அவரது முதிய தாயார் தனிக்கட்டையாக விருதுநகரில் குடியிருந்தார். அந்திமக்காலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர எசக்கில்லாத உடம்பு. அந்தக்காலத்தில்தான் ஊர் ஊராக, அணைக்கட்டுகள், நீத்தேக்கத்தொட்டிகள், குடிதண்ணீர் குழாய்கள் என்று அமல்படுத்திக்கொண்டிருந்தார் அந்த முதலமைச்சர். ஒரு முறை விருதுநகர் வந்த அவர் தாயைப் பார்க்கப் போனார்.அந்த முதிய தாயருக்கு முதலமைச்சரிடம் சொல்ல ஒரு கோரிக்கை இருந்தது.
தனது வீட்டுக்கு தனியாக குடிநீர்க் குழாய் இணைப்பு வேண்டும் என்று. கர்ண கொடூரமாய் மறுத்து விட்டு அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் சொல்லி அம்மாவுக்கு ஒத்தாசை செய்யச் சொன்னாராம். பொழைக்கத் தெரியாத கருப்புக் காந்தி காமராஜர்.அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.
கக்கன் தனது அந்திமக் காலத்தில் தர்மாஸ்பத்திரியின் தரையில் கோரப்பாய் விரித்து சாகக் கிடந்தாராம்.பதவியிலிருந்து இறங்கியதும் நாலுவேட்டி,நாலுசட்டை,அன்றாயர் கொஞ்சம் புத்தகங்கள் அடங்கிய தனது ஒரே சொத்தான ட்ரெங்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கட்சி அலுவலகத்துப் போனாரம் திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் நிரூபன் சக்கரவர்த்தி. அறிஞர் அண்ணா கூட மூக்குப்பொடியும் அதன் காரத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பேச்சும் இலக்கியமும் தனது சொத்தாக விட்டுவிட்டுப்போனார்.
இந்தக் கதையெல்லாம் எதோ புராணகாலத்து விராட பர்வக்கதைகளோ நாடோ டிப்பாட்டி கதைகளோ இல்லை.
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் சட்டமன்றம் சந்தித்த மகோன்னத மனிதர்களின் வரலாறு.இதை நாம் இந்த்கால சந்ததிகளுக்கு சொல்லியிருக்கிறோமா, சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.
அந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள். அவையாவும் நாகர்கோவிலிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஒவ்வொரு வளைவும் ஒரு அரசாங்க ஊழியனின் ஒருமாத சம்பளத்தைக்காவு வாங்கிய தொகை.பல்லாயிரக்கணக்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு அழைப்பிதழின் விலையும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியையின் தினக்கூலி.அல்லது ஒரு பெண் விவசாயக் கூலிக்காரிக்கு ஒரு நாள் அடுப்பெறியும் சன்மானம். குறைந்தது ஒரு கோடி செலவானது ஜாம் ஜாம் என்ற கல்யாணத்தில்.அவரது அகவுன்சிலர் பதவிக்கோ மாதச் சம்பளம் கிடையாது.
இன்னும் கூட டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தில் விற்கும் சாப்பாட்டின் விலை ஒண்ணேகால் ரூபாய்.அதேபோல அல்லது கொஞ்சம் முன்னப்பின்னதான் தமிழக அரசின் சட்டமன்ற கேண்டீனும். ஆனால் ஒரு ஐந்தாண்டில் இரண்டு முறை கூட அவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அந்தச்சமபளத்தை வைத்து எந்த அரசியல்வாதியும் அரிசி பொங்கி வடித்ததில்லை. ஒரு நாள் விடுதிவாடகையாக ஒரு லட்ச ரூபாய் செலவழித்த வரலாறு ஒரு நான்குமாதத்துக்கு முன்னால்தானே ?.
அவர்களின் வாழ்வு முறையும் செலவும், அவர்களின் சொகுசும் பங்களாக்களும்,காரும் ஒண்ணுக்கிருக்கப்போனால் கூட ஆளுயர பேனர் வைப்பதுமான படோ டோ பமும் சாதாரண ஜனங்களை அண்ணாந்து பார்க்கவைக்கிறது.
