28.5.09

ஜனநாயகம் முற்றிப்போனால் முடியரசு
அழகிரி, தயாநிதிமாறன் பதவி ஏற்பு -

பார்வையாளர்களின் முன் வரிசயில் கலைஞர் குடும்பம்,

அகதா சங்மா பதவியேற்பு, பார்வையாளர் வரிசையில் சங்மா பூரிப்பு.


ராஹுல் காந்தி முன்வரிசயில் சோனியா காந்தி கள்ளச்சிரிப்பு.
நடிகர் மகன் நடிகர், டாக்டர் மகள் டாக்டர்

ஏமாளிஇந்தியர்களின் வாரிசுகளும் ஏமாளிகள்

நவீனப் போட்டி யுகத்திற்குள் வளரும் குலத்தொழில் முறை.

நல்லவேளை பெரியாரில்லை.

8 comments:

J said...

காலச்சக்கரம்
மீண்டும் மன்னராட்சி???

காமராஜ் said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஜெ.
கருத்துக்கு நன்றி.

ஜுர்கேன் க்ருகேர்..... said...

நாலு வரின்னாலும் நச் ன்னு சொன்னீங்க

இராம்கோபால் said...

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். 28வயதே ஆன பெண் மந்திரி என்பதில் உள்ள பெருமை வாரிசு என்றபொழுது அடிபட்டுப்போகிறது. போராட்டங்கள், கொள்கைகள், கட்சி வேலை என்பதி8ல்லாமல் வாரிசு என்றொரு பெருமை கொண்டு மந்திரியாவது தான் ஜனநாயகம் போலும்.

காமராஜ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜுர்கேன், வணக்கம்.

காமராஜ் said...

வாருங்கள் ராம்கோபால். நூற்றிப்பத்துக்கோடி ஜனங்களில்
பார்லிமெண்ட் காண்டீனில் ஒண்ணேகால் ரூபாய்க்கு காப்பி குடிக்க,
கணக்கில்லாத ஓசிப்போன் பேச, ஐஓசி யில் டீலர்ஷிப் வாங்க,
வாழ்நாள் முழுக்க பென்சன் வாங்க நிமிசத்துக்கு நிமிசம் இறையாண்மையையும்
மனச்சாட்சியயும் விறக வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு.

ஆ.ஞானசேகரன் said...

//ஏமாளிஇந்தியர்களின் வாரிசுகளும் ஏமாளிகள்

நவீனப் போட்டி யுகத்திற்குள் வளரும் குலத்தொழில் முறை.

நல்லவேளை பெரியாரில்லை.//

மிக சரியாக சொன்னீர்கள் நண்பா

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன். எங்கோ
போய்க்கொண்டிருக்கிறது ஜனநாயகம்
எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள
வேண்டியிருக்கிறது.