ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் முதல் முதலாய் நுழைகிற சங்கோஜத்தோடே சென்னை எனக்கு அறிமுகம் ஆகும். கண்ணை மிரட்டுகிற அளவில் பிரதான சாலைகளெங்கும் உயர்ந்து நிற்கிற விளம்பரப்படுதாக்கள். அப்புறம் நியான் விளக்குகளில் விளம்பரம், இப்போது டிஜிட்டல் பேனர்கள். முதன் முதலாய் சென்னை போகும்போது கத்திப்பாராவில் இருந்து சென்னை ஆரம்பித்தது, பிறகு மீனம்பாக்கம், அப்புறம், பல்லாவரம், தாம்பரம், கூடுவஞ்ச்சேரி, ... இப்போது செங்கல்பட்டிலிருந்தே சென்னை ஆரம்பமாகிவிடுகிறது. இந்த முறை சென்னை செல்லும் போது பார்க்கிற இளைஞர்கள் எல்லோருக்கும் மீசையில்லாமல் இருந்தது.மீசை வீரத்தின் அடையாளம் என்றும் அது ஒரு கலாச்சார அடையாளம் என்றும் வாதிடுகிற மூட நம்பிக்கை எனக்கில்லை. விதம் விதமா மீச வச்சோம் வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம் என்கிற கந்தர்வனோடு கைகோர்க்கிற ஆள். ஐந்து நாள் தாடி மொட்டை போட்டதா, முடிவெட்டியதா என்று தெரியாத தலைமுடி. இறுக்கமான மேல்சட்டை, கலர் கண்டுபிடிக்கமுடியாத கால்சராய். இப்படித்தான் பார்க்கிற ஒவ்வொரு இளைய இந்தியாவும் இருந்தது. ஆடை அலங்காரங்கள் மேலோட்ட்மாக காலத்தை உணர்த்துகிற குறியீடுகள். அது இப்போது திரைப்படங்கள் மூலமாகவே கண்டுபிடிக்கப்படுகிறது விஸ்தரிக்கப்படுகிறது. மாம்பழம் ரயில் நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்லுகிற மின்சார வண்டியில் பயணம் செய்தோம். அதுவரை வடிவேல் மாதிரி அவ்வ்வ்வ்வ்வ் என்கிற குரலெடுத்து கத்திக்கொண்டும், மதுரை வட்டார மொழியால் உரையாடிக்கொண்டும் வந்தாகள். எனது கையில் வைத்திருந்த சே குவாரா புத்தகத்தின் அட்டையப் பார்த்துவிட்டு சில இளைஞர்கள் மூளை கசக்கினார்கள், சில இளைஞர்கள், நமக்கெதுக்கு வம்பென்று முகம் திருப்பினார்கள். சிலர் தலைவர் சிகரெட் குடிக்கிற ஸ்டைலே தனியென்று கிண்டலடித்தார்கள். ஒரு பத்து இளைஞர்களிடம் இவர் யார் என்று கேட்டேன். பெரும்பாலான பேருக்குத் தெரியவில்லை. தெரியாதது ஒன்றும் தேசத்துரோகக் குற்றம் இல்லை. இந்தியாவின் மொத்த தொழில் நுட்பக்கல்லூரிகளில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் தமிழகத்தில் இருப்பது ஏன். கல்வி கற்க ஐந்து லட்சம் பத்து லட்சம் தெண்டம் கட்ட வேண்டிய அவசியம் என்ன. என்கிற கேள்விகள் இல்லை. இந்த தேசதத்தில் கல்வியறிவு இல்லாதவர்கள் எத்தனை கோடி, வேலையில்லாத இளைஞர்கள் எத்தனை கோடி. இந்திய இளைஞர்களின் ஐகான் லட்சுமி மிட்டலின் தனிநபர் வருமானம் எவ்வளவு. ஒவ்வொரு இந்தியனின் சராசரி வருமானம் எவ்வளவு என்கிற புள்ளி விபரம் தெரிய வேண்டாம். இவற்றின் சூட்சுமக்கயிறு என்னவெனத் தெரியவேண்டாமா ?. ஆனால் வரலாறு, அரசியல், நாட்டு நடப்பு எதுவும் தெரிந்துகொள்ள அணுமதிக்கப்படாத அந்தச்சமூகத்துக்கு அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு அருகில் அமர்ந்து பியர் குடிக்கிற கனவு சர்வநிச்சயமாக குடியிருக்கிறது. கோடம்பாக்கம் நிறுத்தம் வந்தது. 75 ஆண்டுகளூக்கு மேலாக தமிழகத்து இளைஞர்ளைக் காயடிக்கிற தொழிற்சாலை இங்குதான் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து கத்தினார்கள். |
21.4.09
ஒழுங்குபடுத்தப்படாத சென்னைப் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்லா எழுதியிருக்கீங்க காமராஜ்.
KINDLY write abt the reasons of the present situations and alternatives.
i am expecting more from the blogger to write the conditions of the country.But unfortunately even "left oriented people" are also writing blogs/creating blogs to get back something to their write ups immediately.you may try to change the situation started in the net recently-R.SELVAPRIYAN-CHALAKKUDY
ஏதோ சொல்ல வர்றிங்கன்னு தெரியுது, என்னன்னுதான் தெரியல.
வாருங்கள் ஜ்யோவ்ராம்,
கருத்துக்கு நன்றி
விமலவித்யா உங்கள் ஆலோசனைக்கு
நன்றி
வாருங்கள் வணக்கம் அமர பாரதி
//அந்தச்சமூகத்துக்கு அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு அருகில் அமர்ந்து பியர் குடிக்கிற கனவு சர்வநிச்சயமாக குடியிருக்கிறது//
வரலாறு தெரியாமல் வளர்கிறோம் புதர்களாக! புதர்களாக வளர்ந்து வெள்ளைக்கார மாடுகளுக்கு இரையாகின்றோம்...
//எனது கையில் வைத்திருந்த சே குவாரா புத்தகத்தின் அட்டையப் பார்த்துவிட்டு சில இளைஞர்கள் மூளை கசக்கினார்கள், சில இளைஞர்கள், நமக்கெதுக்கு வம்பென்று முகம் திருப்பினார்கள்//
நம் நாட்டில் சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், பகவத்சிங் போன்ற பல போராளிகளை ஈன்ற நம் நாட்டில் பல இளைஞர்கள் சே வுடைய படத்தை சொக்காயில் ஒட்டிக்கொள்வது நம் நாட்டு போராளிகளை பற்றி தெரியாதா அல்லது எல்லாரும் ஒட்டிக்கொள்கின்றார்களே நாமும் ஒட்டுக்கொள்வோம் என்ற மனநிலையா?
//மாம்பழம் //
என்ன தோழரே நல்ல பசி நேரத்தில் பதிவு எழுதுனீங்களா :)
அது மாம்பலம்.
Post a Comment