30.10.09

வினோத ஒலிகளின் வரைபடம்


தொலைக்காட்சியும்,அலைபேசியும்,

கணினிப் பெட்டியும் கைவராத காலத்து

மொட்டை மாடிகளின்

மின்காந்த அலைகளிடறா நாட்கள்.


எட்டாவது வீட்டின் மொட்டைமாடியிலும்

காக்கைகுருவிகள் விரட்டவந்தாள்

கண்காந்த அலைகள் ஊடறுத்தபோதுகாய்ந்திருந்த

தானியங்களில் மீளப் பாவிக்கொண்டிருந்தது.ஈரம்


தனை நோக்கி அழைக்க மொட்டை மாடியில்அநேக

காரணங்கள் காய்ந்து கொண்டிருந்தது

ஜெயகாந்தனின்ஆத்மாநாமும், திஜாவின் பாபுவும்

எலிப்புளுக்கையாய் கிடந்தார்கள்


இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்

அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்

பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்

மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.

20 comments:

உயிரோடை said...

//கண்காந்த அலைகள்//

அழ‌கான‌ சொல்லாட‌ல்.

ந‌ல்ல‌ க‌விதை வாழ்த்துக‌ள்.

காமராஜ் said...

நன்றி லாவண்யா.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எழுதுவதில் சுகம் இல்லை, இனிமேல். தொண்டைக்குள் முள்ளை மாட்டி சிக்கிக் கொண்டது பேணாவும், மனசும். ஏன் எழுத வேண்டும் எழுதாத விஷயங்களில் கவிதை கொட்டிக் கிடக்கையில், ஏன் எழுத வேண்டும், எழுத தகுதியுள்ளவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது. என் பேணா முனைமழுங்கி நகர மறுக்கிறது உலர்ந்த மையை ஒன்று திரட்டி இனி சிற்பம் செய்யப்போகிறேன்.

அருமையான கவிதை காமராஜ்!

அன்புடன்
ராகவன்

புலவன் புலிகேசி said...

கவிதை நன்றாக இருக்கிறது..

லெமூரியன்... said...

இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்

அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்

பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்

மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.//

சில விஷயங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது....ஆனால் அவ்வ்ணர்வு மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்...இப்போதும் அப்படியே....இவ்வரிகளை படிக்கும் போது..! அருமை தோழர்.! :-)

ஆ.ஞானசேகரன் said...

சிறப்பாக இருக்கின்றது..

காமராஜ் said...

வணக்கம் ராகவன்.
கருத்துக்கு நன்றி.

மேலை உள்ளது கவிதையா, நிஜமா?
அலைபேசியில் வருகிறேன்.

காமராஜ் said...

நன்றி புலவன் புலிகேசி.

காமராஜ் said...

நன்றி லெமூரியன்.

காமராஜ் said...

நன்றி என் தோழா..

க.பாலாசி said...

கவிதைதையை மிக ரசித்தேன். வேறெப்படி புகழ்வதென்று தெரியவில்லை.

மண்குதிரை said...

கண்காந்த அலைகள்

nice sir....

velji said...

கீழ்தளங்கள் கூட அறியாத, பெயர்தெரியாத பறவைகளின் வினோத ஒலிகள்.
நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள்.ஒலியை கேட்க இயலுகிறது.

என் தளத்தில் ஒரு கவிதை காத்திருக்கிறது,நண்பரே!

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க கவிதை!

காமராஜ் said...

நன்றி பாலாஜி,

காமராஜ் said...

நன்றி மண்குதிரை

காமராஜ் said...

நன்றி வேல்ஜி

காமராஜ் said...

நன்றி சந்தனமுல்லை

Unknown said...

//இருப்பை அறுத்துப் புலம் பெயர்ந்த நாளின்

அங்கேதான் கண்ணீரையும் காயவிட்டாள்

பெயரறியாப் பறவையின் மொழியெல்லாம்

மொட்டை மாடிவரைபடமாகும் விநோத நினவாக.//

மாமா!சோனியாவை பார்க்க கிளம்பிவிட்டேன்.....

காமராஜ் said...

சரி மாப்ளே...
ரொம்ப நேரம் சிரித்தேன்.