16.11.10

இது அரசியல் அல்ல, தொடர்தீபாவளி.

மூக்கைப் பொத்திக்கொண்டு
தன் பங்கு கழிவு சேர்க்கும்
கூவத்தின் தீராத நாற்றம்
தேசிய வாசனையானது.

கூவத்திலிருந்து ஒரு குவளை
சாக்கடையை அகற்றிவிட்டு
தேசிய நீரோட்டத்தை
தெளிந்த பன்னீராக்கியதாய்
திருப்திபடும் தேசம் எனது தேசம்

தெற்குக்கரை மோசம் என்று
வடக்குக்கரை வழக்குத்தொடர்கிறது.
வியாதி செய்யும் விந்தை மருத்துவம்
கறையைப்போக்க கறையே நிவாரணி.

இதோ...
உச்சக் கட்ட ஆட்டம் ஆரம்பம்
உனது எனது சுட்டு விரலில் கறைதடவ.

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்
ஐந்து வருடத்தீபாவளி நெருங்குகிறது.

15 comments:

நாகராஜசோழன் MA said...

நண்பரே நாட்டின் இன்றைய நிலைமையை அப்படியே சொல்லிவிட்டீர்கள். (இன்ட்லியில் இணைத்து விட்டேன்)

polurdhayanithi said...

இதோ...
உச்சக் கட்ட ஆட்டம் ஆரம்பம்
உனது எனது சுட்டு விரலில் கறைதடவ.

எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்

parattugal nanpare parattugal
polurdhayanithi

வானம்பாடிகள் said...

ஹி ஹி. இந்த வாட்டி பொங்க வெச்சு பலி போடுவாங்க. புதுத் துணி போட்டு:))

Sethu said...

ஊரார் சொத்து என் சொத்து.
நான் மற்றும் என் குடும்பமே இந்த ஊரார்.
அதனால் "இது அரசியல் அல்ல, தொடர்தீபாவளி."

க.பாலாசி said...

ஹி..ஹி... இந்த சிரிப்புல வயத்தெரிச்சலும் கலந்திருக்கு...

பளிச்சுன்னு இருக்கு...

ஈரோடு கதிர் said...

வரட்டும் வரட்ட்ட்ட்ட்டும்!

அன்புடன் அருணா said...

எந்த நரகாசுரனைக் கொன்று வரப் போகிறது இந்தத் தீபாவளி????

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்த தடவ பீகார நாம் தூக்கி சாப்புடுவோம் ...

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம்ணே....சௌக்கியமா.?இந்த தீபாவளிக்கு கவருக்குள்ள "வெயிட்டா"கொடுக்கப்போராங்கன்னே

தேவன் மாயம் said...

ஹலோ! வணக்கங்க!

விந்தைமனிதன் said...

அக்கினி தகிக்கின்றது!

ஆ.ஞானசேகரன் said...

//எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்
ஐந்து வருடத்தீபாவளி நெருங்குகிறது.//

வணக்கம் நண்பா

அருமை..

இடதுசாரி said...

எல்லாமே கொள்ளிகள் என்று ஒதுங்கி கொள்வது எந்த ஊர் நியாயம் ....
கொள்ளிகளுக்கான கொள்ளியை பற்ற வைப்பது யார் என்பதே கேள்வி...
தேசம் விமர்சனங்களுக்கல்ல.... விடைகளுக்கே காத்திருக்கிறது....

காமராஜ் said...

அன்பினால் என் வலைக்கு வந்து பின்னூட்டமிட்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.

காமராஜ் said...

இடதுசாரி said...

// எல்லாமே கொள்ளிகள் என்று ஒதுங்கி கொள்வது எந்த ஊர் நியாயம் ....
கொள்ளிகளுக்கான கொள்ளியை பற்ற வைப்பது யார் என்பதே கேள்வி...
தேசம் விமர்சனங்களுக்கல்ல.... விடைகளுக்கே காத்திருக்கிறது....//

என் வலைத் தளத்தைக் கண்டுபிடித்து,தயக்கமில்லாமல் வந்து, என்னையும் மதித்து பின்னூட்டமும் இட்ட நண்பர் இடதுசாரியின் பெருந்தண்மைக்கு மிக்க நன்றி.