24.4.09

மௌனத்தின் பின்னணியில் ஒரு பாடல்
ஆளரவமற்ற
சதுப்புவெளியில்
தொடர்கிறதென் பயணம்.

புல்லாங்குழலிசையை
மறைத்திருக்கும் சட்டைப்பைகளில்
பணமிருந்ததற்கான தடயமில்லை.


குமுகுமுக்கும்

இசையோடுமருண்டோடும்

ஊதாப்பறவையின்சிறகடிக்கிற

தாளம்எனது தனிமையின்

பாடலுக்கும் இசைகிறது.


ஆளரவமற்ற சதுப்புவெளியில்

காற்றோடும், கனவோடும்,

பறவைகளோடும்தொடர்கிறதென் பயணம்.


3 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

இசையோடுமருண்டோடும்
ஊதாப்பறவையின்சிறகடிக்கிற
தாளம்எனது தனிமையின்
பாடலுக்கும் இசைகிறது

வரிகள் நல்லா இருக்குங்க.
கவிதை நன்று.

காமராஜ் said...

வணக்கம், வாருங்கள் முத்துலிங்கம்
தங்களின் கருத்துக்கு நன்றி

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க... இந்த பாடல்!!!!