8.4.09

தீரத வன்கொடுமை- தீண்டப்படாத புள்ளிவிபரம்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு தலித் பெண் மனபங்கப்படுத்தப் படுகிறாள். ஒரு நாளைக்கு ஒரு தலித் கொல்லப்படுகிறார்ஒரு ஆண்டில் 22000 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சாக்கடை சுத்தப்படுத்தப் போகையில் விஷவாயு தாக்கி இறப்பதாகவும்,அந்த எண்ணிக்கை சராசரியாகப் போரில் இறக்கும் உயிர்களைவிட அதிகம் எனவும் புள்ளிவிபரம் சொல்லுகிறது.
கொடியன்குளத்தில் உப்புச்சப்பில்லாத காரணங்களூக்காக ஊரைச்சூரையாடியதும், வீரப்பனைத் தேடிப்போனவர்கள் வாச்சாத்தியில் மலைவாழ் மக்களை சூரையாடியதும் பழைய காவல்துறையின் பழம் பெருமை.

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக ஊர்வலம் போனபோது பெண் காவலர் ஒருவர் மீது கைபட்டதாகக் குற்றம் சொல்லி கர்ப்பினிப் பெண், கைக்குழந்தை உட்பட பதினான்கு பேருக்குமேல் அடித்துக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசியது காவல்துறை.

2001 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஊருக்குள் சென்ற மதுரை மாவட்ட துணைக் கண்கானிப்பாளர் மீது செருப்பு வீசிய ஊர்மக்களிடம் சமரசம் பேசிவிட்டுத் திரும்பியது காவல் துறை.

9 comments:

மாசிலா said...

பதிவு பகிர்ந்தமைக்கும் விழிப்புணர்வுக்கும் மிக்க‌ நன்றி.

ரங்குடு said...

மற்ற துறைகளை விட காவல் துறையில் இது போன்ற வன் கொடுமைகளை தைரியமாகச் செய்யலாம். ஏனென்றால் அதிகாரம் அவர்கள் கையில்.

காமராஜ் said...

வணக்கம் மாசிலா
ஒரே சட்டம் இரண்டு அணுகுமுறைகள்.
ஒரே நாடு பல்வேறு பிரிவுகள்.
ஊருக்கு ஊர் உத்தப்புரம் சுவர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

வயது முதிர்ந்த இந்தியனை
முளைத்தும் முளைக்காத சிறுசுகள்
எலேய் என்று கூப்பிடுகிற
பெருமை மிக்க தேசம்
எங்கள் தேசம்.

அன்பும் வணக்கமும் ரெங்குடு

மாதவராஜ் said...

புரிகிறது....
காவல்துறை யார் பக்கம் இருக்கிறது எனப்தை வரலாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது..
உத்தப்புரம் வரை...!

செ.பொ. கோபிநாத் said...

பயனுள்ள பதிவு...

காமராஜ் said...

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாது.

காமராஜ் said...

வாருங்கள் கோபிநாத், வணக்கம்.
பின்னூட்டத்துக்கு நன்றி.

ஹரிகரன் said...

"ஒரு ஆண்டில் 22000 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சாக்கடை சுத்தப்படுத்தப் போகையில் விஷவாயு தாக்கி இறப்பதாகவும்,
அந்த எண்ணிக்கை சராசரியாகப் போரில் இறக்கும் உயிர்களைவிட அதிகம்" அறிவியல் தொழிட்நுட்பம் சந்திரமண்டலத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டாலும் மனிதகழிவை மனிதன் தான் சென்ட்ரல் ஸ்டேசனில் அள்ளிக்கொண்டிருக்கிறான், கேவலம் நாம் பெருமைப் ப்ட்டுக்கொண்டிருக்கிறோம் விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியா முன்னேறிவிட்டட்தென்று. பாதாளசாக்கடையை சுத்தம் செய்ய ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க துப்பு இல்லையா அல்லது அதற்கென்றே இங்கு ஒரு “சாதி” இருப்பதால் தேவைப்படவில்லையோ? பொதுப்புத்தியெல்லாம் முன்னேறிய சாதிகளில் இருந்து தானே வருகிறது.