Showing posts with label சென்னை. Show all posts

20.10.10
முகக்கவசம்
கேகே நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்.17 d யில் ஏறினால் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஆசிரியர் தேர்வாணையத்துக்குப்போகலாம் என்று சொன்னார்கள்.வந்த பேருந்து நான் நின்றிருந்த இடத்தை நெருங்கி என்னை உரசுகிற மாதிரி வந்தது.பின்புறமாக ஒதுங்கினேன் எனது குதிகாலில் சக்கரத்தை மோதவிட்டு கொஞ்சம் விலக்கி மீண்டும் பயணத்துக்குத்தயாரானான் அந்த இரு சக்கர வாகனக்காரன். சிராய்த்து விட்டது குனிந்து பார்க்குமுன் வண்டியைக் கிளப்பிவிட்டான்.அவனுக்கு என்ன அவசரமோ,எப்படியான தலைபோகிற வேலை காத்துக்கொண்டிருக்கிறதோ,எந்த இலக்குநோக்கிய லட்சியப்பயணமோ தெரியவில்லை.தன்னால் அடிபட்டவன் ஒரு மனிதன் அவனிடம் ஒரு சாரி கேட்கலாம்,இல்லை கருணையோடு ஒரு பார்வை பார்க்கலாம். இது எதுவும் அனாவசியம் என்கிற வேகத்தை எட்டிப்பிடித்து நிறுத்தினேன்.வண்டியின் பின்பகுதியைப்பிடித்து இழுத்ததில் அவனுக்கு கொஞ்சம் கோபம்.நீங்கதான் பின்னாடி பாக்காம வந்தீங்க, தப்பு ஒங்க பேர்லதான் என்றான். என் தவறை ஒத்துக்கொள்கிறேன் மிகச்சரியான சென்னை வாசியான உன் முகத்தைப் பார்க்கவேண்டும் கழற்று உன் தலைக் கவசத்தை என்று சொன்னேன்.கழற்றாமல் விரைந்து சென்றுவிட்டான்.
6.8.10
நம்பிக்கையின் நாட்கள்.
அந்தப் பயணம் இன்னும் பாத ஒலிகளோடு கூடவே வருகிறது. சென்னைப்புகைமண்டலத்தின் துகள்கள் இன்னும் தேகமெங்கும் ஒட்டியிருக்கிறது.நாங்கள் தங்கியிருந்த BEFI guest house ன் இரவுப்பொழுதுகள் ஒரு மாணவர் விடுதியின் நாட்களைப் புதுப்பித்துக்கொடுத்தது.பெரு நகர உணவுவிடுதிக்களுக்குள் போய்த்திரும்பி வருவது பேய்பிடித்தது போலாகிறது. அரிசியை விளைவித்த நிஜ விவசாயி ஒரு கவளம் பருக்கையைக் கூட தின்று திரும்பமாட்டார்.
இருந்தும் வாழ்க்கை அங்கே இருக்கிறது. ஜனங்கள் அங்கே குவிகிறார்கள்.தமிழகத்தின் தலைமை அங்கே இருக்கிறது.அவற்றைத் தீர்மானிக்கிற மினுமினுப்புகள் கூட அங்கே தான் இருக்கிறது.ஜாதி,மத,இன பேதம் மட்டுமல்ல அரசியல் பேதமற்ற ஒருங்கிணைப்பை ஒரே இடத்தில் குவிய வைக்கிற சினிமாவும் அங்கிருந்துதான் கிளம்புகிறது.
ஒரு நூறு ஆண்டுகால சினிமாவினால் இங்கே ஐந்து முதல்வர்களைத்தயாரித்து தர முடிந்திருக்கிறது.ஆனால் அங்கிருந்து தரமான சினிமாவைப் பெறமுடிந்திருக்கிறதா என்கிற கேள்விக்கு தயங்கித் தயங்கித்தான் பட்டியலிட முடியும்.எல்லாப்படைப்புகளும் ஒருவித்தத்தில் அதனதன் இடத்தில் இருக்கிறது.என்கிற பெருந்தன்மையான கோணத்தில் அலசினால் கூட தமிழ்சினிமாப் படைப்புகள் எல்லாமே ஒரே வறையறைக்குள் இருப்பத்தாக சூடத்தில் சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.காதல்,குடும்ப செண்டிமெண்ட்,நல்லவன் வாழ்வான் என்கிற மூன்று ஊடு சரடை உருவி எடுத்து விட்டால் சினிமாவில் மிஞ்சுவது சில சொற்ப படைப்புகள் தான்.
