லலித் மோடி,மருத்துவர் கேதன் தேசாய்,உலகத்தர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் கனமான பெயர்களாக மாறிக்கொ ண்டு வருகிறது.படிக்கிற நமக்கு லேசான மயக்கமும் அயற்சியும் தொற்றிக்கொள்கிற அளவு தொகை லஞ்சமாகப்பரிமாறப்பட்டிருக்கிறது.ஒன்னரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று படித்தால் நம்ப முடியவில்லை.ஒரே ஒரு கிராம் தங்கம் நேற்றைய நிலவரப்படி கிடத்தட்ட1600 ரூபாய் இருக்கலாம்.நகை மட்டும் அவ்வளவு.ரொக்கப்பணம்.திருப்பதி உண்டியலில் பணம் எண்ணுகிற மாதிரி வங்கி பிரதிநிதிகள்,மாவட்ட வருவாய்அலுவலர்கள்,நீதிபதிகள் முன்னிலையில் லஞ்சப்பணம் கணக்குப் பார்க்கப்பட்டிருக்கிறது.
இவர் ஏற்கனவே 1992 ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்காக கைது செய்யப் பட்டு பதவி இறக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இந்தியாவின் துரதிஷ்டம் மீண்டும் அதே பதவிக்கு வந்து இந்த முறை சலிக்கச்சலிக்க லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
எவ்வெளவு புனிதனமான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அமல் படுத்துகிற அதிகார வர்க்கம் மொள்ளமாரியாக இருந்தால் சட்டம் கேலிக் கூத்தான தாகிவிடும் என்று பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசகர் சொன்ன வார்த்தை மிகுந்த அர்த்தமுள்ளதாகிறது. இவ்வளவு தொகையும் எதற்காகப் பெறப்பட்டிருக்கிறது என்பதில்தான் மிகப்பெரும்சூட்சுமமே இருக்கிறது. மருத்துவத்தை, அந்த உயிர்காக்கும் துறையை மெல்ல மெல்ல தனியாருக்கு சுருட்டிக்கொடுத்ததற்கு கிடைத்த சன்மானம் தான் கேதன் தேசாய் வீட்டில் சுருண்டுகிடக்கும் இந்தியக் கஜானா.
ஒரு மருத்துவக்கல்லூரி சீட்டுக்கு குறைந்த பட்சம் இருபதுலட்சம் கட்ட ணமாக வசூலிக்கிற நிர்வாகங்களைசிவப்புக் கம்பளத்தோடு அங்கீகரிக்க கிடைக்கும் கையூட்டுத்தான் இப்படி மலைபோலக் குவிந்துகிடக்கிறது.அங்கு படித்து வெளியேறுகிற மருத்துவர்களிடம் இந்த தேசம் என்ன எதிர் பார்க்க முடியும் ?.கோடிக்கணக்கில் வங்கிக்கடன் வாங்கி அண்ணாந்து பார்க்கிற மருத்துவமனை கட்டி முடிக்கிற மருத்துவர்களிடம் எப்படி சேவையை எதி
ர்பார்க்கமுடியும் ?. தொலைத்த விலாசம் தேடி இரண்டு மூன்று முறை அந்தப்பக்கமாக பிராக்குப்பார்த்துக்கொண்டு நடந்து போனாலும்கூட இழுத்துப் பிடித்து எல்லாச் சோதனைகளையும் நடத்திவிடுகிற அளவுக்கு மருத்துவ மனைகள் தரமிழந்துபோய்விட்டது.இப்போது கேஏஎஸ் சேகர் லாட்டரி விற்பனை செய்கிறமாதிரி ''அண்ணே உள்ள வாங்கண்ணே நம்ம ...ஆஸ்பத்திரி தாண்ணே'' என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக விளம்பரங்கள் போட்டிபோடுகின்றன.
