13.5.09

எதையும் தாண்டும் விஞ்ஞானம்.
அகோரப்பசியில் காத்திருக்கிறது

ஜனநாயகச்சுட்டுவிரல்கள்.


இரண்டே வகைப்பதார்த்தம் தான்

.இலை பரப்பிக்கிடக்கிறது.


ஒன்று விஷம் கலந்த சோறு

சோற்றில் கலந்த விஷம்.


அகம் புறம் இருள் ஒளி,

அகம் புறம் இருள் ஒளி, போனது

நன்மை தீமை ஹீரோ வில்லனனெனும்

நியதிகள் விலகி நிற்க,

போட்டியிலே கெட்டதும் கெட்டதும்.


மாது கோபப்படுவான்,

மாற்று இருக்கிறது எல்லாவற்றிற்கும்

அதுவே விஞ்ஞானம்..

2 comments:

anto said...

மாமா! அண்ணன் கோபப்படுவார் நீங்கள் இப்படி நம்பிக்கையில்லாமல் உண்மையை போட்டு உடைப்பதால்.....

காமராஜ் said...

yes i have broken the truth, but
with lot of hopes