31.5.09

மனிதாபிமானம் குறைந்த போன சர்வதேச சமூகம்
போருக்கு சம்பந்தமில்லாத ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு லட்சக்கனக்கானோர் அகதி முகாமில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் ஏதுமற்ற குப்பைக்கிடங்காக மாறியிருக்கிறது பேயரசின் அகதிகள் முகாம். பெண்களும் குழந்தைகளும் படும் அவஸ்தைகள் பட்டியலிடமுடியாத கொடூரங்கள். அகதிகளுக்காக பிற நாடுகளிலிருந்து குவியும் உதவிகள், லங்கா அரசின் பதுக்கலுக்குள் மறைந்துவிடுகிறது. கொடூரமான இந்தச் செய்திகள் எல்லாமே அரசின் கட்டுப்பட்டை மீறிக் கசிந்தவைகள். இன்னும் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் அணுமதிக்கப்டாத இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறது இலங்கை அரசின் அகதிகள் முகாம்.27.5.2009 அன்று ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த மனித உரிமை மீறலுக்கெதிரான தீர்மானம். ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்ககோரிய மிகசரியான அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்த தீர்மானம் இலங்கைப் பேரழிவு குறித்த ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக்கை. தீர்மானத்துக்கு ஆதரவாக ஒன்பது நாடுகளும், எதிராக 29 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன ஆறு நாடுகள் நடுநிலையில். தீர்மானத்து எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பகிஸ்தான் முக்கியமானவையாகும்.


இதில் அதிர்ச்சி தரக்கூடிய விசயம் கியூபாவும் தீர்மானத்துக்கெதிராக வாக்களித்ததுதான். உலகம் முழுவதும் நடக்கிற விடுதலைக்கான போராட்டக்காரர்களின் நெஞ்சில் ஏற்றுகின்ற மானசீக இலச்சினை சேகுவாரா. அவன்தான் இந்த, நூற்றாண்டுக் கதாநாயகன். உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீ தோழன் என்று சொன்ன சேகுவராவின் உக்கிரம் என்ன ஆனது?. '' வரலாறு என்னை விடுதலை செய்யும் '' என்று சிறைப் பிடிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் முழங்கிய சொற்பழிவு சர்வாதிகாரத்துக்கெதிரான குரலாக காலந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கியூப அரசு ராஜபக்சேயை ஆதரிப்பதால் பாடிஸ்டாவின் ஆவி கெக்கலிட்டுச் சிரிக்கிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து மீள மனிதாபிமானம் உள்ள எல்லோருக்கும் நீண்டகாலம் ஆகும்.

10 comments:

anto said...

மாமா!தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த முக்கியமான மற்றொரு நாடு ரஷ்யா!ஆம்.ஹிட்லரின் இனவெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அதே ரஷ்யாதான் அது.ராவுல் காஸ்ட்ரோவால் எதையும் மறக்க முடியும்.சேவின் தியாகம் உட்பட.ஏனென்றால் அவர் அரசியல் செய்யத்தெரிந்த ஒரு போ.....ளி(லி)

காமராஜ் said...

ஆமாம் ஆண்டோ. நிறைய்ய யோசிக்க வைக்கிற நிகழ்வு இது.
புரட்சி என்பதன் அர்த்தம் என்ன. மனித உயிர்களின் மேல் இந்த
சமூகம் வைத்திருக்கும் அளவு என்ன என்பதெல்லாம் கேள்வியாகவே
இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

மனிதாபிமானம் எல்லாம் செத்து ரொம்ப காலம் ஆகுதுனு நினைக்கின்றேன்.

r.selvakkumar said...

புலிகள் பற்றிய தவறான மற்றும் சரியான புரிதல்களே இந்த சர்வதேச ஆதரவும் எதிர்ப்பும்.

இது இன்னமும் புலிகள் பிரச்சனையாகத்தான் உணரப்படுகிறது.

இது ஒரு இனப்படுகொலை என்பதை உணரவைக்க புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் தவறிவிட்டார்கள்.

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்.
பூமி வெப்பமயமாகிறதென்று விசனப்பட
அமைப்பும் அறிஞர்களும் இருக்கிற இந்த
உலகம் இலங்கை ரத்த மயமானதைக்கண்டுகொள்ளவில்லை.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி செல்வகுமார்.
மிகச்சரியான வார்த்தை. ஆனாலும் பாருங்கள்
என்ன தான் சமாதானம் சொன்னாலும்
மனசு அடங்கவில்லை. ஆயிரக்கணக்கில்
பிணங்கள் குவித்து என்ன கட்டப்போகிறது
மனிதம்.

Mouthayen said...

படிக்க படிக்க மனசு பதைக்கிறது! அந்த ராஜ பக்கி சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் சேர்ந்து இந்திய வுக்கே ஆப்பு வைக்க தான் போறான்!

THANGA MANI said...

துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக்காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும்கொடுமை' என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

காமராஜ் said...

welcome moutheyan, thanksa for yuor visit and comment

காமராஜ் said...

thanks thangamani. its true,
we are helpless.