அப்படி மிஞ்சுகிற படங்களில் சிலவற்றை இயக்குனர் மகேந்திரன் கொடுத்திருக்கிறார்.முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற திரைப்படங்கள் நமக்கு மட்டுமல்ல திரைத் துறையிலிருப்பவர்களுக்குக் கூட இன்னும் மலைப்பான படங்களாகவே இருக்கிறது.அப்படி மலைக்கவைக்கிற ஒரு படைப்பாளியின் அருகில் இருந்துகொண்டு சினிமா குறித்து பேசித் திரும்பியிருக்கிறோம்.
அவரைப்பற்றி பேசுகிற சாக்கில் இயக்குனர்கள் திரு பாலுமகேந்திரா,திரு ராதாமோகன்,திரு தாமிரா ஆகியோர்களிடமும் சமகால இலக்கியம் அரசியல் குறித்தும் பேசித் திரும்பியிருக்கிறோம்.இரண்டு காமிரா,மற்றும் உபகரணங்க ளோடு பெருநகரப்பேருந்தில் பயணம் செய்து சில நேரம் ஆட்டோ வில் பயணம் செய்து பிரபல சினிமாப் படைப்பாளிகளைப் பேட்டியெடுத்து திரும்பியது மலைப்பான விஷயம் தான்.பயணத்தின் நயமான பக்கங்களை தீராதபக்கங்களில் தோழன் மாது இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறான்.
ஆனாலும் இன்னும் விடுபடமுடியாமல் அதற்குள்ளே அமிழ்ந்துபோன நிகழ்வொன்று உண்டு.அது ரெட்டைச்சுழி படத்தின் இயக்குனர் 'தாமிரா'வினுடனான சந்திப்பிலிருந்துதான். ஒரு பாலத்தின் சுவரில் அமர்ந்து கொண்டு தீவிர இலக்கியம் பேசுகிற மனிதனாக இன்னும் கூடத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிற அசலான கலைஞன்.அங்கிருந்து தோளில்கைபோட்டு அழைத்துக் கொண்டுபோய் வீட்டில் இருக்கிற தானுண்ணும் பதார்த்தங்களை பகிர்ந்து கொடுக்கிறார். ஒரு சிநேகிதனோடும் பசியோடும் அன்பைப் பழகிய நாட்களை மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் திரையுலகத்துக்கு.அவர் பேசிய போது கிழித்து எறியப்பட்ட தீக்குச்சிகள் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.அது நம்பிக்கையின் ஜ்வாலையை அடைகாத்து வைத்திருக்கிறது.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு எதிர்ச்சாலையில் தலைதெரிக்கும் வேகத்தில், நெரிசலில். முன் செல்லும் வாடகை சொகுசு உந்துவில் உரசி விழுகிறான் ஒரு இளைஞன்.அவனுக்கும் அவனது இருசக்கர வாகனத்துக்கும் பட்ட அடியும் வாகன இரைசலில் கானாமல் போகிறது.அதை அமுக்கி விட்டு சொகுசு உந்து வண்டியோட்டி பறித்த ஐநூறு ரூபாய்க்காக குரல் கொடுக்க யாருமற்ற அந்த எந்திரச்சூழலில். '..தா என்று கோப்பளிக்கிற ஆட்டோ க்காரரின் கோபத்தில் இருந்து கிளம்புகிற நம்பிக்கை.
பாண்டி பஜாருக்கு திரும்புகிற தெருவில் ஒரு பதாகை தொங்குகிறது. அதில் தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சங்கம் என்கிற பெயர். அந்தப் பெயர் எந்த நம்பிக்கையை விதைக்கிறதோ அதே நம்பிக்கை.ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரதி நிதியாக இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் திரு உமா சங்கரின் நம்பிக்கை எதுவோ அதே நம்பிக்கை.அப்படியான நம்பிக்கைதான் இந்த வியாபார சினிமா உலகத்துக்குள் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் போராடிய இயக்குனர் மகேந்திரனின் நம்பிக்கை. அவற்றை எல்லாம் சொல்ல ஒருநாள், ஒரு பதிவு போதாது.
இன்னும் நிறைய்ய பேசலாம்.

Subscribe to:
Posts (Atom)