கோணிப்பையில் சேர்த்துக்கட்டிய சோத்துப்பானையும் சாப்பட்டுத்தட்டும் பூதக்கணம் கணத்தது. வழிச் செலவுக்காக விற்றபோது கோழிகளின் கேரல் சத்தம் உயிரைப்புடுங்கியது. பக்கத்துவீட்டு லட்சுமிச் சித்தி எனைக் கட்டிப் பிடித்தபோது முகம் திருப்பிய அம்மா, உடல்குலுங்கினாள். ஊரெல்லையில், கருக்கிருட்டில் சாமிகும்பிடாத அய்யா, கிழவனார் கோயிலில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து எழுந்தார். திரும்பி வரமுடியும் என்கிற நம்பிக்கை இருந்தும் கால்கள் இடறியது. திருப்பித் தரமுடியாத கடனுக்குப் பயந்துஊரைக்காலி செய்த நினைவுகள் நெறிஞ்சி முள்ளாய் இடறுகிறதே. வெடிகுண்டின் வெளிச்சத்தில் மிச்ச உயிர் தேடிக் கிடைகாமல் கொடுவாள் கொண்டு கீறிய நினவுகளோடு தமிழ்மணலில் பதிந்து விட்ட ஒவ்வொரு தடத்திலும் புதைந்து கிடக்கிறது புலம்பெயர்தலின் உக்கிரமான வலியும் ரணமும். |
2.5.09
வலியறியும் வலி
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வலிகளை உணர்த்தும் பதிவு.
மனதைப் பிசையும் காட்சிகளை உள்ளடக்கிய வரிகள் அழுத்துகின்றன.
மனதை வலிக்கச்செய்கின்றது கவிதை.
//புலம்பெயர்தலின் உக்கிரமான வலியும் ரணமும்.//
உண்மைதான் காமராஜ். அனுபவித்தால்த்தான் தெரியும் அதன் உக்கிரம்.
வாருங்கள் மப்பிள்ளை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தோழா நன்றி
வாருங்கள் முத்துராமலிங்கம்
வருகைக்கும் இணைப்புக்கும் நன்றி.
வேலன் சார் மும்பையிலிருந்து
திரும்பியாச்சா நன்றி
தமிழ்மணலில் பதிந்து விட்ட ஒவ்வொரு தடத்திலும்
புதைந்து கிடக்கிறது புலம்பெயர்தலின்
உக்கிரமான வலியும் ரணமும்.
kamaraj sir really superb
valiyudan kudiya kavithai
///புதைந்து கிடக்கிறது புலம்பெயர்தலின்
உக்கிரமான வலியும் ரணமும். //
மனதைப் பிசையும் வரிகள் ..
பலமுறை அனுபவித்தாயிறிற்று
வாருங்கள் சக்தி
வணக்கம். வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.
ஜீவராஜ் தங்களின் கருத்துக்கு
நன்றி
சொல்ல வார்த்தை இல்லை
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி வணக்கம் திகழ்மிளிர்
Post a Comment