கிருஷ்ணகுமார் ஒரு ஆபத்தான கதை சொல்லி.சிகரெட் குடிப்பதற்கான கதைகள் சொல்லும்போது எவ்வளவு திடமான மனிதரையும் புகையின் நெடி இழுத்துக் கொண்டு போய்விடும்.சிவாஜி கணேசனுக்குப் பிறகு சிகரெட்டை ஒரு ஜிலேபியைச் சாப்பிடுவது போல ருசித்துச் சாப்பிடுகிறவர் கிருஷ்ணகுமார். அதே ஆசாமி சலிப்பிடித்து, தொண்டை கெட்டுபோய், மருத்துவர் ஆலோசனைப்படி சிகெரெட்டை நிறுத்தியதும் அப்படியே ப்ளேட்டை மாத்திப்போட்டு கதை சொல்லுவார்.'முதல் முதலாய் என் மனைவியின் தோசை ருசியை இந்த பாழாய்ப்போன சிகரெட்டை விட்டபின்னர் தான் உணர்ந்தேன்' என்று சொல்லும்போது எல்லோரும் சிகரெட்டை நிறுத்தத் தீர்மாணமாகிவிடுவோம்.எனக்குத் தெரிந்து மேடைப் பேச்சை ஒரு நிகழ் கலைபோல நடத்துகிற மனிதர் கிருஷ்ணகுமார் தான்.அந்தக் காலத்தில் அவரோடு ஊர் ஊராய் பயணம் போய் முன்வரிசையில் உட்கார்ந்து அவரது பேச்சைக் கேட்டோ ம் நானும் மாதுவும்.கேட்கிற போதெல்லாம் அழ வைக்கும் சமூக கதைகள் அவரிடம் ஏராளம் இருக்கும்.
அதே போல அவர் திரும்பி வரும்போது ஜோல்னாப் பையில் ஏராளமான புத்தகங்கள் புதையலாய் கிடக்கும். அவரது மகுடி வார்த்தைகள் எழுத்துக்களின் மகத்துவங்களைச் சொல்லி ஈர்க்கும். 42 பி எல் எஃப் தெருவின் பல இரவுகள் விளக்கு அணையாமல் எரியும், எழுத்துக்களுக்கு உயிர்கொடுத்தபடி. நானும் மாதுவும் மாற்றி மாற்றிப் படித்துவிட்டு அவரிடம் அனுபவங்களாகத் திருப்பித் தருவோம்.அவர் படிப்பதற்கு முன்னாலே நாங்கள் படித்துவிடுதாகப் பொய்க் கோபம் கொள்வார்.இருந்தும் எங்களுக்கே முதல் படையலாய் புத்தகங்களை திரும்பத் திரும்பத் படைப்பார். அங்குதான்,தாய், அன்னாகரீனா, அன்னைவயல், அம்மாவந்தாள், மோகமுள், நினைவுகள் அழிவதில்லை, கோபல்லகிராமம், கதவு,வேட்டி,ஏழுதலைமுறைகள், புளியமரத்தின் கதை, ஜேஜே சிலகுறிப்புகள், சூரியதீபன், தனிகைச்செல்வன், எஸ்ஏபி, கந்தர்வன், கோணங்கி, தமிழ்செல்வன், சுந்தரராமசாமி,பழய்ய முற்போக்கு எழுத்தாளன் ஜெயமோகன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி,
மாதவராஜ், வண்ணநிலவனின் கடபுறத்தில் வரும் பிலோமிக்குட்டி, சாமிதாஸ்,ரஞ்சி,பவுலுப்பாட்டா,மணப்பாடு,கருவாடு,கடலிறைச்சல். எல்லாம் எழுத்தாகவும் நிஜமாகவும் குவிந்து கிடந்தார்கள். இப்போது நினைத்தாலும் மலைப்பாய் இருக்கிற புத்தகக் குவியல்களை நான் ஓசியிலே படித்தேன் என்பதைப் பெருமையோடு சொல்லவைத்த பெருங்கதையாளன் கிருஷ்ணகுமார்.
