வியில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை-இட ஒதுக்கீடு என்று போராடுகிறவர்கள் இடதுசாரிகள்.இட ஒதுக்கீட்ட்டின் கீழ் வராத சமூகங்களில் உள்ள ஏழைகள்
பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
அவர்களின் சமூக அக்கறை என்பது
அனைத்துப் பிரிவினரின் நலம்
குறித்த அக்கறை அல்ல.

பொதுக்கல்வி தேவை, அரசு கல்விக்காக இன்னும் அதிகம்
செலவழிக்க வேண்டும்.ஆனால்
இவை மட்டும் போதாது. தனியாருக்கும் உயர்கல்வியில்
இடம் தர வேண்டும்.அதை முறையாக ஒழுங்கு படுத்த வேண்டும்.
தரமிக்க வெளிநாட்டு பல்கலைகழகங்கள்
இங்கு வர வேண்டும்.

அரசு மட்டுமே
என்ற அணுகுமுறையும், எல்லாமே சந்தைச் சக்திகள் வசம் என்ற அணுகுமுறையும் - இரண்டுமே
தவிர்க்கப்பட வேண்டும்.
இடதுசாரிகளின் குறுகிய கண்ணோட்டம் தீர்வினைத்
தராது.

க.பாலாசி said...

//எனவே நமது சந்ததிகளின் கல்வியைச் சந்தைக்குள் தேடுகிற அவலத்துக்கு எதிராகக் குரலெழுப்புகிற சமூகக் கடமை நமக்கு முன்னே காத்துக்கிடக்கிறது.//

இதை அறிந்துகொள்ள வேண்டிய மனிதன்தான் அறியாமையில் மூழ்கி கிடக்கிறான்.

//வெள்ளத்தால் அழியாது, வெந்தனழால் வேகாது,கள்வர்களால் கொள்ளை போகாது.கடைத் தெருவில் விற்காது.என்று எழுதிவைத்த ஓலைச்சுவடி மக்கிப்போனாலும், அந்தக் கிழவியின் பேராசை மட்டும் நூற்றாண்டுகள் கடந்தும் காற்றில் கலந்து அலைந்து கொண்டேயிருக்கிறது//

உண்மைதான் அன்பரே...

இக்காலத்தில் தேவையான சிந்தனைப்பகிர்வு....

ரவி said...

நல்ல மொழிபெயர்ப்பு !!!!

யோசிக்க வைக்கறீங்க.......

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி! நல்ல சிந்தனைகள்!!

//வழிபாட்டுக்குரியவர் வரிசையில் இருந்த ஆசிரியன் இன்று படிக்கல்லும் தராசுமாக பசையுள்ள பைதேடி அலைகிறான்//

:((

காமராஜ் said...

வாருங்கள் ஆரூரான். கொஞ்சம் யோசித்தால் ஆயாசமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.

காமராஜ் said...

சரியாகச்சொன்னீர்கள் கதிர். இந்தக்கல்வியில், செயல்வழிக்கற்றல் ஆரம்பித்தால் எதிரும் புதிருமான வாதங்கள் வருது.
சமச்சீர் என்றாலும் அப்படியே. நாம் ஈரத்துக்குள்ளே கிடக்க ஆசைப்படுகிறோம்.

காமராஜ் said...

பெரியார் விமர்சகரே வணக்கம்.
உங்கள் வாதம் புரிகிறது பாவம் அந்த இடதுசாரிகளை விட்டுவிடுங்கள். நீங்கள் பிறந்தவுடன் வெளிநாடு போய்விட்டீர்களா.
இங்கே என்ன நடக்கிறதென்று தெரியுமா ? . ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்ப்பபடாத இடங்கள் இருப்பதை அறியாமல் சொல்லவேண்டாம். அதுவெல்லாம் பழைய்ய காலம். இப்போது எல்லா இடங்களிலும் குறைந்த கூலிக்கு ஆசிரியராகப்போய்
காத்திருப்போர், அவுட்சோர்சிங், இதெல்லாம் பெருகிக்கொண்டு வருகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக பொதுத்துறையில் ஆள் எடுப்பே நடக்கவில்லை. இருந்தாலும் உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. கடைசியாக ஆரம்பித்த மருவருடமே நம்பர் டூ கணக்குகள் ஆரம்பித்து கொட்டுகிறார்கள் தனியார் கல்வி நிறுவணங்கள். நான் கல்லூரியில் சேரும் போது வெறும் ஐம்பது ரூபாய் தான் கட்டினேன்.

காமராஜ் said...

நன்றி பாலாஜி.

காமராஜ் said...

ஆஹா வாருங்கள் நன்றி ரவி. வலை முகவரி மாற்றியதிலிருந்து தொடர்பில்லாமல் போனது. நலமா?

காமராஜ் said...

ரொம்ப நன்றி சந்தன முல்லை.