ஜன்னலோர இருக்கையில் படுத்துக்கொண்டு ஓயாமல் கிரிக்கெட் வர்ணனைகேட்டுக்கொண்டும், தெலுங்கு, ஹிந்திப்பாடல்கள்கேட்டுக்கொண்டும் படுத்திருந்த அந்த வாலிபன் ஒரு ராணுவவீரன் என்பதை பார்க்கிற யருமே சுளுவில் கண்டுபிடிக்கலாம்.ஆனால் அவன் எந்த மாநிலத்துக்காரன் என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. தவிரவும் காலை எறி, இரவு வரைஒரே பேச்சும் கூத்துமாக இருந்த எங்களோடு எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. நான் தேரே மேரே பீஜ்மே பாடியதும் கை வானோலியை நிறுத்திவிட்டு எழுந்து உட்கார்ந்து கவனித்தான். எனது அரைகுறை ஹிந்தியில் அவனுக்கு எந்த ஊர் எனக்கேட்டேன். ஒசூருக்குப் பக்கத்தில் உள்ள கன்னடக் கிராமம் என்பதைத் தமிழில் சொன்னான். அவன் பிறப்பால் கன்னடமாக இருந்தாலும், தமிழும் கன்னடமும் தாய்மொழியாகக் கிடைக்கப்பெற்ற பாக்கியவான். அவனது சிற்றூர் ஒரு எல்லையோர கிராமம். நீண்ட நேரம் அவனோடு உரையாடக் கிடைத்ததெனது பாக்கியம். சியாச்சனில் ஒரு வருடம் இருந்துவிட்டு லே பகுதிக்கு வந்திருப்பதாகச் சொன்னான். முப்பதிணாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான கதகதப்பு உறைகள், காலணிகள், என எல்லா சவரட்ணைகள் செய்தாலும் வாரம் ஒரு முறை ஹெலிகாப்டர் மூலமாக வரும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களுக்காக வயிறு காத்திருக்கவேண்டும். மண்ணென்னெய் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நகராது. சாப்பாட்டுக்கும், சாயாவுக்கும், இயற்கை உபாதைகளுக்கும் கூட. குளிரெப்படி என்று கேட்டதற்கு தனது கைகால்களைக் காண்பித்தான். இயல்பான தோலின் பகுதிகளெங்கும் கருப்புப் புள்ளிகள் நிறைந்திருந்தது. உடம்பு முழுக்க மச்சம். குளிரில் நரம்புகள் சுருங்கி, ரத்த ஓட்டம் சிறுத்து, சலிப்பிடித்து மொத்த வாழ்வில் ஐந்து அல்லது பத்து வருடத்தை நாங்களே குறைத்துக் கொள்கிறோம். இதற்குப் பிரதியாக இரண்டு மடங்கு சம்பளமும் சீக்கிரம் பதவி உயர்வும் கிடைக்குமாம். என்றாலும் வாழக்கையை வாழ்ந்துதானே தீரவெண்டுமென்று கூறினான். எல்லைப்பகுதியில் எப்போழுதும் பதட்டமாகவே இருக்குமா என்று கேட்டதற்கு. ரொம்ப இயல்பாக உதட்டைப்பிதுக்கினான்.எல்லை என்பது உங்க வீட்டுச் சுற்றுச்சுவர் போலக்கிடையாது சார் என்று சொன்னான். கார்கில் சண்டை வருகிற வரை( கார்கில் என்கிற பெயரில் பான் பராக் விற்பனைக்கு வந்து, பக்தியும் போதையுமாக நல்ல வியாபாரம் ) இங்கிருந்துஆடு மேய்க்க அங்கு செல்வதும், சைனா தைவான் பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் இங்கே விற்க வருவதும்ரொம்ப சாதாரணம் சார் என்று சொன்னான். இவ்வளவு ஏன் ஹெலிகாப்டர் வரத் தாமதமான நாட்களில் உணவுப்பொருள் எரிபொருள்கள் பரிமாறிக் கொள்வதும் இரண்டு பகுதி வீரர்களுக்குள்ளும் பூக்கிற மனிதாபிமானம். மூத்த