எங்கிருந்தாவது வந்து செவிகுளிரும்,நரம்புகளூடோ டி உதிரம் உருகும்,தலையாடும் காலாடும், சூழல் நிராகரித்துச் சிந்தனை குதியாட்டம் போடும்,இசையால் குழந்தைத் தன்மையைக்கொண்டு வரமுடியும்.
ஒருவருடம் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் கரைந்துபோனது என் பல முன்னிரவுகள்.களிமண் குழைந்து குழைந்து பாண்டமாகும் நுட்பமும்.றுங்கல் உடைந்து உடைந்து சிலையாகும் நுட்பமும் பயிற்சியால் சாத்தியப்படும். அதை நிரூபித்துவிட்டார்கள் அந்தக் குழந்தைகள். ஸ்ரவனைக்குழந்தை என்று ஏற்றுக்கொள்ளத்தான் கொஞ்சம் லாஞ்சனையாக இருக்கிறது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக்கண்டு சில நேரம் வியக்கவும் சில நேரம் முகம் சுழிக்கவும் நேர்ந்தது. அந்த ஸ்ரீகாந்த் சொந்தமாக மூச்சாப்போகத்தெரியாத வயசில் 'ஏரிக்கரைமேலே போறவளே பொன்மயிலே' பாடும் போது அவன் தொலைத்த பால்யம் நினைவுக்கு வராமல் போகாது.
ஒரு வாரமாகக் கொண்டாட்டம்,எதிர்பார்ப்பு,பார்வையாளர்களை ஆர்வத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்த வியாபார உத்தி இவைகளை ஸ்டார் தொலைக் காட்சி கச்சிதமாக்கியது. ஆச்சு. நேற்று எதிர்பார்த்தபடியே அல்கா அஜீத் முதலாவது வந்துவிட்டாள்.அவளது குரலில் ஒரிஜினல் பாடல்கள்கூட கூனிக்குருகும் நுனுக்கமும் பயிற்சியும் பொதிந்து கிடந்தது.எனக்குப்பிடிக்காத பல பாடல்களை அவளின் குரல் விருப்பப்பாடல்களாக உருமாற்றித்தந்தது.
பலநேரங்களில் அலுவலக, இயக்க, குடும்ப நெருக்கடிகளையும் இறுக்கத் தையும் தளர்த்திவிட்டது அல்காவின் குரல் தேடிய இந்த நிகழ்ச்சி.
சின்னச்சின்ன இழப்புகளையும்,தோல்விகளையுமே தாங்க முடியாத இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை இப்படி கூடத்தில் உட்கார்ந்து வரித்துக்கொள்கிறபோது.யுகயுகமாய் தோத்துப்போன உழைப்பாளர்கள் எம்ஜியாரை,ரஜினியை,அஜித்தை நாடிப்போவதில் வியப்பில்லை. வெள்ளத்தனைய நீர்மட்டம். 'விரலுக்கு, விரலுக்குத்தக்கன வீக்கம்.உரலுக்கு உரலுக்குத்தக்கன வீக்கம்'.
சம்பாதிப்பதில் சரிபாதி சந்தோசத்துக்குச் செலவிடும் வளமை கொண்டது மேலை நாடுகள்.வார இறுதியென்பது அவர்களுக்கு ஒரு பொங்கல், தீபாவளியைப் போலவே கழியுமாம். வெறும் ஓய்வோடு நில்லாது உற்சாகத்தை பாடத்திட்டமாக்கும் அவர்களது வாழ்வில் உடனுக்குடன் புத்துணர்வு ரீசார்ஜ் செய்யப்படுகிறது.வறுமையும், அசமத்துவமும் குறைச்சலாகி அன்றாடத் தேவைகளுக்கு அவர்கள் உயிரைப்பணயம் வைக்கத்
தேவையில்லாத வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.
ஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.
அந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா ?
ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா ?.
