2.5.09

தேர்தல் காமெடிகள்








தென்னை மரத்தில் ஏறிய திருடனைப் பார்த்துவிட்ட தோட்டக்காரன் கேட்டான்.
" எவண்டா அது, அங்க என்னடா பன்றே " திருடன் பதில் சொன்னான் " நாந்தாண்ணே, புல்லுப் புடுங்கப்போறேன்"வெறும் கையோடு இறங்கிய திருடனைப் பார்த்துக் கேட்டான் என்னடா எறங்குறே " அங்க புல்லுக் கெடைக்கல அதா திரும்பிட்டேன் " ன்னு திருடன் சொன்னானாம்.
மதுரை பெரியார் நிலையத்திலிருந்து காலையில் திருப்பரங்குன்றத்துக்கு போனோம். பதினைந்து ரூபாய் கொடுத்து ரெண்டு டிக்கெட் கேட்டோம். ரெண்டு டிக்கெட்டோடு திருப்பி ஒன்பது ரூபாயும் கொடுத்தார். என்னசார் மீதிச் சில்லறை ஜாஸ்தி கொடுத்திட்டீங்கன்னு சொன்னதற்கு இல்ல சார் சரிதான் என்று சொன்னார், அந்த தாழ் தள சொகுசு பேருந்துநடத்துனர். எப்ரல் முப்பதாம் தேதி முதல் தமிழகம் முழுக்க பேருந்துக் ட்டணங்கள் குறைக்கப் பட்டுவிட்டது. அரசு கட்டணம்குறைக்கப்படவில்லை என அறிக்கை விடுகிறது.



இது பரவாயில்லங்க. ஈழத் தமிழ்நாடு ஒன்றே எனது தாரக மந்திரம் என்று காங்கிரசும், அண்ணா திமுக வும் சொல்லுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் இந்திய நதிகள் அணைத்தையும் இணைக்க ஆளாளுக்கு பிவிசி குழாய்களை எடுத்து தயாராக வைத்திருக்கிறார்கள். சாத்தூரில் காங்கிரஸ் கட்சி மேடையில் ஒருவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனே சேது சமுத்திரத் திட்டத்தை உடனே அமல் படுத்தும் என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆமா இது வரை இந்தியாவை ஜார்ஜ் புஷ்ஷா ஆண்டு கொண்டிருந்தார் ?. இந்த ஒரு முறை எனக்கு சான்ஸ் கொடுங்க என்று இன்னொருவர் கேட்கிறார். இது என்ன நடகக் கம்பெனியா ? சினிமாக்கம்பெனியா ?வாக்காளர்களுக்கு மூளை இருந்த இடத்தில், டீவி, சினிமா, மட்டும் இருக்கிறதென நினைக்கிற அரசியல் கட்சிகள்.



இந்த வார ஜூனியர் விகடனில் முக்கியமான வேட்பாளர்களின் தனிநபர் சொத்து பட்டியல் பார்த்தேன். போன தேர்தலில் கட்சியில்லாமல் நிதிப்பொறுப்பு எடுத்துக்கொண்ட ஜனநாயகச் சிற்பி ப.சிதமபரத்துக்கு 17 கோடி. இப்போது 27 கோடி சொத்து. இது கணக்கில் வந்தது. இதே போல ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கோடி தொடங்கி 20 கோடி வரை உழைத்து உயர்த்தியிருக்கிறார்கள் தங்களின் சொத்துக்களை. மனைவி, மக்கள், உறவினர் பேரில் இருக்கும் பினாமி சொத்துக்கள் நீங்களாக. இதுதான் கலப்பு பொருளாதாரக் கொள்கை கொண்ட இந்திய ஜனநாயகத்தின் நிலைமை.



நாற்பது கோடிப் பேருக்குமேல் இரண்டு வேளைச் சாப்பாடு மட்டும் சாப்பிடும் இந்தியார்களுக்கு மேலே சொன்ன சொலவடைகள் மட்டும்தான் சொத்து.

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பதிவு நன்றாகவுள்ளது

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு..

Unknown said...

மக்களிடம் உள்ளதை மக்களுக்கே தெரியாமல் ஆட்டை போட்டு மக்களை மடையர்களாக மாற்றிவது தானே ஜனநாயகம்.இதில் என்ன காமெடி இருக்கிறது மாமா?

காமராஜ் said...

முனைவர் குனசீலன்,
தீப்பெட்டி,
மற்றும் மாப்பிள்ளை ஆண்டோ
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

Prabhu said...

neenga maduraya? nanumdan.