13.10.09

நியான் விளக்குகள் ஒளிரும் பகல்.

நாளையோடு காயலான் கடைக்கு போறேன்
ஆளைவிட்டால் போதும் என நொண்டி நொண்டிப்
பனிமனை அடையும் நகரப்பேருந்துகள்.


உருட்டிவைத்த புரோட்டா மாவு
கனத்துக்கிடக்க பசித்த முகம் தேடிக் காத்திருக்கும்
அந்திக்கடை தொழிலாளியான முதலாளி.


முழுக்க இரவே நீடிக்காதா ஏக்கம்நிறை
பசிக்கிறக்கத்தில் பூட்டியகடையின்
படியில் உறங்கும் பிச்சைக்காரன்.


தொலைதூரப் பேருந்திலிருந்து இறங்கி
மலங்க மலங்க விழிக்கும்
அலுவலர் குடியிருப்பு பெண்.


சிகரெட் பற்றவைக்கமுடியாத போதையில்
பெட்டி கடைப் பெண்ணைப்
பற்றவைக்க துடிக்கும் குடிமகன்.


இரவு, பகல், குடிமகன் குடியாமகன் பேதமின்றிப்
பத்துவருடப்பொட்டிக்கடை பொழப்பில்
தூரப்போனது நானமும் பயமும் இரவும்.

9 comments:

ISR Selvakumar said...

//தூரப்போனது நாணமும் பயமும் இரவும்.//

வாடிய வயதையும், தேடிய அனுபவத்தையும் ஒரே வரியில் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//இரவு, பகல், குடிமகன் குடியாமகன் பேதமின்றிப்
பத்துவருடப்பொட்டிக்கடை பொழப்பில்
தூரப்போனது நானமும் பயமும் இரவும்.//


எதாற்தமான வரிகளில் கவிதை வடித்துருப்பது மேலும் அழகு...

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க!!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மிக இயல்பான கவிதை. ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலை. வார்த்தைத் பிரயோகங்கள் சரியாக பொருந்தவில்லையோ, அல்லது காட்சிப்படுத்திய விதம் சரியில்லையோ என்று தோன்றுகிறது. இருள் வெளிச்சம் அளவு இதில் ஒரு வீச்சு இல்லை, இதை இன்னும் அழகாக படம் பிடித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். மிகப்பெரிய வனைஞன் எனக்கு நீங்கள், என் பார்வை பிசகாய் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு இந்த கவிதை எப்படி இருக்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள்.

உங்களுடன் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. என்னுடைய செல் ஃபோன் நம்பர் 9789450984. முடிந்தால் உங்கள் நம்பரை அனுப்பவும், நான் அழைக்கிறேன்.

அன்புடன்,
ராகவன்

ஆரூரன் விசுவநாதன் said...

இயல்பான வரிகள்....இனிமை.....

க.பாலாசி said...

//முழுக்க இரவே நீடிக்காதா ஏக்கம்நிறை
பசிக்கிறக்கத்தில் பூட்டியகடையின்
படியில் உறங்கும் பிச்சைக்காரன்.//

சிந்திக்க வைத்த வரிகள்...

கவிதை யதார்த்தம்.....

ஈரோடு கதிர் said...

மனதை கனக்க வைக்கும் வரிகள்

velji said...

மலங்க மலங்க விழிக்கும் பெண் இருக்கிறாள்.வீட்டுக்குள் வளர்ந்த குரோட்டன்ஸ் போல.பெட்டிக்கடை பெண் மழை,வெயில் எல்லாம் பார்த்த மரமாய் இருக்கிறாள்.

நல்லாயிருக்கு!

உயிரோடை said...

மிக நல்ல கவிதை. தலைப்பே கவிதையின் கரு சொல்லும் மற்றுமொர் கவிதை. அருமை.