அதிகாரிகளுக்குத் தெரியாத மனிதாபிமானம். இரண்டு தேச எல்லைகளுக்கு அருகில் குடியிருக்கும் சிறுவர்கள் ஒரு கால்பந்தால் பந்தமாகித் தோள் மீது கைபோட்டுக்கொண்டு முடிகிற அந்த ஏர்டெல் விளம்பரம். இரண்டு ராணுவ அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் கம்பிவேலிகளுக்கு ஊடாக கள்ளத்தனமாகப் மதுவையும் மனிதாபிமனத்தையும் பரிமாரிக்கொள்கிறதான விளம்பரம். சில வருடங்களுக்கு முன்னாள் வந்தது. இந்த இரண்டு கவிதைக்காட்சிகளும், மதில் சுவர் தாண்டி நீள்கிற கிளையை வெட்டும் தோட்டக்காரனே கண்ணுக்குத் தெரியமல் மண்ணுக்குள் நழுவும் வேர்களை என்ன செய்ய முடியும் ? என்கிற கவிதைக் கேள்வியும் நினைவுக்கு வந்துபோகிறது. அரூப எல்லைகளைக் கடந்து விரியும் அன்பும் மனிதாபிமானமும். |
18.4.09
அடைக்கும் தாழற்ற, மறிக்கும் எல்லைகளற்ற பெருவெளி
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நாம் இங்கு நிம்மதியாக தூங்குவதற்கு பெயர் தெரியாத பள்ளத்தாக்குகளில் விழித்திருப்போரை பற்றி நமக்கு என்ன கவலை?
நமது தலைவர் படம் திபவளிக்கு ரிலீஸ் ஆகுமா?ஆகாதா? என்பதிலிருந்து....... நாம் அமெரிக்கா போவதற்க்கு விசா கிடைக்குமா என்பது வரை நமது இளைஞர்கள் கவலை படுவதற்கு எவ்வளவ்வோ உள்ளது.......இதில் எல்லையாம்..... பாதுகாப்பாம்......
மாமா உங்களை போன்ற ஆட்களின் பதிவுகளையாவது மேற் குறிப்பிட்ட பொதுநலவாதிகள் படித்தால் சரி.
//மதில் சுவர் தாண்டி நீள்கிற கிளையை வெட்டும் தோட்டக்காரனே கண்ணுக்குத் தெரியமல் மண்ணுக்குள் நழுவும் வேர்களை என்ன செய்ய முடியும் //
கார்கில் போரில் ஊடகங்கள் அடித்த கொட்டம் மறந்து விட்டதா?
நமக்கு எல்லாமே விளம்பரமாகி விட்டது.
பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிப் பல்லக்கில் பயணம் செய்பவன் என்னாளும் கவலைப் பட்டது கிடையாது.
\\எல்லைப்பகுதியில் எப்போழுதும் பதட்டமாகவே இருக்குமா என்று கேட்டதற்கு. ரொம்ப இயல்பாக உதட்டைப்பிதுக்கினான்.எல்லை என்பது உங்க வீட்டுச் சுற்றுச்சுவர் போலக்கிடையாது சார் என்று சொன்னான். \\
குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து சேகரித்த செய்திகளைத்தொகுத்து அரசியல் ஆய்வெழுதுவோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை சண்டைகள் இல்லாத பொழுதுகளில் எதிராளிகள் சகஜமாக உரையாடிக்கொள்கிறார்கள் என்பதை.
ஆண்டோ அவனது கண்னுக்குள் இருந்த ஏக்கம்
எத்தனையோ சோகக்கவிதைகளை அடக்கி வைத்திருக்கிறது.
வணக்கம் வேலன் சார்.
ஊருக்கு வந்து திரும்பியதிலிருந்து
ஒரே டேக் ஆப் தான். உங்களின்
அத்தனை பதிவுகளும் முத்திரை.
பின்னூட்டத்திற்கு நன்றி.
வணக்கம் ஜீவராஜ் எப்படி இருக்கிறீர்கள்
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நன்றி.
nalla pathivu..
வணக்கம் ஆதவன்.
கருத்துக்கு நன்றி.
Post a Comment