| அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போதெல்லாம் எனக்கு தோழர் கந்தர்வனின் ' தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' சிறுகதை தான் நினைவுக்கு வரும். மனிதர்களின் அபிலாஷைகளை அள்ளிக்கொண்டு வந்து தட்டுகிற இடமாக அந்த எழும்பூர் ரயில் நிலையம். முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அங்குபோய் இறங்கினேன். மதுரை தாண்டி பயணம் செய்த முதல் அனுபவம் அது. அன்றும் கூட அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் தாதார் எக்ஸ்பிரசைப் பிடிக்கனும், ஒருமணிநேர அவகாசத்தில். வெளியே வந்தபோது பீடியைக் கிழே போட்டுவிட்டு ஒரு தாத்தா அழைத்தார். அவரது வாகனத்தில் சென்ட்ரல் போவதாக உடன்பாடு. அவரைவிட வயதான குதிரையும் வண்டியும் எனக்காகக் காத்திருந்தது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்னும் பாடலை மந்தமாகச்சுழலும் இசைத்தட்டின் லயத்தில் பாடிக்கொண்டு போனேன். இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம். டெல்லி சென்று திரும்பி வந்த அந்த 1995 ஆம் ஆண்டையும் என்னால் மறக்க முடியாது. நானும் தோழர் நடராஜனும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இறங்கி உடனடியாக வைகையைப் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். மனசு முழுக்கஇந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நிறைந்து கிடந்தது. உடலில் ஒரு பத்து நாளின் ரயில்புகை படிந்தது போல உணர்வு. பல்துலக்காதபோதும் பசி அரிசிச்சோறு தேடியது. சின்னவன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்பதாக அவள் சொன்னது. பயணவேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பணிரெண்டு மணிநேரத்தில் சாத்தூர் என்ஜிஓ காலனியில் இருக்கப்போகிறோம் என்னும் குறுகுறுப்பு வந்தபோது அவள் வாசம் அடித்தது. பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள். முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான வரிசை நீண்டு கொண்டே போனது. திருச்சிக்கு அம்மா அப்பவை அனுப்பிவைக்க,மதுரையில் சாயங்காலம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள.நேற்று மகனின் வேலைக்காக மந்திரியைப்பார்க்க வந்தஇப்படி ரகரகமான பயணிகளின் கூடவே ஒரு ராணுவவீரன் தன் காதல் மனைவியோடு மிகமிக நெருக்கமாக. ஒன்பது மாதத்துக் கர்ப்பினியான அவளுக்கு எழும்பூர் இம்பாலாவில் நெய்த்தோசை வாங்கிவந்து கொடுத்தான்.ராணுவ கிட்பேக்குகளையும் பெரிய பெரிய சூட்கேசுகளையும் அடுக்கி அதன் மேல் அவளை உட்கார வைத்திருந்தான்.ஈக்கள் கூட அவளை நெருங்காதபடிக்கு அன்புவேலி சுற்றியிருந்தான். நெய்த்தோசையின் மணம் எங்கள் பசியைக் கூடுதலாக்கியது. தயிர் சாதப் பொட்டலம் வாங்குவதற்காக நிலைய முகப்புக்குப் போனோம். ஐந்து பேர் தாடியோடு மரப்பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். பொட்டலம் வாங்கித் திரும்பும்போது அவர்கள் அந்த ஐந்து பேர் இந்த உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவார்கள் எனத்தெரியாமல் கடந்துபோனோம். திரும்பும்போது அந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது.ஒற்றைப்பெண் காவலர் அதில் ஒருவரின் கழுத்தைப்பிடிக்க அவர் கத்திக்கொண்டிருந்தார். ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் மூன்று பேரை சயனைடு விழுங்கிவிட்டிருந்தது. யாராவது ரயில்வே போலீசில் தகவல் சொல்லுங்கள் என வேடிக்கை மனிதர்களிடத்தில் முறையிட்டார்கள் அந்த போலீஸ். யாரும் போகவில்லை என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நான் ஓடிப்போய் சொன்னேன். ரயில்வே போலீஸ் எந்த அவசரமும் காட்டவில்லை. திரும்பவும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தேன் இன்னும் கூட அங்கு நடப்பது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனேன். நான்குபேர் இறந்து கிடந்தார்கள். அவர்களது