தோழர் எஸ். ஏ. பி அப்போது விருதுநகர் மாவட்ட சிபிஎம் கட்சிச் செயலாளராக இருந்தார்.ஆனால் நூற்றுக் கணக்கான இரவுநேரங்களில் எங்களுக்கு கதை சொல்லுகிற வாலிபத் தாத்தாவாக இருந்தார். ஆறடிக்கும் மேலான அவரது ஆஜானுபாகம் சிரிப்புக் கதைகள் சொல்லும்போது சுருங்கிப் போகும். மாப்பஸானையும், ராகுல்ஜியையையும், பிரேம்சந்தையும், கிருஷ்ணன் நம்பியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய மொழிபெயர்ப்பாளர் தோழர்
எஸ் ஏ பி. எனது முதல் கதையான 'பூச்சிக்கிழவியை' பிரசுரித்து உச்சி முகர்ந்த பெரியதகப்பன் தோழர் எஸ்.ஏ.பி.
அங்குதான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி கண்களை உருட்டி,கைகளை ஆட்டி,குரலை மாற்றிப் பேசிக் கொண்டே கதைகளோடு வருவார். நாரணம்மாவை விடவும் உலுக்குகிற வறுமைக் கதைகள், மிகத்தரமான வெள்ளந்திச்சிரிப்புகளைச் சொல்லும் செந்தட்டிக்காளை கதைகள் எல்லாமே எங்களுக்கு வாய் மொழியாகச் சொன்ன பிறகே அச்சுக்கு வரும். சொல்லுகிற விஷயங்கள்,எப்போதும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும்.சமூக அநீதிகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற விதி வயப்பட்டவர்களாக இல்லாமல் அதன்மேல் கேள்விகளை வைக்கிற இருவராக எங்களை மாற்றியது அந்த கதைப் பட்டறை 42 பி.எல் எஃப் தெரு.
அதிலிருந்து முதல் மண்குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு அதன் குளிர்சியோடு தனது கதைகளுக்குள் கூட்டிப்போன என் தோழன் மாது,ஒரு போராட்டத்தை மெல்லிய உணர்வுகளைச் சொல்லுவதன் மூலம் அனு குண்டைவிட அதிக உக்கிரத்தைக் கொண்டு வரலாம் என்று தமிழ் கதைப் பரப்புக்குச் சொன்னவன். நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எடுத்து வீசு என்று பாதை செய்து கொடுத்தமாது. பெற்ற தாயோடும்,கட்டிய மனைவியோடும் மல்லுக்கட்டி தோளில் கைபோடுகிற நண்பன் இருந்தால்எதையும் வெற்றிகொள்ளலாம் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிற கதைகள் அவனுடையது.மிகுந்த கூச்ச சுபாவத்தோடு இருந்த அவனே மிகச்சிறந்த கதை சொல்லியாக மாறினான்.மாது ஒரு சாதாரண விஷயத்தைக் கூட நீங்க சொல்லிக் கேக்கனும் என்று எங்கள் தோழர் தனுஷ்கோடி ராமசாமி புளகாங்கிதப்படும் மாதுவின் தோளில் கைபோட்டபடி இன்னும் சின்னப் பிள்ளைகள் போல அலைகிறோம்.நான் ஒரு எழுத்தாளன் ஆனதும், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டதும் எனக்கே இன்னும் ஆச்சரியமாக இருக்கிறதுஅவனது அருகாமை போல.அதே போலவே இதோ இந்த வலை.கம்ப்யூட்டர் என்றால் என்னவெனத்தெரியாத என்னை ஒரு வலைப்பதிவராக மாற்றியதும். இங்கிருக்கிற உலகளாவிய கதை சொல்லிகளோடு இணப்புக் கொடுத்ததுவும் அவனாலே ஆனது.
தங்களது பேச்சில் அநியாயத்துக்குச் சிரிப்புக்காட்டுகிறவர்கள் தமிழ்செல்வனும்,ஷாஜஹானும்.அதே போல உலுக்கி அழவைக்கிற கதைப்பாங்கும் நிறைந்த கதைசொல்லிகள். இன்னொருவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. தாட்சண்யமில்லாது இந்த ஜாதியக் கட்டுமானங்களின் மேல் குற்றம் சுமத்தும் அவரது எழுத்தை எல்லோரும் பிரமிப்பது போல நானும் பிரமித்தேன்.எள்ளல் வழி கதை சொல்லும் மொழி அவருடையது.கதைகளிலே தீராக் கோபத்தை,கட்டுரையை சேர்த்துக்கொடுக்கும் வல்லமை எழுத்து.எனக்கு எழுதவேண்டிய பல கருக்களை உருவாக்கித் தந்தது.