சமீபத்தில் ஒரு சுகாதார அமைச்சர் இலாகா மாற்றப்பட்டார்.¸ அங்கு விளையாடும் லஞ்சப்பணம்தான் என்பது செய்திகளில் வராத சேதி. அரசு மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தும் காலி குளுகோஸ் பாட்டில்கள் கைமாறுவதில் சதவீதம் வைத்தாலே போதும், தினம் கோடி கோடியாய் வருமாணம் கொழிக்குமாம்.காலி பாட்டில்களுக்கே இப்படியென்றால் இன்னும்,மருந்து,சாப்பாடு,கட்டிடம்,மருத்துவக்கல்லூரி,மருத்துவர் நியமணம்,மாறுதல்கள் என்று நீண்டுகொண்டு போகும் பட்டியல்களைக்
கணக்குப் போட்டால் கிறுகிறுத்துக் கீழே விழவேண்டியதுதான்.ஆனால் எந்த பொது மருத்துவமனைக்குப் போனாலும் மருந்தில்லை ,டாக்டரில்லை, நிதி யில்லை,என்கிற இல்லைகள் மட்டுமே பதிலாய் வரும்.
பொது மருத்துவமனைகள் எல்லாம் சாக்கடை சூழ்ந்து நாறிக்கிடக்க அங்கு பணிபுரியும் மருத்துவர்களும்,உயர் அதிகாரிகளும் சுகாதாரமான பங்களாக் களுக்குள் ஓடோ னில் மணத்தில் மிதக்கிறார்கள். அந்த வீடுகளில் தோண்டத் தோண்ட நாறும் மலக்கிடங்கை ஒளித்து வைத்திருப்பதுதான் இந்த அமைப் பின் மூலம் குற்றவாளிகளுக் கிடைக்கிற மிகப்பெரிய பலம், பொது மக்களுக்குக் கிடைக்கிற ஆகப் பள்ளமான பலகீனம்.
நாள்முழுக்க கால்கடுக்க காத்திருந்து மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டு விட்டு மத்திரைக்காக வெளியே கடைக்குப்போகும் ஏழை வியாதி யஸ்தர்களிடம் இது பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது.அவர்களுக்கு
புரிகிற மொழியில் சொல்ல கிடைத்திருக்கும் ஒரே வழி ஊடகங்கள் தான். அரசின் பொதுத் தொலைக்காட்சியிலும் சரி ஆட்சியாளர்களே நடத்தும் தனியார் தொலைக்காட்சியிலும் சரி இந்த சேதிகள் வெளிவர ஸ்பான்சர் கிடைக்காதுஎவனாது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலே வைத்துக்கொள்வானா ?.
கிரெம்ளின் மாளிகை கதிகலங்கி நின்றபோது சோவியத் ருஸ்ஸியாவின் சிகப்பு வரைபடத்தையும்,அரிவாள் சுத்தியலையும் காண்பித்து அதை கிராபிக்ஸில் சுக்குநூறாக உடைத்து விட்டு பிராணாய் ராயின் தாடிக்குள்ளிருந்துஒரு குரூரச்சிரிப்பு வெளிவரும்.அதைத்தொடர்ந்து வரும் தகவல்களும் செய்திகளும்,அலசல்களும்,வல்லுநர் கருத்துக்களுமாக அப்பப்பா எவ்வளவு கெந்தளிப்போடு கிடந்தது அப்போதைய ஊடகங்கள்.அந்த ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன.மீண்டும் விதர்பா மாவட்டத்து நிலங்கள் பிளந்து அதை நம்பிக்கிடந்த விவசாயிகளின் உயிரை உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.தினம் இருபது ரூபாய் செலவு செய்து வயிறு நிÈப்பமுடியாத இந்தியர்கள் அறுபது கோடிக்குமேலாக உயர்ந்துகொண்டிருக்க சென்ற ஆண்டு 32 பேராக இருந்த இந்தியாவின் உலககோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 64 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் இந்தியர் என்கிற ஒரே பட்டமா?
19 comments:
நீங்கள் சொல்ல வந்த கருத்து... சில தினங்களுக்கு முன் என் பதிவில் எழுதிய கவிதைக்கு ஒத்து போகிறது(http://a-aa-purinthuvitathu.blogspot.com/2010/04/blog-post_21.html)... ரொம்ப யோசித்து தலை தான் வலிக்கிறது காமராஜ்... நாம் விவாதித்து கொண்டே இருகின்றோம்... எப்படி மாற்றத்தினை ஏற்படுத்த போகின்றோம்...
எல்லாவற்றையும் மௌனமாகப் பார்ப்போம்...அல்லது தொண்டை கிழிய கத்துவோம்....அல்லது கை வலிக்க எழுதுவோம்.....அப்புறம்????
எப்பவும் போல வீடு வேலைன்னு ஓடுவோம்....மரத்துப் போய்விட்டதோ நமக்கு?
இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முடக்கி வைத்ததே எத்தனை இழப்பு. அதையும் கணக்கில் கொள்ள வேண்டும் காமராஜ். சத்தியமாக அவன் வருவாயில் இத்தனை சம்பாதித்திருக்க முடியாது. அவன் கணக்கில் அலுவலகத்துக்கோ அல்லது வேறு எங்காவதோ சொன்னது போக இந்தத் தொகையை கோர்ட் தீர்ப்பு வரையில் முடக்கி வைப்பார்கள்.
குறைந்த பட்சம் இவ்வாறு பிடிபடும் அளவுக்கதிகமான அசையும் சொத்துக்களை உடனடியாக மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு தேவை அடிப்படையில் வழங்க ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம்.
ஆமாம் ராஜ ராஜ சோழன். நமக்குத்தெரிந்து ஹர்ஷத் மேத்தா முதல் பெரிய பரிய திமிங்கலங்கள் இல்லை முதலைகள் அதுவும் இல்லை அதுகளெல்லாம் பசிக்குமட்டும் தான் இரையெடுக்கும் இவர்களை எந்த பிராணி வகையில் சேர்க்க ? பிடிபட்டு கோர்ட்டுக்குப்போய் செய்தியாகி கறைந்து போக மீண்டும் ஒரு ஜந்து வந்துவிடுகிறது.
மறந்து போகிற ஜனத்திரள் என்பதை ஆட்சியாளர்களும் கேதன்களும் மிகச்சரியாக அறிந்துவைத்திருக்கிறார்கள்.
நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதுதான் எழுத்தின் செயல். எழுதுவோம் மேடம்.ஒரு ஓட்டு தமிழ்மணத்தில் பார்த்தவுடன் நீங்கள் வந்துபோன சுவடு தெரிந்தது அருணா.
ஆமாம் பாலா சார். நீங்கள் சொல்லுவது மிகக்கொடூரம்.மக்களுக்கு அது ரெட்டைத்தண்டனை.
அது என்ன? ப்ரணாய் ராயின் தடிக்குள்ளிருந்து......கொஞ்சம் விளக்குங்களேன்.....காஸ்யபன்
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதேனும் ஒரு ஊழல் புகார்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றது நம்நாட்டில். ஒன்றை விட ஒன்று பெரிதாகத்தான் இருக்கின்றது. ஒன்றரை டன் தங்கம் என்பதை விட அவரின் வீட்டில் கேஸாக 1800 கோடி ருபாய் பிடிபட்டது என்பதுதான் அதிர்ச்சி. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் சென்னை துறைமுக இயக்குனர் ஒருவர் இதே மாதிரி பிடிபட்டதாக ஞாபகம். ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக ஏதேனும் இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்ன செய்ய.
வெறிகொண்ட மனதை எழுதித்தான் தீர்க்க முடிகிறது...
60 கோடி மக்களும், 64 பேரும்.... ம்ம்ம்
என்ன சொல்ல...
வாழ்க இந்த தேசத்து புரையோடிய ஜனநாயகம்
மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது என்பது மிக சிறப்பானது.
கேதான் தேசாய் IPL மோசடி எல்லாம் பார்க்கும் போது, எத்தனை பேர் எளிதில் வஞ்சிக்கப் படுகிறார்கள். ஏமாருவதிற்கு ஆள் இருக்கும் வரை இவர்கள் ஏமாற்றி கொண்டேதான் இருப்பார்கள். பணத்தால் இவர்களால் எதையும் செய்ய முடியும். Kodumai.
கேதன் தேசாய் ஒரு செயலராக இருந்து இவ்வளவு லஞ்சப் பணம் வாங்கி மலை போல பணத்தைக் குவித்துள்ளான், அந்தத் துறை முன்னாள் இன்னாள் மந்திரிகளையும் கொஞ்சம் கவனித்தால் இன்னும் தங்கச் சுரங்கங்களே வரும். இவன் அனுமதி வழங்கிய கல்லூரிகளின் இலட்சனம் எப்படியிருக்கும், தமிழகத்தில் உள்ள அந்த மூன்று சுய நிதிகல்லூரிகளைப் பற்றி துப்பரியும் ‘ நக்கீரர்”கள் எங்கே எழுதப் போகிறார்கள்.
