30.3.10

நாம் என்னசெய்யப் போகிறோம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படும் பொதுமக்கள் காலிக்  குடங்களுடன்  முற்றுகை.  இப்படியொரு செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. ஆனால் அது கட்டாயம் இருட்டடிக் கப்பட்டு விடும். பிரதான பத்திரிகைகள்,பிரதான காட்சி ஊடகங்கள் தங்களுக்கான செய்திகளின் தேடலை நித்யானந்தாக்களிடமும் நடிகைகளிடமும் மையப்படுத்தியிருக்கும்.

அதே வாடிப்பட்டியில் உள்ள சிறியதும் பெரியதுமான பெட்டிக்கடைதொடங்கி உணவு விடுதிவரையில் பெப்சி.கொக்கக்கோலா நிறுவணங்களின் பாட்டில்கள் லாரி லாரியாய் வந்திங்குகிறது.வீட்டு வாசலில் ஒரு கேன் முப்பது ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்கிறது.உள்நாட்டுத் தனியார்களுக்கும்,வெளிநாட்டுத் தனியார்களுக்கும், கிடைக்கும் இந்த தண்ணீர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போவது தான் சூட்சுமம்.

பெப்சி நிறுவணத்தின் வியாபார மேலாளர் தங்கள் நிறுவணத்துக்கு போட்டியாக இந்திய நாட்டின் நீர்நிலைகளைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.அந்த இறுமாப்புப் பேட்டியை நமது வீரஞ்செறிந்த மக்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகிறது. காற்றும்,வானும், கடலும்,நீரும் பொதுவிலில்லை என்பதை மெல்ல மெல்ல சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரகிவிட்டது.வல்லான் பொருள் குவிக்கும் சூத்திரங்கள் விளம்பர வெளிச்சத்தில் களைகட்டுகிறது.நீருக்காகப் போர்மூளுமாம்.அப்போது கூட நமக்கு தொலைக்காட்சிகள் வழியே மானாடும் மயிலாடும்.

25 comments:

Romeoboy said...

அண்ணே உங்கள் வரிகள் எல்லாம் உண்மையே. இந்த அரசியல் """வியாதிகளால்""" தண்ணி திண்டததில் நாம் எல்லாம் கண்டிப்பாக சிக்கபோறோம்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல பதிவு... பெப்சி, கொக்க கோலா, இவர்களின் தண்ணீர் செலவையும், நமது அரசாங்கத்தின் தவறுகளால் இழக்கும் நீர்நிலைகளின் குறைந்து போன நீர்த்திறனும், பொதுமக்களின் பொறுப்பற்ற தனத்தினாலும்
எவ்வளவு இழக்கிறோம் என்பதை கணக்கில் எடுத்தால், அந்நிய சக்திகளின் உறிஞ்சித்தனம் பெரிதாய் தெரியாது...
நமக்கு பிறரை குற்றம் சொல்லியே பழகிவிட்டது...
நான் வீண் செய்கிறேன் தண்ணீரை, நீங்கள் வீண் செய்கிறீர்கள் தண்ணீரை இதன் மொத்தம் சமுத்திரங்கள் காமராஜ்...
எனக்கு புள்ளி விபரங்கள் ஞாபகம் இல்லை, ஆனாலும் இது போன்ற சமச்சீரற்ற விஷயங்களை எப்போதும் கருத்தில் கொண்டு காலிக்குடங்களை காற்றை கொண்டு நிரப்புகிறோம்.
காமராஜ் நிறைய யோசனைகளை சொல்லுங்கள், எங்களுக்கு பொது மக்களுக்கு, தீவிரமான ஒரு இயக்கத்தை ஆரம்பியுங்கள்... கூச்சல், கூக்குரலும் மட்டும் இல்லாமல், காதில் சேதி சொல்லுங்கள் எங்கள் எல்லோருக்கும். கேட்க தயாராய் இருக்கிறோம்.

அன்புடன்
ராகவன்

Vidhoosh said...

லஞ்சம்... இருக்கும் வரை இன்னும் மோசமாகும் நம் நிலைமை. நுகர்வோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் "நம்பிக்கை"யை மட்டுமே விலை கொடுத்து வாங்குகிறோம். ஐ.எஸ்.ஒ என்று எத்தனை சான்றிதழ்கள் இருந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த நீரும் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. அதுவும், கேன் தண்ணீர் கையாளப்படும் முறைகளையும், அந்த மினிடார் வேன் ஓட்டுனரும் உதவியாளர்களும் அதன் மீதே படுத்து தூங்குவதையும் கண்டால்......