கதைகளை,எழுத்துக்களை,கலைகளை ஒருபோதும் சரஸ்வதி சொல்லிக்கொடுப்பதில்லை.ஒருவேளை சமூகத்திலிருந்து கிளம்பி வந்த சரஸ்வதி என்கிற டீச்சரோ பாட்டியோ சொல்லிக் கொடுத் திருக்கலாம். அதுபோலவே பிறவிக்கலைஞன் எவனும் இல்லை.கலைஞனை உருவாக் குகிற தட்ப வெப்பம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. மக்களுக்கான நிறமாக்கும் பெரும்பதாகை எங்கள் தமுஎச. அங்கே என்னையும் மாதுவையும் வளர்த்தெடுத்த பல ஆயிரம் தோழர்கள் இருக்கிறார்கள்.புதிதாய் முளைக்கும் எழுத்துக்களைச்.சீராட்டுகிற தாயுள்ளம் கொண்ட தமுஎச எனக்கு அழியா நிறம்கொண்ட பல கதைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் முட்டாள்,நாற்பது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவன் முட்டாள் என்கிற சந்தர்ப்பவாத பழமொழி ஒன்றுண்டு.
இளமையோ முதுமையோ பொதுவைப்பேசாத கதைகள் உண்டா?
வெயிலானை, கதிரை,ராகவனை, பாராவை,ஆடுமாடை, அருணாவை, அமித் தம்மாவை, என்னுடன் பிறப்பு முல்லையை, லாவண்யாவை, தீபாவை, பத்மாவை,வித்யாவை.....இன்னும் சொல்லவேண்டிய மிகச்சிறந்த கதைசொல்லிகளின் வழியே என் தீராத கதைத் தேடல் தொடர்கிறது.
இந்தா பாருங்க இடையில் வந்து பிழைப்பு அழைக்கிறது.
நன்றி தீபா.
Showing posts with label கதைசொல்லிகள். Show all posts

27.3.10
26.3.10
காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை. ( தொடர் பதிவு 2 )
ஒரு எட்டுகிலோமீட்டர் தூரத்தை பேருந்தில் போனால் அரைமணி நேரத்தில் கடந்துவிடலாம்.ஆனால் அந்தக்கதையை இரண்டு மணிநேரம் சுவாரஸ்யப்படுத்திச் சொல்லுகிற பலபேர் இருந்தார்கள்.அண்டரெண்டாப் பட்சிகளின் இறக்கைகளை பேருந்துகளின் சக்கரங்கள் பிடுங்கிக்கொள்ளும். ஸ்கைலாப் ராக்கெட் இந்தியாவில் விழப்போகிறது என்ற களேபரம் நடந்துகொண்டிருந்த போது. பம்பு செட்டை வித்து ஒருவாரம் சோறு,கறி பொங்கித் தின்ன குடும்பங்களும், ஆசை ஆசையாய் வளர்த்த ஆடு ,கோழிகளை அடித்துத் தின்ன கதைகளும் நிறைந்தது கிராம வாழ்க்கை.
மேல்நிலைப் பள்ளியில் நுழைந்ததும் என்னை தன் கதைகளால் இழுத்துக்கொண்டு போன வசியக்காரன் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. அவர்தான் என் தமிழாசிரியர். அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து மாணவர்களை வெளியே இழுத்துக் கொண்டுபோய் சுதந்திரம்,பொதுச்சிந்தனை,சமத்துவம்,காதல் என்கிற பெருவெளிக்குள் அலையவிட்டவர் அவர்.அப்போது தான் புத்தகங்களின் வாசம் உக்கிரமாக அடித்தது. லீவுநாட்களில் 'ஆடுமேய்க்கிற மாதிரி அண்ணனுக்கு பொண்ணுப்பார்க்கிற மாதிரி' என்கிற சொலவடையை உண்மையாக்க. அந்தக் கலைச் செல்வியை பார்க்கப் போகிற சாக்கில் நூல்நிலையம் நுழைந்தோம்.அம்புலிமாமா,துப்பறியும் ரிப்கர்பி களைத் தள்ளிவிட்டு சாண்டில்யன் வந்து உட்கார்ந்து கொண்டார்.அதில் வருகிற காதலுக்காக வீரம் வேல் கம்புகளையெல்லாம் படித்துக் கழித்தோம்.