மாறும் மாறும் என்றிருந்தோமடா
மடமாந்தர் நிலவறையில் எவ்வளவு தேறும் தேறும் என்றிருக்க
நைட்டி ஆனந்திகளுக்கு நித்திய ஆனந்தர்கள் இறைப்பதுவும்
ஐ பி எல் தேசாய்கள் காஷ்மீர் காதலிகள் நிறைப்பதுவும்
உப்பில் ஊறிய நோட்டுகள்
டாஸ்மாக்தரை விசிறிய மூடிகள்
கிழிந்த ஆணுறை
வோட்டுகள்
.....மாறும் மாறும் என்றிருந்தோமடா
நானும் இந்த செய்தி கேட்டதும் அதிர்ந்து போனேன்... புறையோடிப்போன ஜனநாயகம் பற்றி புலம்பத்தான் முடிகிறது....
இது மட்டுமல்ல ..அங்கீகாரம் அளிக்கப்படும் கல்லூரிகளில் இவர்களுக்கு என சில சீட்டுகள் உண்டு .இவர் முன்பே லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்ற போதும் இவருக்கு மீண்டும் இந்த பதவி தரப்பட்டிருக்கிறது .தமிழக எம் .ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் வேறு .
நமக்கு மரத்து தான் போய் விட்டது . சில நாட்கள் இது செய்திகளில் இருக்கும் .அப்புறம் பலருக்கும் மறந்து போகும் .அவர் பெயிலில் வெளி வந்து மீண்டும் உல்லாச வாழக்கையை துவங்குவார் .
//தமிழக எம் .ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் வேறு//
ஜேப்பியார் இந்த மாதிரி ஆளுக்கெல்லாம்தான் டாக்டர் பட்டம் கொடுப்பார் போலிருக்கு. நல்ல உதாரணம் நம்ம விஜய்.
சரியான பார்வை....
`இந்தியா` ஒரு ஜனநாயக சோசலீச நாடு என்கிறது இறையாண்மை.
இருந்த வீட்டை நாட்டுக்கு கொடுத்துட்டு, நேரு குடும்பம், நாட்டையே
எடுத்துகிட்டாங்கன்னு, அப்பவே அங்கே பேசினாங்களாம்.
தேர்ந்தெடுங்கள், செருப்பாய் இருப்போமுன்னு தேர்தலப்ப
சொல்லிட்டு பதவிக்கு வந்தப்பவே, புறம்போக்கை பட்டா
போட்டுகிட்டவுங்க அவுங்க.
இப்பவோ நோட்டை குடுத்துட்டு ஓட்டு வாங்கிட்டாங்க,வெளிநாட்டுகாரனை கூப்பிட்டு,இந்தா பிடி வயக்காட்டை,தடையற்ற மின்சாரம், ரோடு, மற்ற வசதியெல்லாம்
அந்நிய முதலீட்டில் முன்னணி ஸ்கீமுல்ல ஒதுக்கீட்டு,
பதிலுக்கு மந்திரி 10% மாதாமாதம் தொடர் வருமானம்
பண்ணிக்குவார். தன்னையே வித்தவன், வாங்கினவனுக்கு
அடிமைதானே.
இப்ப பாருங்க கணக்கை.
அரசியல்வாதியும், அந்நியமுதலுன்னு போட்ட இரண்டு பேர் 64 கணக்கில!! அடிமையான வாக்காளன் மிச்சமிருக்கிற
பஞ்சயாய், பராரியாய் ...... இன்னும் எவ்வளவு (எவ்வளவோ)
இருக்கு காமராஜ்.
கொஞ்சம் பீபீ யை செக் பண்ணீட்டு அப்புறமா வர்ரேன்.
யுபிஏ ஆட்சியை காக்க நோட்டு மாலை மாயாவும், மாட்டு தீவணம், சொத்து குவிப்பு ஐயாக்களும்
எப்படியோ பேசி, சிபிஐ புண்ணியத்தில `ஜெயிச்சீ`விட்டார்கள்
வாழ்க இந்திய திருநாடு,
வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் கேதன் பாய் தேசாய் பளிச்சென தெரிகிறார். வராதவர்கள் அதிகம். ஆனாலும் இந்த முதலாளியத்துவ ஜன நாயக அமைப்புதான் எல்லா வகையான அரசு முறைக்கும் சிறந்தது என்று கட்டியம் கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக்கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில், சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
Post a Comment