வழிதவறிப்போன பசிநாட்களில்கிடைத்த கனிமராமாய்வலைத்தளம் ஏறினேன்.
எழுத்திலைகளுக்குள் மறைந்துகிடக்கும் சிநேகக்கனிகளில் கைபடாது சுவைக்கநேர்ந்ததென் பசியாற.
பார்த்தமாத்திரத்தில் கிடைக்குமா பாத்திர விரிப்பில் மனசின் செழுமை எழுத்தில் தெரியுமா கரங்களின் மென்மை.
ஒருவேளை தெரியாமல் போனாலும். இடைவெளியில், நிறுத்தக்குறிகளில், இழுத்துச்செல்லும் தொடர்கமாக்களில்தெரிந்துவிடும் அன்பும் சிநேகமும்.
அரண்மனை,அலுவலகம்,ஓலைக்குடிசை,தூக்கணாங்கூடு என்று நிறுவிக்கொள்ள இடம் கிடைத்தாலும் காற்றின் அசைவுகளை எதிர்மடக்கிச் சிறகடிக்கும் பறவையின் நிஜமே அதன் இருப்பிடம்.
தேர்த் திருவிழாவின் சமுத்திர அலைவில் ஒரு துளியாவதும். எண்ணவியலாப் பக்கங்களில் விரியும் ஓரெழுத்தாகவும் இருப்பதென்ன இழுக்கு.
எழுதுகோலின் அசைவில் எந்ததேரையும் திசை திருப்பும் வல்லமை ஒளிந்திருக்கிறதெனும்நெம்புகோல் மனதோடு எழுந்து வரவேண்டுகிறேன்.
|