அப்படிப்பட்டவர்கள் மட்டும் தான் இனி ஆளமுடியும் என்பதை இடைத் தேர்தல்களில் காந்தி நோட்டின் மூலம் வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தச்சூழலில் நேற்றைய சட்டமன்ற விவாதத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்தும் தீர்மானத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் எம் எல் ஏ க்கள் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.கொஞ்சம் அதீதமாகத்தோன்றும்,அல்லது நகைத்துவிட்டுக்கடந்து போகும் செயலல்ல இது.நாடெங்கும் அம்மணம் தலைவிரித்தாடுகையில் வேட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு ஒரு சிலர் களம் இறங்குவது நகைப்பாகவே தோன்றலாம்.சர்வவல்லமை படைத்த,சர்வ ஆயுதந்தரித்த மாமிச மலையான கோலியாத்தை எதிர்கொண்டவன் சின்னஞ்சிறு தாவீது. அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.
12.1.10
11.1.10
வெயில் மனிதர்களும் வெள்ளரியின் ஈரமும்.
நானும் அவரும் பனிமுடிந்து உப்பத்தூர் கிளையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காட்டுவழியே வந்தோம்.அந்த அந்தி மஞ்சள் வெயிலில் கரிசக்காடெங்கும், கம்புசோளம்,சூரியகாந்தி,கொண்டக் கடலை,மல்லி,உளுந்துப் பயிர்கள் மினுங்கிக் கொண்டிருந்தன.கருத்த மண்ணில் தூவிவிட்ட பச்சை வண்ணம் அழகை கூட்டியது. அவருக்கு
சாத்தூர் தானென்றாலும் அரிசி முளைக்கிற மரம் எது எனக்கேட்கும் சுகவாசி ரகம்.ஓவ்வொரு செடியாக அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தேன்.ஒருசில காடுகளில் படர்ந்துகிடந்த அந்தக் கொடியைப்பார்த்து சுரைக்கொடியா என்றுகேட்டார்.இல்லை வெள்ளரிக் கொடியென்று சொன்னதும் ஆர்வம் அடங்காமல் வண்டியை நிறுத்தசொன்னார். நிறுத்தினேன். வெள்ளரிக்காய் பிடுங்கலாமா என்றுகேட்டார் .தோட்டக்காரர்களைப் பற்றிய பயம் நெருடியது,வந்தாலும் சொல்லிக்கொள்ளலாம் எனும் தைரியத்தில் நிறுத்தினேன்.
வெள்ளரி ஏழைகளின் திண்பண்டம்.ஏழைகள் விளைவிக்கும் பண்டம்.நுங்கு போலவே வெயில்காலத்து ஆசுவாசம். கரிசல்காடுகளில் அதுபாட்டுக்கு முளைத்துவரும். பிஞ்சு காய் பழம் எல்லாமே திண்ணத் தகுந்தது.பாட்டி கதைகளில் அண்ணன் வீட்டுக்குப்போய் ஒரு வெள்ளரிவிதையை நக இடுக்குக்குள் மறைத்துக்கொண்டு வருவாள்.அதுவே பின்னாளில் மிகப்பெரிய தொப்பாகுமாம். வாலுபொயி கத்தி வந்தது டுண்டூங் டூங் டூக்கு என்கிற நரிக்கதையும், ஊரான் ஊரன் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கசொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன் என்று ஏகாதிபாத்தியத்தைக் கேலி செய்யும் நாட்டுப்புறப் பாடலும்.இன்னும் சினிமாப்படல்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது வெள்ளரி. பாதிகடித்து தூக்கி எறிந்த வெள்ளரிக்காயைப் பார்க்கும் போதெல்லாம் என்னை அய்யா கு.அழகிரிசாமியின் 'திரிபுரம்' சிறுகதை வந்து அழுத்தும்.
