7.5.09

புலம் பெயர்ந்த படைப்பாளியின் குரல்
ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேலான இனப் பிரச்சினை. ஒருகால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இரண்டு தேசத்துக்கு தீனி போடும் அரசியல். ஈடுகட்ட முடியாத இழப்புகள். கனவிலும் கூட வந்து தொலையும் வெடிகுண்டுச் சத்தம். சொந்த மண்ணை தொலைத்து விட்டு வேற்று நாடுகளில் தஞ்சம் புகுந்த அவலம். இந்தியாவில் ஒரு தலைமுறையே அகதித் தமிழர்களாக தகரக் குடிசைகளில் தாழ்ந்து கிடக்கும் அவலமெனத் தொடர்கிறது இலங்கைத் தமிழர் வாழ்வு. இந்த மாத புதுவிசையில் ஜெர்மனியில் புலம் பெயர்ந்து வாழும் மொழிபெயர்ப்பாளர் நடராசா சுசீந்திரனின் நேர்கானல் பதிவாகியிருக்கிறது. வலையுலகத்திற்கு இப்பதிவின் மூலம் இணைக்கப்படுகிறது

2 comments:

viththi said...

நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..”
-நடராசா சுசீந்திரன்
மிக நீண்ட தொகை இவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால்
ஒடுக்கபடுகின்றது அவர்கள் தங்கள் வேலையை மிக நன்றாக செய்கின்றார்கள்.தடித்த தோல் கொண்ட மனிதராக அவரை அடையாளம் காண்கின்றோம்
சிங்களவனுக்கு பரிவட்டம் பிடிப்பவர் கருத்தை எங்களிடம் முன்வைக்காதிர்.
ஏனெனில் உங்களை மதிக்கிறோம்

காமராஜ் said...

நண்பர் வைத்திக்கு வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.
உங்களின் கோபம் புரிகிறது.
பரிசீலிக்க வைக்கிறது.
மரணம், அகால மரணம், குரூர மரணம்
எல்லாமே கொடியது.
அதைக்கொண்டு பிழைப்பு நடத்துவது
அதனினும் கொடியது.