வாத்தைகளை நசுக்குகிற, ஈரக்கொலையை தடதடக்க விடுகிற, ஒரு முறை பார்த்துவிட்டால் நாள்கணக்கில் கருநிழலாகத்தொடர்கிற காட்சி. இன்று இரவு ஏழரை மணி ராஜ் தொலைக்காட்சியில். இனவெறி இலங்கை அரசின் ராணுவப்பிரதிநிதி ஒருவன், இரண்டு தமிழ் சிவிலியன்களை துகிலுரித்து ஒரு காட்டுப்புல்தரையில் வைத்து கொலை செய்கிற காட்சி.மனிதாபிமானம் மிச்சமிருக்கிற எவரையும் உலுக்கும் காட்சி. அதைப் பார்த்த எவரும் இனி இந்தப்பூமியை பூவுலகென்று சொல்லக் கூசுகிற காட்சி. ஐநா சபை, செஞ்சிலுவைச் சங்கங்கள்,சார்க் அமைப்புகளையெல்லாம் அம்மணப்படுத்துகிற இந்த ஒளிக்காட்சிக்கு சர்வதேச உலகம் பதில்சொல்லியே தீரவேண்டும். மனித உயிர் இப்படி விளையாட்டுப் பொருளாவதை வெறும் காட்சியாகக் கடந்து போக சர்வதேச சமூகம் அனுமதிக்குமேயானால் அதைவிடக் கேவலமான செயல் ஏதுமில்லை. I call the international humanitarians and Bloggers to keep a minute silence, to raise our solidarity voice against the inhuman state of violence of canibals govt. |
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
26.8.09
பிணம் தின்னும் அரசு.
31.5.09
மனிதாபிமானம் குறைந்த போன சர்வதேச சமூகம்

போருக்கு சம்பந்தமில்லாத ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு லட்சக்கனக்கானோர் அகதி முகாமில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் ஏதுமற்ற குப்பைக்கிடங்காக மாறியிருக்கிறது பேயரசின் அகதிகள் முகாம். பெண்களும் குழந்தைகளும் படும் அவஸ்தைகள் பட்டியலிடமுடியாத கொடூரங்கள். அகதிகளுக்காக பிற நாடுகளிலிருந்து குவியும் உதவிகள், லங்கா அரசின் பதுக்கலுக்குள் மறைந்துவிடுகிறது. கொடூரமான இந்தச் செய்திகள் எல்லாமே அரசின் கட்டுப்பட்டை மீறிக் கசிந்தவைகள். இன்னும் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் அணுமதிக்கப்டாத இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறது இலங்கை அரசின் அகதிகள் முகாம். 27.5.2009 அன்று ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த மனித உரிமை மீறலுக்கெதிரான தீர்மானம். ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்ககோரிய மிகசரியான அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்த தீர்மானம் இலங்கைப் பேரழிவு குறித்த ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக்கை. தீர்மானத்துக்கு ஆதரவாக ஒன்பது நாடுகளும், எதிராக 29 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன ஆறு நாடுகள் நடுநிலையில். தீர்மானத்து எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பகிஸ்தான் முக்கியமானவையாகும். இதில் அதிர்ச்சி தரக்கூடிய விசயம் கியூபாவும் தீர்மானத்துக்கெதிராக வாக்களித்ததுதான். உலகம் முழுவதும் நடக்கிற விடுதலைக்கான போராட்டக்காரர்களின் நெஞ்சில் ஏற்றுகின்ற மானசீக இலச்சினை சேகுவாரா. அவன்தான் இந்த, நூற்றாண்டுக் கதாநாயகன். உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீ தோழன் என்று சொன்ன சேகுவராவின் உக்கிரம் என்ன ஆனது?. '' வரலாறு என்னை விடுதலை செய்யும் '' என்று சிறைப் பிடிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் முழங்கிய சொற்பழிவு சர்வாதிகாரத்துக்கெதிரான குரலாக காலந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கியூப அரசு ராஜபக்சேயை ஆதரிப்பதால் பாடிஸ்டாவின் ஆவி கெக்கலிட்டுச் சிரிக்கிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து மீள மனிதாபிமானம் உள்ள எல்லோருக்கும் நீண்டகாலம் ஆகும். |
Subscribe to:
Posts (Atom)