மந்தப்பிஞ்சை பெரியசுப்பையத் தாத்தனின்
தொளுவத்தில் கழுத்துமணிச்சத்தம் அறுந்து போனது.
சாணமும் கோமியமும் குழுதாடியும் இருந்த இடத்தில்
ரெண்டு டீவிஎஸ் பிப்டி நிற்கின்றன.
மாட்டுத்திமிழும் வண்டிமசகும்
தலைத்துண்டை கையில்போட்டு பேரம் பேசும்
தரகு தொழிலும் வழக்கொழிந்துபோனது.
வாக்கூடு கட்டிக்கொண்டு வளைய வரும்
களத்துமேடுகளில் காரவீடுகள் முளைத்துவிட்டன.
காங்கேயத்தில் வாங்கிய காளைகளைக்
கம்மாயில் குளுப்பாட்டியதும்
அடைப்புக்குறி போன்ற கொம்புகளுக்கு
சிகப்புச்சாயம் வாங்க வண்டிகட்டிப் பயணமானதும்
தோண்டியெடுக்கும் கற்காலமாகிப்போனது.
இருந்தாலும் என்ன இரும்புக்கதவில் தொங்குகிற
கண்ணிப்பிள்ளைச் செடியிலும்
கரும்பு சாத்திவைத்த கதவுகளிலும் சிரிக்கிறது
பழய்ய பொங்கலின் நினைவுகளும் நிறங்களும்.
13.1.11
தோல்வியின் நாயகிகள்
நீண்டநாள்கழித்து அதிகாலையில் அவர்களை அலைபேசியில் அழைத்தபோது மறுமுனையில் தோ..ழ...ர் என்று கலப்படமில்லாத அன்போடு குரல்வந்தது. ஒரு பார்வையில் ஒரு சிரிப்பில் ஒரு மௌனத்தில் கலப்படமில்லாத அன்பைகுழைத்து தர மனசு வேண்டும்.அது வெள்ளந்திக் குணம் மிகுந்த எல்லோரிடமும் இருக்கிறது. அப்படி ஒரு பெண் அவர். சாத்தூர் தமுஎகச வின் முன்னாள் செயலாளர். பூ படத்தில் மாரியின் அம்மாவாக நடித்த முன்னாள் குணச்சித்திர நடிகை. எங்களுக்குச் சமதையாய் அலைந்து ஒவ்வொரு தமுஎகசவின் நிகழ்வுகளுக்கும் தனது எதிர்பார்ப்பில்லாத பங்களிப்பைச் செய்த உழைப்பாளி.
நீ பாடமல் விடியாது பெண்ணே. பூபாளராகம் பாடு; என்கிற அறிவொளிப் பாடலைப்பாடியபடி தமுஎசவில் அறிமுகமானார்.அப்புறமான ஒவ்வொரு நிகழ்சியிலும் மயில்போல பொண்ணு ஒண்னு என்கிற பாரதி படப்பாடலை அதீத கீச்சுக்குரலில் பாடுவார்கள்.சன்னஞ்சன்னமாய் தன்னை தமுஎகசவின்
உறுப்பினராக்கிக்கொண்டு பின்னர் செயற்குழு உறுப்பினாராகவும் ஆனார்.
மிகப்பெரிய கனவுகளோடு அவர்களை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்த போது கடும் எதிர்ப்புக்கிளம்பியது.அதை தனது தோளில் தாங்கிக்கொண்டு ஒரு பெண் தலைமைப் பொறுப்பேற்கவேண்டும் என்கிற வெறியோடு கலகம் செய்து உட்கார வைத்தார் தோழர் ப்ரியா கார்த்தி.நடு இரவு வரை நீள்கிற செயற்குழுக்கூட்டங்கள். தெருத் தெருவாய் அலைந்து நிகழ்சிக்கு பணம் சேகரிக்கிற வசூல். இப்படியான வேலைகளுக்கு ஒரு பெண் ஈடு கொடுக்க முடியுமா என்கிற சந்தேகத்தை உடைத்தெறிந்து எங்களோடு பல நிகழ்ச்சிகளை நடத்தினார் தோழர் ஜானகி. இரவு பதினோரு மணிக்கு மேலே அவரை நானோ இல்லை கார்த்தியோ சாத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் ஒதுங்கி இருக்கும் படந்தாலில் கொண்டுபோய் இறக்கி விடுவோம்.அதற்குப் பிறகு அவர் என்ன சமைப்பார் எப்படிச்சாப்பிடுவார் என்கிற கேள்வி யற்றுத் திரும்பி வந்திருக்கிறோம்.
