முன்னமெல்லாம் நடுவழியில்
வாகனங்களை நிறுத்தி
காசுபுடுங்கினால் அதுக்குப்பேர் வழிப்பறி.
இப்போ அதே சோலியை யூனிபார்ம்
போட்டுக்கிட்டு செஞ்சா
அதுக்குப்பேர் போக்குவரத்து காவல்துறை
இனிமே ரசீது கொடுத்து புடுங்குவான்லா
அதுக்குப்பேர் டோ ல்கேட்.
முன்னமெல்லாம்
ஆலும் வேலும் அவனவன் பல்லுக்குறுதி
இப்பெல்லாம்
பல்விளக்கினால் ப்ராக்டர் அண்ட் கேம்பிள்
கல்லாவுக்கு உறுதி.
முன்னமெல்லாம் பேசாத ஆளைப்பாத்து
பேச்சிமுத்தா அவம் பேசக்காசுகேப்பானின்னு
கேலி பேசுவாங்க.
இப்பல்லாம் யார் யாரோட பேசினாலும்
எடுத்து வைக்கனும் நிமிசத்துக்கு 49 பைசா.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
அரசியலில் புகுந்து அள்ளிக்கொட்டுதல்,
சினிமாவில் சேர்ந்து தூத்திக்கொள்ளுதல்,
பத்து வட்டிக்குக்கொடுத்து பறித்துக்கொள்ளுதல்,
பச்சை நெலத்த கூறுபோட்டு ரியல் எஸ்டேட் நடத்துதல்,
அன்னயாவினும் சுலபவழி ஆங்காங்கே
ஆங்கிலப்பள்ளி எஞ்சினீயரிங் கல்லூரி கட்டுதல்.