17.4.09

தனிமை கவ்வும் நினைவுகள்
மீளத்திரும்பாத

நம் அன்பைஎந்தக்கொடுவால்

இறையெனக்கொண்டது.


நினைந்துருக

ஓராயிரம்நல்லவை இருந்தபோதும்

ஒருவார்த்தையிலேயே தொங்குகிறது

வேதாள நினைவுகள்.


அரவமற்ற தொடுதல்களும்

அருகிருந்த மௌனங்களும்

தொலைவிருந்த உரையாடல்களும்

வெடித்துச்சிதறுகிறதென்

தனிமை நிமிடங்களில்.

6 comments:

Karthikeyan G said...

அருமை சார்.. தேவையிலாத வார்த்தைகள் எதுமிலாத மிக அருமையான கவிதையா இருக்கு.

அன்புடன் அருணா said...

//அரவமற்ற தொடுதல்களும்
அருகிருந்த மௌனங்களும்
தொலைவிருந்த உரையாடல்களும்
வெடித்துச்சிதறுகிறதென்
தனிமை நிமிடங்களில்//
ரொம்ப அழகாக அனைவரும் உணர்வதை எழுதிவிட்டீர்கள்......அருமை...அருமை..
அன்புடன் அருணா

காமராஜ் said...

வாருங்கள் கார்த்திகேயன்
ரொம்ப நன்றி.

காமராஜ் said...

அருணா மேடம் தங்கள் வருகைக்கு வணக்கம்.
கருத்துக்கு மிக்க நன்றி.

yathra said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

காமராஜ் said...

வணக்கம் யாத்ரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.