தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையாக நெடுங்காலம் எதிர் நீச்சலடிக்கும் செம்மலர் மாத இதழ்.
மேலண்மை பொன்னுசாமி, தமிழ்செல்வன், கந்தர்வன்,உதயசங்கர், ஷாஜகான், ஆதவன்,மாதவராஜ் போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு களமும் தடமும் அமைத்துக்கொடுத்தது. சாமான்யக் குரல்களுக்கு ஒலிபெருக்கித்
தந்ததும் ஒளிவட்டமில்லாத நீங்களும் எழுதலாம் என்கிற உத்வேகம் கொடுக்கிற கிரியா ஊக்கியுமானது செம்மலர். அப்படி எழுத்தை எளிமைப்படுத்திய சமகாலப் பெரும் ஊக்கி இந்த வலைக்கு முன்னாள் விரல் பிடித்து நடத்திச்சென்ற செம்மலர் இதழில். தோழர் ந.பெரியசாமியின் கவிதை.கண்ணெதிரே நெருங்கி வரும் பேரிடர் இந்த
விவசாயம் அழிதல். கட்டுரையாய்,கோஷமாய்,போராட்டமாய் பெரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறு கவிதையாய் ஒரு பாடலாய் மக்களுக்கு அறிமுகமாகிப்பதியச்செய்யும் பெருங்கைங்கர்யம் இந்த கவிதை.
விரவும் கங்குகள்.
தட்டு நிறய்ய நாணயங்கள்
தொட்டுக்கொள்ள கிண்ணத்துள்
கலவையாகச் சில்லறைகள்
கூடவே ரூபாய்த் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...
விலைச்சலைத் தரும் நிலம்
வெப்பமாகிக் கொண்டிருக்க
நினைவில் கொள்வோம்
எங்கள் தெருவில் மழைகொட்டியது
உங்கள் தெருவில் பெய்ததாவென
வினவும் காலம்
வெகு நெருக்கத்திலிருப்பதை.
ந.பெரியசாமி.