எனது அண்ணன் அந்தோணியும்,எங்கள் ஊரின் முதல் கல்லூரிப்பெண் அன்னபூரணமும் புதிய புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்கள்.திரிவேணி சங்கமம் கதையில் வரும் ஜேனட்டை நான் பூஜிக்க ஆரம்பித்தேன்.அதற்கு காரணம் சுஜாதாவின் எழுத்தா ஓவியர் ஜெயராஜின் ஓவியமா என்று பட்டிமன்றம் வைக்க வேண்டியதில்லை ரெண்டு கலைஞர்களின் சின்க்ரனைஸ் மட்டுமே காரணம்.ஜேனட்டின் சாயலில் பின்னால் வந்த அவள் அப்படித்தான் ஸ்ரீ்பிரியாவையும் பூஜிக்கத் துவங்கினேன். நூறு பக்கங்களுக்கு மேலிருக்கும் நாவல் படிக்க வேண்டி சாண் டில்யனுக்காக அலைந்த காலத்தில் அவர் கிடைக்காமல் 'போரே நீபோ' என்கிற ரஷ்ய நாவல் படிக்க நேர்ந்தது, அதைச் சொன்னபோது அப்படியா நீ ஜெயகாந்தனைப் படி என்று சொன்னார்கள்.சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நடகம் பாக்கிறாள் இரண்டையும் அடியும் துடியுமாகப் படித்தேன்.
பாண்டுகுடியில் வேலைக்குப் போனதும் என்னைச் சுற்றியிருந்த ஊரும் நண்பர்களும் தூரமானார்கள். அவர்கள் இல்லாத வெற்றிடத்தை கனவுகளாலும் புத்தகங்களாலும் கழித்தேன்.ஜெயகாந்தனின் தொடர்கதைகள் கிடைக்கிற வாரப்புத்தகங்கள்,பாலகுமாரன் சுஜாதாவின் வாரப்புத்தகங்கள் தராசின் ரெண்டு பக்கமாக மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது.
ஆத்மாநாம் ஜெயித்து விட்டான்.ஆத்மாநாமைப்போல பல தீவிரக் கதைகளோடு என்னை நெருங்கி வந்த 'மகஇக' தோழர்கள் கொடுத்த புத்தகங்கள்,பாலச்சந்தரின் கமலஹாசன்,கண்சிவந்தால் மண்சிவக்கும் சினிமா,இலங்கைத்தமிழ் பிரச்சினை என என்னையறியாமலே இடதுபக்கம் திருப்பியது.
அப்போது பீகே என்கிற கிருஷ்ணகுமார் பாண்டுகுடியில் நான் தங்கியிருந்த அறைக்கு வந்தார்.பாண்டியன் கிராமவங்கி ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக்க வந்த அவர் நான் படித்த புத்தகங்களை பட்டியலிடச் சொன்னார்.சில முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக தீவிர புத்தகங்களின் பெயரை ஒழித்து வைத்துக்கொண்டு பாலகுமரனையும் சுஜாதாவையும் சொன்னேன்.வாசிக்கும் பழக்கம் குறித்த ஒரு சீனப் பழமொழியைச் சொன்னார்,அவர் சில புத்தகங்களைத் தெரியுமா எனக்கேட்டார் தெரியாதெனச்சொன்னேன். சங்க வேலைக்கு ஆவான் என்று என்னைச் சாத்தூருக்கு மாற்றலாக்கி அழைத்து வந்தார். என்னைச் சாத்தூருக்கு அழைத்து வந்ததில் அவருக்கு உள்நோக்கம் இருந்ததா.இருந்தது. சாத்தூர் எனக்கு ¨வைப்பாறு, வெயில், சங்கம்,தோழர்கள், எல்லாவற்றையும் விட அரிதான புத்தகங்கள் புத்தகங்களையும் விட உன்னதமான நட்பை எனக்கு அறிமுகப்படுத்தியது.

25.3.10
காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை.
அன்புக்கினிய தீபாவுக்கு நன்றி.
கதை சொல்லியின் கதையை இன்னும் ஆயிரம் முறை சொன்னாலும் எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான நினைவுப் படிமங்கள் மேலெழுந்து வருகிறது.
மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் கதைகளால் குளிர்ந்து கிடக்கும்.அப்போதிலிருந்தே நாங்கள் தயாராகிவிடுவோம் கதைகேட்க.ஆமாம் எங்களுக்கான கதை
பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும் பொதுவானவர்கள்.வடிவம்மாள்,பக்கியக்கிழவி,மரியசெல்வம்,
வெள்ளச்சி,அய்யம்மாக் கிழவி,பாப்பாத்தி என்று ஒரு பட்டாளம் இருக்கும்.மடி நிறைய்யக் கதைகளை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குரல்,ஒரு உத்தி இருக்கும்.அங்குவிலாஸ் போயிலை,கொட்டப்பாக்கு வெத்திலை,டீ ஏ எஸ் பட்டணம் பொடி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனி வாசனை இருக்கும்.இருந்தாலும் வார்த்தைகளே சித்திரமாய்,காட்சியாய் விவரிக்கிற லாவகம் வழி வழியாய் ஒரே மாதிரி இருக்கும்.அதன்பிறகு இன்றுவரை சுண்டி இழுக்கும் கதை சொல்லிகள் எங்கும் தட்டுப்படவில்லை.