சாத்தூரின் பெருமைகளில் ஒன்றான வெள்ளரிக்காய் பெரும்பாலும் பேருந்து நிலையத்தில்,புகைவண்டியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். வன்னிமடை,போத்திரெட்டிபட்டி,கொல்லபட்டி,இருக்கங்குடி போன்ற பகுதிக்காடுகளில் விளைந்து சாத்தூர் வரும். பேருந்து நிலைய மர நிழலில் கூடையில் அடுக்கி வைத்துக் குத்தவச்சு
விப்பாங்க.தொலைதூரப் பேருந்து வந்ததும் ஓடிப்போய் சின்னப் பிரம்புக் கூடையில் வைத்து ஜன்னல் வழியே
யாவரஞ்செய்வார்கள். அவர்களே அதை விளைவித்தவராகவும் இருப்பார்கள்.
அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் மாதவராஜின் சொற்சித்திரம் ஒன்று நினைவுக்கு வந்துபோகும். தனக்குத்தெரியாமல் கூடையில் இருந்து எடுத்தது யாரென்று கோபத்தோடு திரும்பி அது குழந்தையெனத் தெரிந்ததும் இன்னொரு வெள்ளரிப்பிஞ்சை அந்தப்பிஞ்சுக்கு கொடுத்து குளிரவைக்கும் சம்பவம்.அதன்கூடவே அந்த பாழாய்போன சாத்தூர் ஜாதிக் கலவரமும் அதன் உக்கிரமும் நினைவுக்கு வந்து பாடாய்ப்படுத்தும்.
போவோர் வருவோரையெல்லாம் அண்ணாச்சி வெள்ளரிக்கா வேணுமா வேணுமா என்று கூவிக்கூவி விற்றபோது. மனிதர்களையும் அவர்களின் கண்ணில் மிணுங்கும் ஆசையையும் மட்டுமே கண்டுபிடிக்கத் தெரிந்தது அவருக்கு.அவர்களது ஜாதி கண்டுபிடிக்கத் தெரியாமல் போனது விசித்திரமில்லை.அன்று மாலையில் ஒரு வெள்ளரிக் கூடையும் சிதறிக்கிடந்த வெள்ளரிப் பிஞ்சுகளும் அதில் படிந்திருந்த ரத்தக்கறையையும் கலவரத்தின் சுவடுகளாக்கி விட்டு விட்டுப்போனார் அந்த மானாவாரி மனிதர்.
நெடுநேரம் தேடிப்பார்த்துக் கடைசியில் ஒரு காயைக்கண்டு பிடித்தோம். அதே நேரம் தோட்டக்காரரும் ஓடிவந்தார்.
'அட பேங்கு சார் நீங்களா,வேனுமின்னா சொல்லப்பிடாது, கொண்டாந்து தந்திருப்பேன்ல.காலைல தான் பிஞ்சு பரிச்சு சாத்தூருக்கு ஏத்துனோ' என்று சொல்லியபடியே அடுத்த பிஞ்சையில் போய் கை நிறைய்ய வெள்ளரிப் பிஞ்சுகளோடு வந்தார். இந்த மண்ணை மாதிரியே அதன் மனிதர்களிடமும் வற்றாத ஈரம் பேதமில்லாமல் அடிக் கோர்த்துக் கிடக்கிறது. பிறகு எங்கிருந்து வந்தது, எப்படிப் பிரித்தது ?

10.1.10
இடைவெளிகளை நிரப்பும் எழுத்தும் இலக்கியமும் .
ஆறுமாத காலப் போராட்டம் நிறைய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டகாலங்களில் அருகிருக்கும் தூய நட்புகள் இனம் காணப்பட்டிருக்கிறது. நிலமைகள் இன்னும் சீராக வில்லை.இதுவும் கடந்துபோகும்.
