'mission scandal eradication' திருப்திகரமாக முடிந்தது.
இனி புரட்சிப்பெண் vs சுதந்திரப்போராட்ட தியாகி வழக்கில் ஊடகங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தும்.உலக வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறும் இந்த குடும்பச் சண்டையின் ருசிகர ,எதிர்பாராத, ஹேர்பின் திருப்பங்கள் ஆகியவற்றை தொகுத்துவழங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள். இது போதாதென்று 162 கோடி மெகா பட்ஜெட்டில் மொழிமற்றம் செய்யப்பாடப்போகிறது ஒரு உலகமஹா காவியம்.அதற்கும் கணிசமான பக்கங்கள் ஒதுக்கியே தீரவேண்டும்.
மறதி எனும் புதைசேற்றில் நுற்றாண்டு சூதாட்டம் தொடர்கிறது கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை காலம் தொடரும்?
8 comments:
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்ற பட்டுக்கோட்டையின் வரிகள் உரக்க ஒலிக்கிறது.நமது அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்லப்போகிறோம் என்றெண்ணும்போது மனது கனக்கிறது காமராஜ்.
ம்கும். விஜயகுமார் மக வேற அப்பாவப் பத்தி ரகசியத்தை தினம் ஒரு கதையா சொல்லப் போகுதாம். அதுக்கு இடம் வேணாமா?
அன்பு காமராஜ்,
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா... எவ்வளவு போட்டி... நாச்சியப்பன், சங்கிலி கருப்பன், பூச்சி காட்டும் போக்கிரி சுப்பன்... எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே... கவிதை, இலக்கியம், கருணை, வீரம், காதல் என்று சங்க கால ஜல்லி அடிப்பவர்கள் எல்லாம் ஒன்னா கூடி கொத்து கொத்தா கொள்ளை அடிப்பது வேறு எங்கும் இல்லாதது... காக்காவிடம் இருந்து ஒற்றுமையை கற்றுக் கொண்டவர்கள் கூட இது போல அடித்துக் கொள்வது, பாடலை எழுதியவருக்கே வேதனையாகி... கசந்து கிடக்கிறார்.... ஒரு கைதின் போது அவர் ஆடியதை விட... நிற்காமல் ஆட்டுகிறார்கள் இப்போது.... யாரும் மறக்கவில்லை காமராஜ்... வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள்...
அன்புடன்
ராகவன்
||எத்தனை காலம் தொடரும்? ||
தொடருதே!!!!!
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டது.
இன்னொரு பிரச்சினை வந்தா இது மக்களுக்கு மறந்து போகும்..
/ இன்னொரு பிரச்சினை வந்தா இது மக்களுக்கு மறந்து போகும்.. /
repeatuuuuuuuuuu.
'மறதியெனும் புதை சேற்றுக்குள்'
இன்னும் பல சந்ததியர் வந்த பின்னும் கூட, நிலையாய் நிற்கக்கூடிய ஒரு பாட்டு, 'எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நாட்டிலே .....'.
Post a Comment