நாழிதழ்கள் முழுக்க தொகுதி, வேட்பாளர்கள், ஆருடம். கூகுள் செய்திகள் யாவும் தேசிய சின்னங்கள். கிராமச்சுவர்களுக்கு இடைக்காலப் பொங்கல், வெள்ளையடிக்கப்படுகிறது. பேருந்து வராத ஊர்களுக்குக்கூட கார்கள் வரும் அதிசயம். தேர்தல் வாக்குறுதிகளை உட்கார்ந்து கேட்க தலைக்கு நூறு ரூபாய் ஸ்டைபண்ட். இந்த தேர்தலில் ஒரு வாக்கின் விலை நிலவரம் அறிய வாக்காளர்கள் ஆர்வம். மதுரையில் பிறக்கவில்லையே என்று அடுத்ததொகுதி மக்கள் ஆதங்கம். இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் கணக்கில் கோடிக்கணக்கில் தர்மச் செலவு. வருமான வரிக்குப் பக்கத்தில் படுத்துக்கிடந்த பணங்கள் எழுந்து நடமாட்டம். ஓட்டை ஒடைசல் நடிகர்கள் பழைய அரிதாரம் பூசிக்கொண்டு புதிய அவதாரம். நடக்கப் போவது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ரெனீவல். ஜெயிக்கப்போவது அவரா இவரா அல்லது பணமா தெரியாது. தோற்கப்போவது யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. |
25.4.09
திரும்பவும் தோற்கப்போவது உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தோற்பவர்களுக்கு, தாங்கள்தான் தோற்கப் போகிறோம் என்பது எப்போது தெரிகிறதோ, அப்போதுதான் வெற்றி பெறுவார்கள்.
//தோற்கப்போவது யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. //
கண்டிப்பாக தோற்பது சனநாயகம் மட்டுமே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு.ஞானசேகரன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவராஜ்
இருபது கிலோ மீட்டர் பனிரெண்டு ஊர்கள்.
எல்லா கிராமங்களிலும் அரைப்பாடி வேனும் லாரியும்
மண்ணைத் தட்டிவிட்டு மக்களை ஏற்றிக் கொண்டிருக்கிறது.
முந்தாநாள் திருத்தங்கல்லிலுல் அதே நேரம் சத்தூரிலும்
முறையே முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் உல்துரை அமைச்சருக்கும்
கட்டுக்கடங்காத கூட்டம். தோற்பதற்குக்கூலியாக
அங்கே தான் உலகைப்புரட்டுகிற நெம்புகோல் நசுங்கிக் கிடக்கிறது.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் பகல் முழுக்க வெயிலில்கிடந்தால் 67 ரூபாய்.
சாயங்காலம் லாரியில் ஏறி சத்தூர் டவுன் பார்த்து திரும்பிவந்தால்
தோற்பதற்குக்கூலியாக சாப்பாடுபோக 100 ரூபாய் சம்பளம்.
வேலைவாய்ப்புக்கள் பறிபோன இந்தியாவில் வேட்பாளர் பதவிக்கு தேர்வு நடப்பதும்.
அங்கு கோடிகோடியாய்க் கொட்டப்படுவதும் தெரிந்திருந்தும் கிள்ளினான்
முள்ளினான் தகவல்களை சேகரிக்கிற தேர்தல் ஆணையம் எந்த மக்களால் எந்த மக்களூக்கு.
இதை பதிவுசெய்ய உலகத் தொலைக்காட்சிகளுக்கு நேரம் இல்லை.
எல்லா ப்ரைம் டைம் ஸ்லாட்டையும் சோப்பு சீப்பு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனா என்கிற புரட்சிப்பாடல்களால்
அரியணை ஏறிய எம்ஜீஆர் முதலில் காயடித்தது புரட்சி என்கிற வார்த்தையைத்தான்.
வாக்காளர்களாகிய நானும் நீங்களும் தெளிவாக சிந்தித்து நாட்டு நலனை கருத்தில் கொண்டு வாக்களித்தால் நாம் தோற்க போவது இல்லை.
நாம் நல்ல படியாக வாக்கு போடாமல் , தேர்தல் முடிந்ததும் அரசியல்வாதிகளை குறை சொல்லியே பொழுதை கழிக்கிறோம்.
எனவே தவறு நம் மீதே. திருமங்கலத்தில் பணத்தை வாங்கி கொண்டு நாட்டு நலனை காற்றில் விட்டு வாக்களித்த தவறை நாம் செய்ய கூடாது இனி வரும் காலங்களில்.
குப்பன்_யாஹூ
மாமா! இன்னும் எத்தனை காலம் தான் நாம் இப்படி புலம்பிக் கொண்டேயிருப்பது?இந்தப் பூனைக்கு யார் தான் முதலில் மணி கட்டுவது?
Post a Comment