இடைப்பட்ட காலத்தில் வலைப்பக்கங்கள் பல படிகளைக் கடந்திருக்கிறது. ஆம், வலையெழுத்துக்களில் இருந்து. அகநாழிகை எனும் இதழ் உருவாகியிருக்கிறது. அதன் வெளியீடுகளாக அன்புத்தங்கை லாவண்யாவின் கவிதைத்திரட்டு
'நீர்க்கோல வாழ்வை நச்சி',
TKB.காந்தி - கூர்தலறம் ,
பாராவின் கருவேல நிழல்,
நர்சிம் - 'அய்யணார் கம்மா'
ஆகிய எழுத்துக்கள் அச்சேறி வந்திருக்கிறது. இது எழுத்துலகின் புதிய பரிமாணம்.
இதன் தொடர் நிகழ்வுகளாக தீராதபக்கங்கள் மதவராஜ் தொகுத்துவழங்கிய
பெருவெளிச்சலனங்கள்,
மரப்பாச்சியின் சில ஆடைகள்,
கிளிஞ்சல்கள் பறக்கின்றன, மூன்று புத்தகங்களும்,
'குருவிகள் பறந்துவிட்டன பூனைகள் உட்கார்ந்திருக்கிறது'.
அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
கொக்கரக்கொ வலைப் பக்கதுப் பதிவர் மாப்பிள்ளை அண்டோ கால்பர்ட்டுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.பதிவர் சார்பில் அவருக்கும் அவரது இல்லத் துணைக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம்.
எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் விரிந்து கிடக்கிறது அதில் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல.
குரங்குகளின் வாழ்வு குறித்த ஆவணம் பார்க்கப் பார்க்க வியப்பளிக்கிறது. இயற்கையையும் இணை விலங்குகளையும் அணுகுகிற அவர்களின் உலகம் ஒரு நொடியில் நம்மை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துப் போகிறது.தேங்காயை உரித்து உடைக்கிற நுட்பம்,புலிகளை விரட்டி ஓடவைக்கிற வீரமும்,நம்மை அசர வைக்கிறது.
நேற்றைய நாட்ஜியோவில் இமயமலைப்பகுதியில் வழும் அப்பாசனிகள் எனும் மலை மனிதர்களைப்பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. ரசாயன,தொழில்நுட்ப இடையூறுகள் இல்லாத சுத்தமான பழக்கவழக்கங்கள். இயற்கை சார்ந்த வாழ்வில் இம்மியளவும் பிசிறு தட்டாமல் தொடர்கிறது அந்த அப்பாசானியர்களின் நாகரிகம்.ஆறுவருடம் சேர்ந்து வாழ்ந்து மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான பின்னர் ஒரு தம்பதிகளுக்கு திருமணம் நடக்கிறது.அவர்களின் வாழ்க்கையோடு எழுதப்படாத சமதர்மமும், மூங்கில்களும், பாலின பேதமில்லாத உழைப்பும் சந்தோசமும் பிணைந்து கிடக்கிறது.கல்யாணத்துக்கு பரிசுப்பொருட்கள் வழங்காத அவர்கள், இறப்பை அப்படிக் கொண்டாடுகிறார்கள். போகும் போது கொண்டுபோவதற்கு சுற்றம் நட்பின் நினைவுகளும் சிலபரிசுப்பொருட்களும் இருக்கிறது அவர்களிடம். அதையும் சேர்த்துப் புதைக்கிறார்கள்.முகஞ்சுழிக்காமல் அவர்களோடு அமர்ந்து மாட்டுமாமிசம்,பன்றி மாமிசம்,பார்லிபியர் குடிக்கிற இந்தியப்பெண் ஆவணப்பட இயக்குனர் வெகுவாக பாராட்டுக்கு உகந்தவர்.
தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்கிற அந்தஸ்த்தை லத்திகாசரண் பெற்றிருக்கிறார்.இப்போதிருக்கிற சூழலில் காவல் துறை குறித்த மக்களின் அருவருப்பான பார்வை விலகுவதற்கு ஒரு இம்மியளவு அவர் பாடுபட்டால் கூட போதும். ஏகபோகம் சிதைக்கப்படுகிறபோது, பொது தர்மம் வசப்படும்,அது பெண்களால் சாத்தியப்படும்.

Subscribe to:
Posts (Atom)