ஐஸ்காரனின் அழைப்பிலும், இடைவிடாத மழை நேரத்திலும், காற்றில்லாத மொட்டை வெயிலிலும், நேற்றிரவின் காமக்கனவிலும், கழிப்பறையின் காத்திருத்தலிலும்நீக்கமற வந்து நிற்பதுன் நிழல். பட்டிமன்றம் முடிந்தாலும் சரியெனவும் தவறெனவும் தீர்க்கப்படாத தாவாவாய் நிலுவையில் நிற்கிறதுன் அன்பு. . எடைக்கல்லையும் தராசுத்தட்டையும்தூக்கியெரிந்த பின்பு நடந்ததுநம் கொடுக்கல் வாங்கல். அப்போதிருந்துகானாமல் போனது தீர்ப்பின் வரிகள். |
6 comments:
////எடைக்கல்லையும்
தராசுத்தட்டையும்தூக்கியெரிந்த பின்பு
நடந்ததுநம் கொடுக்கல் வாங்கல்.
அப்போதிருந்துகானாமல் போனது
தீர்ப்பின் வரிகள்.//
அருமை....
நல்ல வரிகள், கவிதை எனக்குப் பிடித்திருந்தது.
வருக ஜீவராஜ் வணக்கம்
வணக்கம் முத்துராமலிங்கம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எப்போதும் போல அருமையான வரிகள்..
அன்புடன் அருணா
வாருங்கள் அருணா மேடம்,
வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.
Post a Comment