ரொம்பத்தோத்துப் போயிருக்கேன் தோத்த கதையப் பூரா தோண்டித் தோண்டிப் பொதச்சிர்க்கேன்’ என்று சொன்னார். இது சொல்லமுடிந்த சொல்ல வாய்ப்பிருக்கிற ஒரு பெண் குரல். ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது. அவர்கள் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவ்வளவு புதையலையும் உரமாக்கி ’அவமானம் படுதொல்வி யெல்லாம் உரமாகும்’ னு ஒரு சினிமாப்பாட்டு வரி இருக்கில்ல என்று சொன்னபோது அந்த வளமையான இனிமையான அவரது கீச்சுக் குரல் கானாமல் வெகுதூரம் போயிருந்தது.
அவரோடு பேசிக்கொண்டிருந்த போது .
ஒரு மாதர்சங்க நிகழ்ச்சிக்காக நோட்டீசு கொடுக்க போயிருந்த எட்டுநாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பெரியவரைப் பார்த்தேன்.
நீண்ட நேரம் என்னை உற்றுப்பார்த்திருந்துவிட்டு நீ ரொம்ப புஸ்தகம் படிப்பியா தாயி என்று கேட்டார்.நா என்ன சொல்லிர்ப்பேன்னு நினக்கிறீங்க.
இல்ல நான் அவ்வளவா புக் படிச்சதில்ல என்று சொன்னப்பிறகும் இல்லதாயி ஒன்னப்பாத்தா புத்தக்ககளை முகத்தில் தெரியுது என்று சொன்னார்.
சொன்னதோடு நிக்காம அவர் இருந்த பம்புசெட்டுக்குள்ளாற போயி ஒரு சாக்குமூட்டையைக்கொண்டுவந்தார்.எதோகருணைக்கிழங்கோ,நிலக்கடலையோ கொண்டுவருகிறார் என்று பார்த்தேன். அடிப்பாகத்தை பிடித்துக்கொண்டு மூட்டையைக்கொட்டினார்.அத்தனையும் புத்தகங்கள்.அன்னை வயல் அன்னாகரீனா பரீசுக்குப்போ அழகிரிசாமி வேட்டி மார்க்சீயமெஞ்ஞானம் இப்படி நான் எதிர்பாரத புத்தகங்கள்.ஒரு மேல்சட்டைபோடாத சம்சாரியிடம் இத்தனை புதையலா என்இப்படித்தகவலைச்சொன்னார் அவர்று வியந்து போய் அப்போதிருந்து வெறிகொண்டு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன்'.என்று சொன்னார்.
நீ பாடமல் விடியாது பெண்ணே. பூபாளராகம் பாடு; என்கிற அறிவொளிப் பாடலைப்பாடியபடி தமுஎசவில் அறிமுகமானார்.அப்புறமான ஒவ்வொரு நிகழ்சியிலும் மயில்போல பொண்ணு ஒண்னு என்கிற பாரதி படப்பாடலை அதீத கீச்சுக்குரலில் பாடுவார்கள்.சன்னஞ்சன்னமாய் தன்னை தமுஎகசவின்
உறுப்பினராக்கிக்கொண்டு பின்னர் செயற்குழு உறுப்பினாராகவும் ஆனார்.
மிகப்பெரிய கனவுகளோடு அவர்களை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்த போது கடும் எதிர்ப்புக்கிளம்பியது.அதை தனது தோளில் தாங்கிக்கொண்டு ஒரு பெண் தலைமைப் பொறுப்பேற்கவேண்டும் என்கிற வெறியோடு கலகம் செய்து உட்கார வைத்தார் தோழர் ப்ரியா கார்த்தி.நடு இரவு வரை நீள்கிற செயற்குழுக்கூட்டங்கள். தெருத் தெருவாய் அலைந்து நிகழ்சிக்கு பணம் சேகரிக்கிற வசூல். இப்படியான வேலைகளுக்கு ஒரு பெண் ஈடு கொடுக்க முடியுமா என்கிற சந்தேகத்தை உடைத்தெறிந்து எங்களோடு பல நிகழ்ச்சிகளை நடத்தினார் தோழர் ஜானகி. இரவு பதினோரு மணிக்கு மேலே அவரை நானோ இல்லை கார்த்தியோ சாத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் ஒதுங்கி இருக்கும் படந்தாலில் கொண்டுபோய் இறக்கி விடுவோம்.அதற்குப் பிறகு அவர் என்ன சமைப்பார் எப்படிச்சாப்பிடுவார் என்கிற கேள்வி யற்றுத் திரும்பி வந்திருக்கிறோம்.