எதிரும் புதிருமான வாசல் படிகளில் தலைவைத்து தெருவில் கால் நீட்டிப் படுத்துறங்கும் அந்தக்கிராமத்து கோடை காலங்கள் இனித்திரும்பவே திரும்பாது.நடு இரவில் கயா நகரத்து புகை வண்டி நிலையத்தில் இறங்கும்போது படுத்துக்கிடந்த நெல்லறுக்கும் ஆயிரக்கணக்கான கூலிக்கார பீகாரிகளைப் பார்த்தோம். அந்தக்குளிரிரவை கண்ணீர் உஷ்ணமாக்கியதை என் தோழன் மாதுவிடம் கூட மறைத்து விட்டேன்.காட்சியாகப் பதிவு செய்யமுடியாத அந்த அமானுஷ்ய இரவுச் சித்திரம் நினைவுகளின் மூலைக்குள் கிடந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறது. நடு இரவு வரை நீளும் கதைகளுக்கு காதைக் கொடுத்தபடி எங்களோடு வானத்திலிருக்கும் நட்சத்திரங்களும் முழித்துக்கிடக்கும். ஊங்கொட்டுகிற கடைசி ஆளாய் பலசமயம் நானிருப்பேன்.அந்தக் கதைகளை எல்லாம் எப்படியும் ஊருக்குச்
சொல்லாமல் போவதில்லை.அதற்கான முயற்சியோடு அவற்றை பாதாளக்கரண்டி போட்டுத் துழாவிக்கொண்டே இருக்கிறேன்.தட்டுப்படுகிறவை தேடுதல் வேட்டையில் குறிவைக்காத வேறு வேறு கதைகளாகி எனது எழுத்தாகிறது.இன்னும் முழுக்கதையும் கிடைக்கவில்லை செல்லரித்த பழய்ய கருப்புவெள்ளை நிழற்படம்போல திட்டுத் திட்டாய் மட்டுமே கைக்குக் கிடைக்கிறது.
அண்டரெண்டாப்பட்சி,மாயக்கம்பளம்,சுண்டெலியண்ணன்,ராஜகுமாரன்,அவனது காதலி விஜயா,மச்சக்கன்னி,நாகக்கன்னி,ஏழுமலை, ஏழுகடல்,உயிரைப்பதுக்கி வைத்திருக்கும் கிளியின் கால்கள்.அவற்றைப் பாதுகாக்கிற கருநாகங்கள் என்று தங்களை உடனுக்குடன் உருவம் மாற்றிக்கொள்ளும் கதைமாந்தர்களாய் பாட்டிமார்களின் வார்த்தையிலிருந்து கிளம்புவார்கள். நல்லதங்காள் கதை சொல்லும்போது எல்லாக் கதை சொல்லிகளும் நிச்சயமாய் அழுதுவிடுவார்கள். அதற்கான காரணம் கவசகுண்டலமாக அவர்களோடு ஒட்டிப்பிறந்த வறுமையும்,சகோதர பாசமும் என்பதை ஒரு கால் நூற்றாண்டு கழித்துத் தான் தெரிய நேர்ந்தது.கதை சொல்லிகள் அழுத பின்னாள் கதைகேட்பவர்கள் கதி என்னாகும். நல்ல தங்காளின் கடைசிப் பிள்ளையாக விட்டுவிடு நான் மட்டும் பிழைத்துக்கொள்கிறேன் அம்மா என்று மனசு கிடந்து கதறும்.