சாதாரணத் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருகுங்கள் என்றும் அரசாங்கம் கூவி கொண்டிருக்கிறது.

மினரல் வாட்டர் வாங்குவது சோம்பேறித்தனமா, மெத்தனமா, இல்லை பணத்தை கொடுத்து தண்ணீரையும் பெற்றுக் கொள்ளும் மனப்போக்குக்கு பழகிக் கொண்டுவிட்டோமா?

ஈரோடு கதிர் said...

//எங்களுக்கு பொது மக்களுக்கு, தீவிரமான ஒரு இயக்கத்தை ஆரம்பியுங்கள்...//

இதுதான் சரியான தீர்வு...

எண்ணம் பகிருங்கள்...
நாமே துவங்குவோம்...

க.பாலாசி said...

//நமது வீரஞ்செறிந்த மக்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகிறது. //

கண்டிப்பாக இது நமது தவறே... எத்தனைமுறை பேசித்தீர்த்தாலும் வீதியில் நின்று போராடாவிட்டால் குந்த குச்சியும், குடிக்கநீரும் இல்லாமற்போகும் நிலை எனக்குமுண்டு....

அகல்விளக்கு said...

//பெப்சி நிறுவணத்தின் வியாபார மேலாளர் தங்கள் நிறுவணத்துக்கு போட்டியாக இந்திய நாட்டின் நீர்நிலைகளைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.அந்த இறுமாப்புப் பேட்டியை நமது வீரஞ்செறிந்த மக்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள்//

அவர்களுக்கு தேவையான தண்ணி?!! கிடைத்தால் மட்டும் அவர்களுக்கு போதும்...
:(

Radhakrishnan said...

:( வருத்தம் அளிக்கிறது.

vasan said...

அன்புள்ள‌ காமராஜ்,

வைகை ந‌தி நீர் ப‌ற்றி திரு ஆர் பி ராஜ‌நாய‌க‌ம் அவ‌ர‌து பிளாக்கில் முன்பு எழுதிய‌தை
உங்க‌ள் ப‌திவின் தாக்க‌த்தில் ப‌கிர்ந்து கொள்கிறேன். ந‌தியின் ஒருபுற‌ம் வாழும் ம‌க்க‌ளுக்காய்,
அப்போதைய‌ ச‌ட்ட‌ம‌ன்ற உறுப்பின‌ர் முய‌ன்ற‌ போது,ம‌றுபுற‌த்தின‌ர் அருவாள்க‌ளை தூக்கிதால்,
தாக‌த்திற்கு கூட‌ அவ‌ரால் த‌ண்ணீர் த‌ர‌ இய‌ல‌வில்லை.
ஆனால், ஒரு வ‌ள்ள‌ல் இன்னோரு வ‌ள்ள்லுக்கு (எம்ஜீயார்/மாகாலிங்க‌ம்) இனாமாகா கோல்ட் ஸ்பாட் க‌ம்ப‌னி தண்ணீரை ப‌ம்பு செய்து கொள்ள‌ அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌தாம். பின்னாளில் அது அந்த‌ உரிமையை கோக் க‌ம்ப‌னிக்கு விற்க்க‌ப்ப‌ட்ட‌தாய் எழுதியிருந்த‌ர். ப‌க்க‌த்து ஊர்கார‌னுக்கு தாக‌ம் தீர்க்காத‌ வைகை த‌ண்ணீர் யார் யார‌து பாவ‌ங்க‌ளையும், புண்ணிய‌ங்க‌ளையும் க‌ழுவிக் கொண்டு க‌றை க‌ண்டுள்ள‌து.

யார் வீட்டு வெள்ளாண்மையே, அழிந்தால் ந‌ம‌க்கு என்ன‌? என்ற ம‌னோபாவ‌த்தால், த‌வ‌று க‌ண்டு
சீற்ற‌ம் கொள்ளாத‌தால், அவ‌ர‌வ‌ர் கொல்ல‌ப்புர‌ங்க‌ள் கொள்ளை போகும் நிலை வ‌ந்திருக்கிற‌து.

ந‌ம‌து வ‌ரும் த‌லைமுறைக‌ளின், ந‌ல்ல‌ வ‌ள‌ங்க‌ளுக்காய் உழைக்கும் போதே, ந‌ல‌ங்க‌ளுக்காகவும்
போர் குர‌ல் எழுப்ப‌ப்ப‌ட‌ வேண்டும்.