கண்களில் ஏக்கமும் கனவுகளும் நிலைகுத்தி நின்றது. மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இன்னும் கூடுதலாக இரண்டு மூன்று காவலர்கள் வந்திருந்தார்கள். பிடிபட்டவர் ஈழத்தமிழில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வாழத்தான் அனுமதிக்கவில்லை சாகவாவது அனுமதியுங்கள் என்று கத்தி கத்திச் சொன்னார். எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். வேலூர் சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்த ஈழப்போராளிகளை தமிழ்நாடு சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த செய்தி அப்போது நினைவுக்கு வந்தது. கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் கற்பனைகளோடு செய்தியை வேறு வேறு நிகழ்ச்சியாக மாற்றிக்கொடுத்தனர். அதிரடிப்படை கவச வாகனம் வருவதற்கு முன்னமே செய்தித் தாள்களின் வாகனங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தன. காவலர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள்; டீ காபி சாப்பாடு விற்போரின் குரல்கள்; போர்ட்டர்களின் அரைஓட்டம்; ரயில்வருகை அறிவிப்பு; வழியனுப்பும் நெகிழ்வும்; வரவேற்குமுற்சாகமும் ஆன எழும்பூர் ரயில் நிலைய வளமை சிதைந்து எங்கும் பரபரப்புசூழ்ந்து கொண்டது. இப்போது எங்குபார்த்தாலும் காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. கூட்டம் கலைக்கப்பட்டது நாங்கள்வரிசைக்குத் திரும்பினோம். அந்த ராணுவவீரர் இன்னும் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார். " இந்த ரயில் நிலையத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எல்லோரும் கலைந்து ஓடுங்கள்" என்று காவல் துறை அறிவித்தது. தீப்பந்தமிட்டுக் கலைத்துவிட்ட தேன்கூடு மாதி கூட்டம் கலைந்தோடியது. சூட்கேஸ் எடுக்க மறந்தவர்கள்வாங்கிவந்த சப்பாட்டுப் பொட்டலத்தை எடுக்க மறந்தவர்கள் கையில் குழந்தையை துக்கிக்கொண்டு ஓடிய தாய்மார்கள் என உயிர்கள் பயத்தில் ஓடியது. நானும் நடராஜனும் கடைசியாய் உயிர்காக்க நடந்தோம். பின்னலே திரும்பிப் பார்த்தபோது வெறிச்சோடிக்கிடந்தது எழும்பூர் நிலையம். ஓட முடியாத - வேகமெடுத்து நடக்க முடியாத, அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை. எந்த வெடிகுண்டும் இல்லை பயணிகள் திரும்ப வரலாம் என்று மறு அறிவிப்பு வந்தது. போலீசின் முந்தைய அறிவிப்பு எஞ்சிய இருக்கிற போராளிகளைப்பிடிக்கிற உத்தி என்பது பின்னால் ஆனந்தவிகடன் படிக்கும்போது அறிய நேர்ந்தது. நாங்கள் இருந்த வரிசை மறுபடி உருவானது. நாங்கள் அந்த ராணுவ வீரனின் அருகில் இருந்தோம். அவன் அவளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எதிர்த்திசையில் திரும்பிக்கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான். பல கட்ட சோனைக்குப்பின் இரண்டு மணிநேர தாமதத்தில் வைகை கிளம்பியது. நிலைகுத்திய கண்களோடு கிடந்த நான்கு பேர்: நெடுநேரம் வரை வராமல் வந்தும் ஓடவசதியாய் நின்றிருந்த காவலர்கள்; தலைதெறிக்க ஓடிய கூட்டம்: அவர்களை முந்திக்கொண்டு ஓடிய ராணுவவீரன்: ஒரு பெண் போலீஸ்: கண்ணீர் நிறைந்திருந்த கர்ப்பிணிப் பெண்னின் கண்கள் எல்லாம் இன்று வரை கூட வருகிறது. அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக. |
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
23.11.09
கற்பிதங்கள் கழிந்து ஓடும் நேரம்.
21.10.09
முறைசாராக் கல்வி.

மடிக்கணினி, வலையுலகம். முகாம்களில் அடடைக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைககள்கையில் கிடக்கிறது சிதறிய கனவுகள். பாடத்திட்டம், பரீட்சை, வீட்டுப்பாடம் எல்லாமேவலியும் ரணமுமாக வரிசைப்படுத்தப் படுகிறது. குழந்தைக் கேள்விகளுக்கு பதிலாகத்தாயின் வறட்டுக் கன்னத்தில் வழியும் ரத்தம். இனி எழுதப்படாத பாடத்திட்டம் படியேறிக் குடியேறும். |
10.8.09
பறிக்கப்பட்ட பதின்பருவத்து விளையாட்டுக்கள் சிதறிக்கிடக்கும் காடு.

( bank workers unity இதழுக்காக 12.01.2004 ல் எழுதியது.) அப்போது நானும் நடராஜனும் கிழக்கு ராமநாதபுரக் கிராமமான பாண்டுகுடியில் தங்கியிருந்தோம். நடராஜன் வெள்ளையபுரம் கிளையில் மேலாளராக இருந்தார். வங்கிக்கிளைக்கு எதிரே மாடியில் தான் எங்கள் அறை. வேலை தவிர்த்த நேரங்களில் சீட்டு விளையாடுவதும்,சினிமாப் பார்ப்பதும்,புத்தகம் படிப்பதுவுமாக இருந்த காலங்கள் அவை. அப்புறம் இருக்கவே இருக்கிறது காதலுக்காக அலைவதும் அதைப் பற்றிப் பேசுவதுவுமான நேரங்கள். அந்த ஊதா நிற இன்லாண்ட் லட்டரை வாங்கி வைத்துக்கொண்டு கிழிக்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் தவித்த காலங்களை இனி கதைகள், சினிமா மூலமாகத்தான் சொல்லமுடியும், உணரமுடியும். இப்போது அந்த இடத்தை அலைபேசியும் குறுஞ்செய்தியும் அபகரித்துக்கொண்டது. இதோ இந்த கணினி என்பதுகூட சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக மட்டும் அறிமுகமாகியிருந்த காலம். ஜீனோ கதையெல்லாம் ஞாபகம் வருது. எங்களுக்கு அங்கே ஒரு சித்த மருத்துவர் நட்புக்கிடைத்திருந்தது. அவர் வீட்டில் இரண்டு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட நேசனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் இருந்தது. அதில் இளையராஜா பாடல்கள் கேட்பதற்காக அங்கு போவோம். கவிதைபாடு குயிலே குயிலே பாட்டை ஸ்டீரியோவில் கேட்டுக்கொண்டே கண்ணை மூடி மிதக்கலாம். அவருக்கும் அவரது செவிலிக்கும் இடையிலான காதலில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்த நாங்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாகிப் போனோம். அவர்தான் அந்த நான்கு பேரை அவரது உறவினர்கள் எனச்சொல்லி எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லோருமே பதினைந்து முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட விடலைகள். ஆனால் அந்த வயதுக்குண்டான எந்த புறச்செயல்களும் துருதுருப்பும் இல்லாததை நாங்கள் முதலில் சங்கோஜம் என்று நினைத்தோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தலையாட்டுவதன் மூலமாக மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாளில் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. அவர்கள் டெலோ அமைப்பின் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்பதை ஒத்துக்கொண்டார்கள். அப்போது அது ஒன்றும் குற்றச்செயலாக இருக்கவில்லை. பல ஞாயிற்றுக் கிழமைகளில் பச்சை ராணுவ லாரிகளில் வந்து ஆதரவும் நிதியும் திரட்டுவார்கள். அப்போது இபிஆரெல்எஃ., டெலோ, டெசொ,எல்டிடிஇ தவிர்த்து இன்னும் வேறு அமைப்புகளும் இருந்தது. அவர்கள் எல்லோருமே தமிழகத்தில் தங்குதடையில்லாமல் வந்துபோனார்கள். கூமாப்பட்டி மலையில்கூட அவர்களுக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக்கொண்டோம். ஒருநாள் அவர்களை சுப்பையாபிள்ளை கடைக்கு சாப்பிட அழைத்துச் சென்றோம். நான்கு இட்லிகளுக்குமேல் ஏதும்வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டார்கள். ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது, கல்லைத்தின்றாலும் செறிக்கிற காலம் அது. நீண்ட நேர நச்சரிப்புக்குப்பின் இப்படிச் சொன்னார்கள். இரண்டொரு நாளில் மீண்டும் காடு திரும்புவோம் அப்புறம் உணவென்பது கிடைக்கிற போது எடுக்கிற அரிய விசயமாகும். அதை இப்போது அதிகம் சாப்பிட்டால் காட்டிலும் இதே அளவு வயிறு கேட்பதற்கு வழிவகுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போனர்கள். பசிவந்திடப்பத்தும் பறந்து போகும், லட்சியம் அப்படியல்ல என்பதை அந்தச்சின்ன வயதுக்காரர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகான நாட்களில் வயிறு முட்டச்சாப்பிடுகிற நேரங்களில் எப்படியாவது அவர்கள் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பத்து வருடம் கழித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வேறு நான்குபேர் குப்பியடித்து உயிர் மறுத்தபோது நாங்கள் மிக அருகிலிருந்த சம்பவம் நடக்கும் வரை. ஒரு இருபதாண்டு கடந்து விட்டது. பதுங்குகுழியிலோ,கடும்சண்டையிலோ,பிடிபட்டு சித்திரவதையிலோ இறக்காமல் உயிரோடிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் நிலைகுத்திய கண்களில், பாவாடை பறக்க ஓடிய பெண் சிநேகிதியின் உருவமோ, விளையாட்டுக்காகக் கொடுத்த முத்தமோ கடைசியாய் நின்றுபோயிருக்கலாம். அல்லது பேய்க்கதை கேட்ட இரவில் தாயின்மேல் கால்போட்டுத் தூங்கிய நாட்கள் நினைவில் வந்து போயிருக்கலாம். அவை கருமருந்து சிதறிக்கிடக்கிற அந்தக் காடுகளில் கட்டாயம் புதைந்து கிடக்கும், வலிமையாக.சண்டைகள் ஓய்ந்து நாடு திரும்பும் மக்கள் விறகொடிக்கவோ, விவசாயம் பண்ணவோ,கால்நடைகள் மேய்க்கவோ காட்டுக்குள் போகையில், மிதித்து விடாமல் கவனமாகக் கடந்து போகவேண்டும் |
Subscribe to:
Posts (Atom)