7.4.09

பான் பராக் எச்சில்








விருதுநகர் சலையும் சாத்தூர் சாலையும் சந்திக்கும் சிவகாசி குறத்தி முடுக்கு. எதிரேதான் நகரின் பெரிய மயானம்.உடல் உழைப்பை வெறுத்து, உடல் மட்டும் விற்றுப் பிழைக்கும் அவளின் இரவும் பகலும். அவளைப்போலவே நிரந்தர வீடும், மனைவியும் இல்லாத வாடிக்கையாளர்களில் ஒருவன் கூலி கொடுக்காமல் தப்பித்தான். ஆடை சரிசெய்கிற நேரத்தில்மயானச்சுவர் ஏறிக்குதித்தான். இது ஒரு அப்பட்டமான ஒப்பந்த மீறல். திட்டமிட்ட ஏமாற்றல் குற்றம். சாப்பாட்டுக்கே வழியில்லா தோருக்கு நீதிபரிபாலனம் செய்ய இன்று வரை எந்த ஏற்பாடும் இல்லை. பசியும் ஏமாற்றமும் விரட்ட பின்னாலே ஓடிவந்து பிடித்துக்கொண்டாள். கொளுத்தவன் தரமாட்டான் பசித்தவன் விடமாட்டான். மோதல் உண்டானது. வீரத்துக்கு இலக்கணம் என்ன? . அது என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். எதிர்கொள்ள முடியாமல் தப்பித்து ஓடினான்ஒரு ஆண். போகும்போது சாதிசொல்லிக் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனான். அவள் பதிலுக்கு '' சண்ட போடும்போது .....ச்சி, படுக்கம்போது மட்டும் ஒசத்தியோ த்தூ " என்று பான்பராக் எச்சிலோடு துப்பினாள்.
அடச்சண்டாளா,
நீசப்பயலே,

என்பன போன்ற பதங்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றித் தொடர்கிறது. இந்தியாவில் உள்ள 1456 க்கும் மேற்பட்ட சாதிப் பிரிவுகளில் இரண்டு இவை. அதன் அர்த்தம் புரியாமல் கையாளுகிற வசன உற்பத்தியாளர்கள், மீதும் இந்த பான்பராக் எச்சில் விழுகிறது என்பதைப் புரிந்து கொள்வார்களாக.

6 comments:

Vishnu - விஷ்ணு said...

// சாப்பாட்டுக்கே வழியில்லா தோருக்கு நீதிபரிபாலனம் செய்ய இன்று வரை எந்த ஏற்பாடும் இல்லை //

செல்வம் இல்லாருக்கு இவ்பூவுலகம் இல்லை என்பதை தான் வள்ளுவர் ஆதிகாலத்திலே அறிந்து சொல்லிவிட்டாரே.
என்னதான் உரக்க கத்தினாலும் சமுதாயத்தின் காதுகளில் என்னமோ விழ போவதில்லை. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல்
சமுதாயம் என்றைக்கு உணர்கிறதோ அன்றைக்கு தான் வெளிச்சம். உரக்க எழுதுங்கள் சமுதாயம் என்றாவது செவி சாய்க்கும்.

குறத்தி முடுக்குக்கு மற்றுமோர் பெயரும் உண்டு அந்த பெயர்தான் பரவலாக அழைக்கபடும் பெயர்.

காமராஜ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்னு.
நீங்கள் சிவகாசியா ?. சந்தோசம்.

அன்புடன் அருணா said...

:((
anbudan aruNaa

காமராஜ் said...

வணக்கம் அருணா மேடம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எப்டியிருக்கீங்க.

subha said...

//சாப்பாட்டுக்கே வழியில்லா தோருக்கு நீதிபரிபாலனம் செய்ய இன்று வரை எந்த ஏற்பாடும் இல்லை.// அற்புதமான கவித்துவ வரிகள். சாப்பாட்டிற்கே இல்லாதவர்களுக்கு நீதி இல்லை சாப்பாட்டிற்கு மட்டும் உள்ளவர்களுக்கும் நீதி இல்லை கொஞ்சம் செலவு செய்பவர்களுக்கு கொஞ்சம் நீதி. நிறையச் செலவு செய்பவர்களுக்கு நிறைய நீதி. நீதியும் சந்தையில் கிடைக்கும் மற்றும் ஒரு சரக்கு.இதுதான் இன்றைய நியதி. எவ்வளவு பெரிய உண்மையை எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்.

மாதவராஜ் said...

காமராஜ்!

வலியோடும், வேகத்தோடும் பதிவு வந்திருக்கிறது.