28.5.09

காதலில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்பது - ஷாஜஹானின் கவிதை








இந்தியாவில் மட்டும் தான் பரீட்சயில் தோற்றவர்களும், காதலில் தோற்றவகளும் தற்கொலை செய்துகொள்வதாக சர்வதேச தற்கொலைகளுக்கான ஆராய்ச்சிக் கனக்கெடுப்பு கூறுகிறது. கிட்டத்தட்ட அதுவும் உடன்கட்டை ஏறுவது போலொரு மூடப்பழக்கம் தான். இந்தக் காதல் இந்தியாவின் அலாதியான நடைமுறை. அது இல்லாத காவியம், காப்பியம், கவிதை ஏதும் இல்லை. இந்திய சினிமாவுக்கான மூல முதலும் அதுதான். காதல் என்கிற கதை கல்யாணத்தோடு முடிந்துபோகிறதான சித்தரிப்புகளால் அதற்குப்பிந்தைய வாழ்க்கை கேட்பாரற்றுப் போகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவனையின் நரம்பியல் பிரிவில் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் பான்பராக்கால் பாதிக்கப்பட்டவர்கள் ( victims ). அவர்களைப் பளபளக்கும் விளம்பரங்கள் மறைப்பதுபோல கவியங்கள் எல்லாமே காதலின் ஒரு பக்கத்தைச் சொல்லுகிறது. காதலில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களைப் பற்றிச்சொல்ல இங்கிருக்கும் ஆயிரம் வகையான அசமத்துவம் காரணமாகிறது. அந்த வலியை வெறும் நான்கு வரிகளில் சொல்லுகிறது எழுத்தாளர் ஷாஜஹானின் கவிதை.



எத்தனயோ பூக்களிருந்தும்
எருக்கஞ்செடியின் மேல்
சுற்றி சுற்றி வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி நினவு படுத்துகிறது.


யார் சொல்லியும் கேளாமல்
சைக்கிள் கடைக்காரனைக்
கட்டிக்கொண்டு
காணாமல் போன வனிதாக்காவை.