ரோகிணிசிவா said...

ஈரோடு கதிர் said...
//எங்களுக்கு பொது மக்களுக்கு, தீவிரமான ஒரு இயக்கத்தை ஆரம்பியுங்கள்...//
இதுதான் சரியான தீர்வு...
எண்ணம் பகிருங்கள்...
நாமே துவங்குவோம்...
I agree with u kathir !!!!

அன்புடன் அருணா said...

எத்தனை தடவை கேட்கப் பட்டாலும்...மீண்டும் மீண்டும் முன் வந்து நிற்கும் இந்தக் கேள்வியை எத்தனை நாளுக்குத்தான் வெறுமே கேட்டுக் கொன்டேயிருக்கப் போகிறோம் காமராஜ்????

சந்தனமுல்லை said...

/து. காற்றும்,வானும், கடலும்,நீரும் பொதுவிலில்லை என்பதை மெல்ல மெல்ல சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரகிவிட்டது./

:-( இதே மெத்தனம்தான் நம்மை எந்த தூரத்துக்குக் கொண்டு வந்து விடப் போகிறதோ தெரியவில்லை...

அருமையான இடுகை அண்ணா!

காமராஜ் said...

ஆமாம் ரோமியோ நினைக்கவே பயம் வருது.

காமராஜ் said...

ராகவன்...
தண்ணீர் பஞ்சமானால் அரசென்ன செய்யும்,நாமென்ன செய்ய முடியும் என்கிற விதிவச வார்த்தைகளை மறுத்து பேச ஆரம்பிப்பதே நல்ல துவக்கம் தான்.

தண்ணீர் சிக்கனம் குரித்தும் பேசவேண்டும்,கோல்ப் மைதானங்களுக்கு இறைக்கப்படும் டாம்பீகம் குறித்தும் பேச வேண்டும்.

காமராஜ் said...

அருமை வித்யா.
நாப்பது வயசுவரைக்கும் நாய்படாத பாடு அப்றம் சரியாப்போகுமா இல்ல பழகிப்போகும். இதுதான் நிலை.

காமராஜ் said...

ஆளுக்கு ஒரு கைபிடித்தால்
மலையையும் நகட்டலாம் இல்லையா கதிர் ?.

காமராஜ் said...

வாங்க பாலாஜி..
அது வரும் வந்தே தீரும்.

காமராஜ் said...

ஆமாம் அகல்விளக்கு.
அதையும் எவ்வளவு காலம் என்று பார்ப்போம். மாறும்.

காமராஜ் said...

வருத்தங்களை ஒன்று குவிப்போம் ராதா.

காமராஜ் said...

வாங்க வாசன்.
கூடுதல் தகவல் தந்து இந்த பதிவை
இன்னும் விரிவாகியிருக்கிறீர்கள்.

காமராஜ் said...

பேசலாம்,பேசிபேசி திரட்டலாம் வாருங்கள் ரோகிணிசிவா.

காமராஜ் said...

பேசுவோம் அருணா மாறும்.

காமராஜ் said...

நல்ல வார்த்தை முல்லை .

சீமான்கனி said...

மிகவும் வேதனைக்குரிய விஷயம் அண்ணே...
எங்கும் அரசியல் அரக்கர்கள்...பிடியில் நாம்...

காமராஜ் said...

வாங்க சீமான்.
இன்னைக்கு பாத்தீங்களா
84 சதவீத ஓட்டுப்பதிவாம்.
வெற்றியாம்.அது செய்தியாம்.எப்டிருக்கு.

veligalukkuappaal said...

