27.5.09

இரண்டு எதிர்காலம்








அவனுக்கு வயது பதினாறு தான் இருக்கும். ஒரு சூட்கேஸ், ஒரு தூக்குப்பை, இன்னொரு சாப்பாட்டுப்பை வைத்திருந்தான். இரண்டு அலைபேசிகள் வைத்துக்கொண்டு நண்பர்களோடும் உறவினர்களோடும் பேசினான். தன்னோடு வந்த தாயிடம் மிகத்துள்ளியமான வார்த்தைகளில் பேசினான் சில நேரம் அறிவுரைகள் கூட. கொண்டு வந்த சிக்கன் நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு உலகப்பதவிசாக கைகழுவித் துடைத்துக் கொண்டான். சென்னையச் சுற்றியுள்ள அத்தனை தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெயர், விலாசம், தரம், பாடங்களின் பட்டியல், அவர்கள் கறக்கும் நன்கொடைத்தொகை, அணைத்தயும்நுட்பமாகவே தாயிடமும், எதிர் இருக்கை மாணவனிடமும் விவரித்தான். அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் ஏதோ ஆங்கிலப்படம் பார்ப்பதுபோல அவனையே கவனித்தார்கள். அந்த இரவு நேரத்துரித வண்டியின் பெட்டிக்கு அவனே அன்றையகதை நாயகன். அந்த பிராயத்தில் தாங்கள் வழ்ந்த வாழ்கை எல்லோருக்கும் நிழலாடிப்போனது. டவுசர் கிழிந்த காலங்கள்.ஹிண்டு நாளிதழ் படித்துக்கொடிருந்த அவர் அரை மணிநேரம் பேசினார். கல்வி, பொருளாதாரம், சுகதாரம், தொழில் நுட்பத்தில் இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்று புள்காங்கிதப்பட்டார். யப்பா என்ன வளர்ச்சி, மிராக்கிள் இன்னும் ஒன் ஆர் டூ இயர் நாம தான் வல்லரசு என்று குதித்தார்.



நடு இரவில் இருப்புப்பாதை கோளாறு காரணமாக மூன்று மணிநேரத்தாமதம். மறுநாள் அதிகாலை முதல் காபி, காலைப்பலகாரம், கொய்யாப்பழம், முறுக்கு சுண்டல் நொறுக்குத் தீனிகளாக வந்துபோனது. கூடவே பிச்சைக்காரர்களும்.கணீர்க்குரலில் " கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே " பாடல் தூரத்தில் கேட்டது. ஒரு நுட்பமான பாடகியின் குரலோடு ஒப்பிட போட்டியிட அணைத்து குணாம்சங்களும் நிறைந்த அது நெருங்கிவந்தது. பின்னர் தான் தெரிந்தது. சுண்டியிழுக்கும் அந்த இசையின் சொந்தக்காரி ஒரு சிறுமி என்பது. அப்புறம் தனது மேல்சட்டையக் கழற்றி அந்தப் பெட்டியையே சுத்தம் செய்ய ஒருவன் வந்தான். " எப்பா சாம்பார் கொட்டிடுச்சு அத நல்லாத்தொட" என்று சொன்ன கனவான் வேலை முடித்துவிட்டு அவன் கை நீட்டும் போது ஹிண்டு பேப்பரின் ஆங்கில எழுத்துகளுக்குள் கானாமல் போனார். அவ்வளவு நேரமும் தனது அலைபேசியில் வீடியோ கேம் விலையாண்ட கதை நாயகன் ஜன்னலைத்திறக்க கிடந்து மல்லாடினான். " கொஞ்சம் ஒத்து சார் " என்று சொல்லிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அதை திறந்து கொடுத்துவிட்டு அருவறுப்பு பார்வைகள் பின்தொடரக் கடந்துபோனான். அவனுக்கும் வயது பதினாறு தான் இருக்கும்.

4 comments:

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

☼ வெயிலான் said...

இரு சம்பவங்களின் கோர்வை மிக அருமையாக இருந்தது.

காமராஜ் said...

வாருங்கள் வெயிலான் வணக்கம்.
என்ன நீண்ட நாளாய் பதிவே இல்லை.

காமராஜ் said...

வணக்கம் அருண்மொழி, படித்தேன்
நல்ல பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி