Showing posts with label சுதந்திரம் 2009. Show all posts
Showing posts with label சுதந்திரம் 2009. Show all posts

15.8.09

சுதந்திரம் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல பாதுகாப்பதற்கும்








விடுதலை என்பது கடைப் பொருளல்ல, சிட்டுக்குருவிக்குள்ள சுதந்திரம் போல் விட்டு விடுதலையாவது சிரமம்.பொதுவிடுதலைக்குப் பின்னும் சில தனிவிடுதலைகள் தேவை என்பதே ஐந்தாண்டுத் திட்டங்கள், சட்டங்கள்.கடந்துபோயின பல பல ஐந்தாண்டுத்திட்டங்கள் இன்னும் எண்பதுகோடி இந்தியர்கள் இருந்த இடத்திலே இருப்பதுதான் கேடு.



அதற்குக் காரணம். உலகமயம், தனியார்மயம், தாராளமயம்.
இந்தச் சிந்தனையாளர்கள் அன்றிருந்திருந்தால் போராட்டத்தைக் குத்தகைக்கு விட்டிருப்பார்கள். ஆனால், அப்படி வீரத்தை குத்தகை எடுக்க ஒரு முதலாளியும் வந்திருக்க முடியாது என்பதுதான் வரலாறு. ஆனால் கும்பினியின் அதிகாரத்தைக் குத்தகை எடுத்தவர்கள் இங்கு ஏராளம்.



அவர்களே மறுரூபங்கொண்டு இப்போது விவசாய மானியத்தை வெட்டு, சுகாதாரத்தை தனியாருக்கு கொடு, கல்வியைக் கடையில்வை,தகுதியையும் திறமையையும் பீடத்தில் ஏற்று என்று சூத்திரம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
தகுதியும் திறமையும் நிறைந்த களவானிகளுக்கு இங்கு எல்லாம் கிடைக்கிறது.
மந்திரி மகன் மந்திரி, டாகடர் மகன் டாக்டர், முதலாளி மகன் முதலாளி, நடிகன் மகன் நடிகன், கந்துவட்டிக்காரன் மகன் மீட்டர்வட்டிக்காரன், அவர்களுக்கு மட்டும் தகுதியும் திறமையும் தேவையில்லை.பண்ணையார்த்தனம்,காலனிஆதிக்கம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் எல்லாம் டிஜிட்டல் அரிதாரம் பூசிக்கொண்டு மறுபடி எழுகிறது.

புரிந்துகொள்ள சுதந்திர தினம் உதவவேண்டும்.

இதை ஸ்ரேயா சொல்லுமா?,
தொலைக்காட்சிக் குழுமங்கள் சொல்ல அனுமதிக்குமா?
ஐயாக்களே உங்கள் பட்டிமன்றத்தில் பைசல் பண்ணிச்சொல்லுங்கள்.


0


பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் -புவிபேணிவளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் மாதரறிவைக் கெடுத்தார்.


எந்த நிறம் இருந்தாலும் அவையாவும் ஒருதரம் அன்றோஇந்த நிறம் சிறிதென்றும்-இஃதுஏற்றம் என்றும் சொல்லலாமோ.


0


கற்பினைக்கூட பொதுவில் வைக்கச்சொன்ன பாரதியின் நினைவுகளோடு எல்லோருக்கும் சுதந்திர வாழ்த்துக்கள்.