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
18.6.10
5.11.09
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்.
| ஒருகாலை வேலையில் கலைஞர் தொலைக்காட்சி சந்தித்த வேளை நிகழ்சியில் கண்ணதாசன் நற்பனிமன்றத்தலைவர் ஒருவரின் நேர்கானல் ஒளிபரப்பாகியது. அவர் பல முரணான தகவல்களைப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனார். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகுதான் தமிழ் மக்கள் இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாக அறிந்தார்களாம். அதிர்ச்சியாக இருக்கிறதா இன்னும் கேளுங்கள். உழைக்கிற மக்கள் திரளில் உள்ளவர்கள் படித்து பெரிய பெரிய சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகளாக மாறிவிட்டாகளாம் அதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். விஞ்ஞானம் நாற்று நட, கதிரறுக்க,என விவசாய எந்திரங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் கருத்து தெரிவித்தார். விவசாயம் நசிந்து வருவதற்கு பல காரணிகள் இருக்கிறது என்பதை மறைத்து பொதுவாகவே பல பிரபலங்கள் கூட இதையேதான் சொல்லுகிறார்கள்.கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மையா.? இல்லை. இந்திய அரசு நிர்ணயித்திருக்கிற குறைந்த பட்சத் தினக்கூலி என்பது ரூ231.69பைசா. அதைக் கொடுக்க விவசாயிகளெல்லாம் தயாராகக் கையை நீட்டிக் கொண்டிருந்தது போலவும் அவர்கள் அதையெல்லாம் வேண்டமென்று உதறித் தள்ளிவிட்டு ஊதாரித் தனமாக விவயாக் கூலிகள் அலைகிற மாதிரியும் ஒரு மூட நம்பிக்கை பரப்பி விடப்படுகிறது. பெண்களுக்கு தினம் நாற்பது முதல் அறுபது ரூபாயும் ஆண்களுக்கு அறுபது முதல் எண்பது ரூபாயும் தான் விவசாயக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு என்னென்ன வாங்கிவிட முடியும்?. ஒரு படி நெல் அதுவும் பொக்குநெல் அதிகம் கேட்டதற்காகத்தானே வெண்மனியில் கருகியது நாற்பது உயிர். நிலப்பிரபுத்துவ முறையும், பண்ணையடிமை முறையும் ஆழ வேரூன்றிக் கிடந்த காலங்களில் பழைய கஞ்சியையும் ஊறுகாயையும் கொடுத்து மாட்டை விடக் கேவலமாக மனிதர்களிடம் உழைப்பை உறிஞ்சிய காலம் விவசாயிகளுக்கு பொற்காலம். விவசாயக் கூலிகளுக்கு ?. விவசாய இடுபொருள், உரம் இவைகளின் விலைகளை வெளிநாட்ட்டு முதலாளிகள் நிர்னயிப்பதும். விளைந்த பொருட்களின் விலையை உள்ளூர் முதலாளிகள் நிர்ணயிப்பதுமான சிக்கல்களில் விவசாயிகளின் கோவணங்கள் உருவப்படுகிறது. அதை மீட்கக்கிடைக்கும் மாண்யத்தையும் கடல்தாண்டிய உத்தரவுகள் தடுக்கிறது. இது பற்றி யோசிக்கத்தெரியாத, பேசத்தெரியாதவர்களின் அரை வேக்காட்டு பொருளாதாரத் தத்துவமே இப்படித்தான் இருக்கும். இன்னொரு வெடிகுண்டை வீசினார் அவர். அதுதான் ஹாலில் இருந்த என்னைத் தூக்கிவாரித் தெருவில் போட்டது. இப்படி,இப்படியேதான் இந்த உலகம் மாற்றங்களைச் சந்திக்கிறதாம் " மாற்றம் என்ற சொல்லைத்தவிர மற்றதெல்லாம் மாறிவிடும்" இதைக்கூட கவிஞர் கண்ணதாசன் தான் சொன்னாராம். அதுபடிதான் நடக்கிறதாம். அப்படியானால் அந்த தாடிக்கார மனுஷன் காரல் மார்க்ஸ் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் ஒலிநாடாவுக்கு உரை எழுதினாரா ? |
Subscribe to:
Posts (Atom)