அன்புக்குரிய காமராஜ்,
1) தற்செயலாக ஒரு செய்தியை நேற்றுத்தான் வாசித்தேன், நீங்களும் கூட வாசித்திருக்கலாம். இங்கே திருவள்ளூர் மாவட்டம் அருகே ஏதோ ஒரு கிராமத்தை பெப்சியோ கோக்கோ தத்து எடுத்திருக்காம்! வேடிக்கையாக இல்லை? பெப்சியும் கொக்கும் ஆடுகிற ஆட்டத்திலும் போடுகிற விளம்பரத்திலும் மயங்கியோ இல்லை விழுந்தோ அந்த தத்து எடுக்கும் விழாவில் மாண்புமிகு எம்.எல்.ஏ, தேசபக்திமிக்க அரசு அதிகாரிகள் எல்லோருமே கலந்து கொண்டார்களாம்! அதாவது மாண்புமிகு எம்.எல்.ஏ, தேசபக்திமிக்க அரசு அதிகாரிகள் எல்லாரையும் கோகோ பெப்சியோ தத்து எடுத்துகிச்சாம்! இதுதான் காமராஜ் நமது மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச ஊழியர்களுக்கும் இந்த சர்வதேச தண்ணீர் கொள்ளையர்கள் பற்றிய புரிதலும் அறிவும். சாமானிய மக்களை குறை சொல்ல முடியுமா?
2) கங்கைகொண்டான் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. இடதுசாரி இயக்கங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மட்டுமே அங்கே இந்த சர்வதேச தண்ணீர் கொள்ளையருக்கு எதிராக இயக்கம் நடத்தினார்கள். கேரளாவில் பிளாச்சிமடாவில் கொக்கோ கோலாவுக்கு எதிராக வருடக்கணக்கில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. இந்தக் கம்பெனி பிளாச்சிமடாவை எந்த அளவுக்கு நாசம் செய்தது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி ஹிந்து பிசினஸ் லைன் செய்தி இது:
Thiruvananthapuram, March 22

A high-level panel of officials handed over to the Kerala Government a report suggesting, among other things, legal steps to recover Rs 216 crore in damages from Hindustan Coca-Cola Beverages for alleged “multi-sectoral” losses inflicted on people and the environment by its bottling plant at Plachimada in Palakkad district.....the 14-member committee also favoured the setting up of a tribunal that the affected people could reach out to for seeking damages for alleged excesses committed by the company during the operation of its plant from 1999 to 2004.

The company was forced to close down operations in the face of sustained opposition from the public.....It quantified the damage suffered by various sectors – agricultural loss at Rs 84.16 crore; pollution of water resources at Rs 62 crore; cost of providing water Rs 20 crore; health damages at Rs 30 crore; and wage loss and opportunity cost as Rs 20 crore.

அதாவது இவர்கள் பிளாச்சிமடாவை நாசம் செய்வார்கள், அதைமறைக்க திருவள்ளூரில் கிராமத்தை தத்துஎடுப்பார்கள், நமது எம்.எல்.ஏ,அரசுஅதிகாரிகள் எல்லோரும் பல்லைஇளித்துக்கொண்டு கலந்துகொள்வார்கள்! சூப்பரோ சூப்பர் அப்பு!
3 ) நுனிநாக்கு இங்க்லீசு, அமெரிக்க விசா, கிரிக்கெட், ஐ.டி (information technology), கோக், பெப்சி, பிட்சா, பல்சர் பைக், ஐ.பி.எல் கிரிகெட் இவை யாவும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்ததாக நமது ஊடகங்களால் திட்டமிட்ட வகையில் சித்தரிக்கப் படுவதன் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் (அல்லது டாலர்) இந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலாளிகளால் வீசி எறியப்படுவது உறுதி. நமது ஆட்சியாளர்களுக்கோ அமெரிக்காவுடன் கேவலப்பட்ட அணு ஒப்பந்தம் செய்துகொள்வதே இன்றைய முக்கிய வேலை.
4 ) (முக்கிய) ரயில்வே ஸ்டேசன்களில் இதே தண்ணீரை சுத்திகரித்து எப்படி நமது அரசாங்கம் மூணு ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் விற்க முடிகின்றது?
5 ) இறுதியாக: இராக்கிலும் ஆப்கானிலும் இன்றைய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பெட்ரோலுக்காக. அடுத்த உலகப்போர் கண்டிப்பாக அமெரிக்காவால் தொடங்கப்படும், அது தண்ணீருக்காக இருக்கும், தாக்குதலின் முதல் இலக்கு இந்தியாவாக இருக்கும். நம் வீட்டு கொல்லையில் இருக்கும் கிணற்றில் அமெரிக்காகாரன் மோட்டார் போட்டு தண்ணீர் உறிஞ்சுவான், நாம் அப்போதும் ஐ.பி.எல். பார்த்துக்கொண்டே கோக்கும் பெப்சியும் குடிப்போமாக. (நீங்க சொல்றது ரொம்பவும் ஜாஸ்தி சார், இப்புடியெல்லாம் பீலா உடாதீங்க என்று சொல்லும் நண்பர்கள் பொலிவியாவின் வரலாற்றைப் படிக்க எல்லாம் வல்ல பாரத்மாதா அருள் புரிவாளாக).
இக்பால்