11.5.09

அமைதிப்பூங்கா

இரும்புக் கம்பிகளுக்குபின்னால் இருக்கிற சிங்கம்எப்போது பச்சரிசிச்சோறும் பருப்புச் சாம்பாரும் தின்னக்கேட்டது.

பசித்துக் கிடக்கிற முதலைக்குகறி வெட்டிப் போடக் காவலர்கள் உண்டு.
அடங்காத சிறுத்தையின் உறுமலும் கர்ஜனையும்பஜகோவிந்தப் பஜனையில்லை.

அலுவலர்களுக்கு நுணுக்கம் தெரியும்வேலைக்காரர்களுக்கு விலங்குகளின்வேதனையும் புரியும்.

கம்பிக்கு வெளியே..

வறுமையைச் சொல்லத்தெரிந்த வாய்உதிரப்போக்கால் ஊமையானது.
மண்வெட்டுவது தாமதமானதென்றுமாரியக்காளைச் சாதிசொல்லித்திட்டுகிறான் சூப்பர்வைசர்.

வேலிகள் எப்போதும் அற்பமானவை.அடங்கிக் கிடக்கிற வரை எல்லாம் அமைதியாகத்தோன்றும்

6 comments:

வனம் said...

வணக்கம் காமராஜ்

ம்ம்ம் நல்லா இருக்கு கருப்பொருளும் கவிதையும்

\\வேலிகள் எப்போதும் அற்பமானவை.அடங்கிக் கிடக்கிற வரை எல்லாம் அமைதியாகத்தோன்றும்\\

ஆமா, இந்த வரிக்கான பொருள் அமைதியாய் அடங்கிக் கிடத்தல் அடிமைத்தனம் என கொள்ளளாமா?

நன்றி
இராஜராஜன்

sakthi said...

பசித்துக் கிடக்கிற முதலைக்குகறி வெட்டிப் போடக் காவலர்கள் உண்டு.
அடங்காத சிறுத்தையின் உறுமலும் கர்ஜனையும்பஜகோவிந்தப் பஜனையில்லை.

varthai amaipu nalla erukunga

sakthi said...

வறுமையைச் சொல்லத்தெரிந்த வாய்உதிரப்போக்கால் ஊமையானது.
மண்வெட்டுவது தாமதமானதென்றுமாரியக்காளைச் சாதிசொல்லித்திட்டுகிறான் சூப்பர்வைசர்.

valikuthunga

sakthi said...

அலுவலர்களுக்கு நுணுக்கம் தெரியும்வேலைக்காரர்களுக்கு விலங்குகளின்வேதனையும் புரியும்.

vithyasamana kavithai

காமராஜ் said...

வணக்கம் ராஜராஜன். நன்றி.
அழுத்தமாகச் சொல்லவேண்டும்
அடிமைத்தனத்தையும், விடுதலையையும்.

காமராஜ் said...

வணக்கம் சக்தி உங்கள் வருகை
எனக்கு நிஜமான உவகை.
கருத்துக்கு ரொம்ப நன்றி