7.5.09

ஒதுங்கி நிற்கும் தீர்ப்பின் வரிகள்









ஐஸ்காரனின் அழைப்பிலும்,
இடைவிடாத மழை நேரத்திலும்,
காற்றில்லாத மொட்டை வெயிலிலும்,
நேற்றிரவின் காமக்கனவிலும்,
கழிப்பறையின் காத்திருத்தலிலும்நீக்கமற
வந்து நிற்பதுன் நிழல்.



பட்டிமன்றம் முடிந்தாலும்
சரியெனவும் தவறெனவும்
தீர்க்கப்படாத தாவாவாய்
நிலுவையில் நிற்கிறதுன் அன்பு.


.
எடைக்கல்லையும்
தராசுத்தட்டையும்தூக்கியெரிந்த பின்பு
நடந்ததுநம் கொடுக்கல் வாங்கல்.
அப்போதிருந்துகானாமல் போனது
தீர்ப்பின் வரிகள்.

6 comments:

geevanathy said...

////எடைக்கல்லையும்
தராசுத்தட்டையும்தூக்கியெரிந்த பின்பு
நடந்ததுநம் கொடுக்கல் வாங்கல்.
அப்போதிருந்துகானாமல் போனது
தீர்ப்பின் வரிகள்.//

அருமை....

ஆ.சுதா said...

நல்ல வரிகள், கவிதை எனக்குப் பிடித்திருந்தது.

காமராஜ் said...

வருக ஜீவராஜ் வணக்கம்

காமராஜ் said...

வணக்கம் முத்துராமலிங்கம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் அருணா said...

எப்போதும் போல அருமையான வரிகள்..
அன்புடன் அருணா

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம்,
வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.