13.4.09

மானாவாரிச் சிந்தனைகள்

அவர் கவிதையில் இயற்கை விவசாயம் சொன்னவர். இவர் இயற்கை விவசாயத்தைக் கவிதையாய்ச் சொன்னவர். முன்னவர் மு.சுயம்புலிங்கம், பின்னவர் விஞ்ஞானி நம்மாழ்வார். இந்த ரெண்டுபேரும் பசப்பில்லாத மனிதர்கள்.இப்போது சுயம்புலிங்கம் 1990 களில் ஊர்க்கூட்டம் என்கிற ஒரு திரட்டு வெளியிட்டார். எளிய வார்த்தைகளில் கிராமத்து நிஜத்தை சொன்னவர்ஏர்க்காலில் சிக்கி மேலெழும்பி மண் சிரிக்கிற ஒலி தரும் அவர் கவிதைகள். பீ நாறும் வர வேற்ப்போடுதான் கிராமங்கள் விரியும். மனிதர்களின் வறுமையும் ஆட்டுக்கிடையின் வாசத்தையும் சொல்லும் ஏராளமான கவிதைகளில் இரண்டு.
அழிவின் தத்துவம்.

-----------------------


ஆட்டுக் கிடை

வீட்டுக்குப்பை

கொளூஞ்சி ஆவரை

நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த

நெல்லுக்குருசி இருந்தது

ஆரோக்கியம் இருந்தது

இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது

ஆரோக்கியத்தைக் கெடுத்தது

பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம்.
என்னைப் பாதித்தவர்கள்

--------------------------------பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள்
சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள்.பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன்

தன் முழு உடம்பைத் தள்ள

இரும்புபிளேட்டைத்தூக்கும்


தோட்டிகள்.


1 comment:

ச.தமிழ்ச்செல்வன் said...

சுயம்புலிஙம் அசலான கவிஞன்.சிறுகதை எழுதிக்கொண்டிருந்த அவர் கொஞ்ச நாள் கதையை நிறுத்தி கவிதை எழுதலானார்.ஏன் என்றால் கதை எழுதுகிற மொழி இன்னும் சிக்கனமாகிட ஒரு பயிற்சிக்காகக் கவிதை எழுதுகிறேன் என்றார்.என்ன ஒரு தீர்மானம்!

ஏனோ நம்மாழ்வார் இன்றுவரை என்னைக் கவரவில்லை.அவர் பேசும் விசயங்கள் முக்கியமானவை என்றபோதும்.