வறுமையையும்,பசியையும்,நீர்த்துப் போகச்செய்ய அவர்களுக்கு கிடைத்தவை உழைப்பும் அதோடு கூடப்பிறந்த கதையாடல்களும்தான்.பல ஞாயிற்றுக் கிழமைகளில் அருணாசலக்கிழவன் தடித்த புராணக்கதைப் புத்தகங்களைத்
திண்ணையில் வைத்து ராகம் போட்டுப்படிப்பார்."ஏ தாத்தா கதைய நிப்பாட்டு, ஒத்த வப்பாட்டிய வச்சிக்கிடே ஒரு நாளைக்கு ஏழுதரம் சண்ட போட்ற,எங்க வெள்ளச்சிக் கிழவிகிட்ட பய பரட்டன்னு நாற வசவு வாங்குற,அன்னக்கி கூட கலிமட்டயிட்டு அடிவாங்கி வலிதீர ஏண்ட சாராய்ங்கேட்ட,ஆனா அந்தத் தாயோளி தசரதன காலம்பூறா ராசா கடவுளுண்ணு எப்பிடிச் சொல்லலா " இப்படி ஐயண்ணா சுந்தரப்ப மாமா கேள்விகேட்டதும் புத்தகத்தை மடிச்சுவச்சுட்டு "போங்கடா குடிகாரப்பயலுகளா" என்று துண்டை உதறித்தோளில் போட்டபடிக்
பதிலற்றுக் கிளம்பிவிடுவார்.
காத்திருந்த ஊர்ச்சனம் 'கதையக்கெடுத்த குடிகாரப்பாவி' என்று திட்டவும் ரோசப்பட்டுப்போய் சம்மணம்போட்டு உட்கார்ந்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார். "அண்ணம் மாரே தம்பி மாரே அருமையுள்ள அக்கா மாரே மன்ன மணிக்குறவன் மாண்ட கதையச் சொல்லி வாரன் மக்களப்போல நினச்சு மண்ணிக்க வேணும் பிழ பொறுத்து" பத்துக்கட்டையில் பாடும் சுதிக்குத் துணையாக ராசாச்சித்தப்பா மாட்டுச்சவ்வு கட்டிய பானைத் தாளத்தைக்கொண்டு வந்துவிடுவார் அன்று உடனடி சிவராத்திரிதான்.விடிய விடிய நடக்கிற ஜுகல் பந்தியில் பார்வையாளரும் பாடகராவார்கள்.கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ என்று பாடிக்கொண்டே கல்லுடைக்கும் பகாரி மாமன் அழுதுவிடுவார். இத்தனைக்கும் சாகுமட்டும் அவர் கடல் பார்த்ததில்லை.அந்த இறுக்கம் தீர பாம்பாட்டிக்காளியப்பன் 'காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானே ஊமத்தொற' என்று பாடுவார்.ஏய் மணிக்குரவங் கதையில ஊமத்தொறைக்கு என்ன சோலி,குடிச்ச போதை கொறயலயா என்று கஞ்சிரா அடிக்கும் மாடசாமிச்சித்தப்பா கேட்டதும். 'வாய்யா வாத்தியாரு', மூனு மணி நேரமா தொண்ட கிழியக்கத்துறனே வெல்லக்கட்டி,காபிந்தூளு இல்லாமலா போச்சி இந்த சூரங்குடியில" என்று கேட்கவும் ஆவிபறக்க சுக்குக்காப்பி கூட்டத்துக்குள் வரும்.
நடு இரவில் குடிக்கிற வரக்காப்பியின் ருசி,காட்டிலே களையெடுக்கும்போது குடித்த கம்மங்கூலின் ருசி,குளம்பு வேகுமுன் அடுப்பில் சுட்டுத்திண்ண சுவரொட்டியின் ருசி,மேமாதச் சுடுவெயிலை புளியம்பழப்பானக்ரகத்தோடு
கழித்த ருசி இன்னும் தொண்டைக்குள்ளே நிற்கிறது, இந்தக்கதைகளோடு.
காப்பித்தண்ணி குடித்துவிட்டு பீடி பத்தவைத்து "எலே சுந்தரப்பா கொனத்துலயு தங்கக்கொனம் அல்லிலே லேலோ ன்னு படிக்கம்போது கூட்டத்தப் பாத்து பயந்து பயந்து படிக்கியே எதுக்கப்பா" இப்படிச் சொல்லவும் கூட்டம் கெக்கெக்கே என்று ஒரே சுதியில் சிரிக்கும்." ஏ மாமா ஓங்கதைய எங்காகிட்டக் கேக்கனும் நீ வந்து ஊர்க்கத பேசுறயா" என்று கூட்டத்துக் குள்ளிருந்து பதில் வரும்.இப்படிச் சாவகாசமாய் உட்கார்ந்து பேசிச் சிரித்து கதைகளுக்கு இடைவேளை விடுவார்கள்.
நானும் தான்.

Subscribe to:
Posts (Atom)