ரொம்பத்தோத்துப் போயிருக்கேன் தோத்த கதையப் பூரா தோண்டித் தோண்டிப் பொதச்சிர்க்கேன்’ என்று சொன்னார். இது சொல்லமுடிந்த சொல்ல வாய்ப்பிருக்கிற ஒரு பெண் குரல். ஆனால் வெளிவராத குரல்கள் இந்த தேசமெங்கும் அடுப்படிகளில் புதைந்துகிடக்கிறது. அவர்கள் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அவ்வளவு புதையலையும் உரமாக்கி ’அவமானம் படுதொல்வி யெல்லாம் உரமாகும்’ னு ஒரு சினிமாப்பாட்டு வரி இருக்கில்ல என்று சொன்னபோது அந்த வளமையான இனிமையான அவரது கீச்சுக் குரல் கானாமல் வெகுதூரம் போயிருந்தது.
12.1.11
தழலைப் புகையாக்கும் கரிமூட்ட அரசியல்.
இந்த அரசியலைப் பேசியே தீரவேண்டியிருக்கிறது.கூகுள் செய்தி தொடங்கி தினத்தந்தி வரையிலும் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டே போகிற சிந்தனையாக இருக்கிறது.முன்னெப்போதையும் விட ஊழலைப்பேசுகிற அறச்சீற்றம் அதிகரித்திருக்கிறது.உண்மையில் இது சந்தோஷமான கோபம். ஆனால் இந்தக் கோபமெல்லாம் இன்னொரு ஊழல்வந்து உட்காரத்தான் என்று நினைக்கும்போது .இது விழலுக்கில்லை, சாக்கடைக்கு இறைத்த சந்தன கரைசலாகிறது.அப்படியிருக்காது என்பதற்கு இங்கே எந்த உத்திரவாதமும் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக ஆக்ரமித்துக்கொண்ட இந்த முட்புதரை எங்கிருந்து சரிசெய்ய?.சரி செய்யப் புறப்படுகிற கைகளில் புதிய கறை படியாமலிருக்குமா?. இதைப் பற்றிப் பேசுகிற யாரும் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டார்கள் என்பது சத்தியம்.கொடுத்திருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்ரவாதம்.அதே போல தவறுகளுக்கான தண்டனை இங்கே ஆள் பார்த்து பின்புலம் பார்த்துத்தான் முடிவாகிறது.
மாளிகை வாசலில் ஆடிக்காத்தும் கூட வாலைச்சுருட்டுதடா
நம்ம ஏழைக்குடிசயக்கண்டுபுட்டா மட்டும் மல்லாக்கத் தள்ளுதடா
என்கிற பாடல்வரிகள் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் அர்த்தமுள்ளதாகவே தொடரும். காசுவாங்காமல் கையெழுத்துப்போடுகிற கிராம நிர்வாக அலுவலர்கள் ஏதாவது நிர்வாக ரீதியான சிக்கலில் மாட்டிக்கொண்டு இடைநீக்கம் செய்யப்படுவதெல்லாம் நேர்மைக்கு வரும் சோதனையாம்.ஒரு முறை தினத்தந்தியில் ரூபாய் 200 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரைக் கைதுசெய்த செய்தி வந்திருந்தது.தேடிப்போய் விசாரித்துப்பாருங்கள் பாவம் எந்தப்பின்புலமும் இல்லாத அம்மாஞ்சியாயிருப்பார் அவர்.அதற்காக அவரை விட்டுவிடச் சொல்லவில்லை. சட்டத்திற்குமுன் எல்லோரும் சமம் என்கிற சொல் பான்பராக் பொட்டலத்தில் மதுப்புட்டியில் எழுதும் எச்சரிக்கை வாசகம் போல கேலிக்குறியாதாகக்கூடாது. தவறு செய்வதற்குக் கூட தகுதியும் திறமையும் கோருகிற அமைப்பாகிப்போனது நமது அமைப்பு.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாளில் அல்ல எத்தனை யுகமானாலும் புதுக்கருக்கு மாறாமல் நிலைத்து நிற்கிற ஏற்பாடு இங்கே இருக்கிறது. நேர்மையாய் வாழ்ந்த கக்கனும் ஜீவாவும் கஞ்சிக்கில்லாமல் கிடந்தார்கள்.முதல்வர் பதவியை விட்டு வெளியேறும்போது நாலு வேட்டிசட்டையோடு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறிய நிரூபன் சக்ரவர்த்தியை யார் கொண்டாடுகிறார்கள். ஊழலை தேசியமயமாக்கிய எந்த ஆளுங்கட்சிக் குடும்பம் சோத்துக்கு லாட்டரியடித்தது சொல்லுங்கள்?. எதிரும் புதிருமாக போஸ் கொடுக்கிற கட் அவுட் வால்போஸ்டர்களில் மார்க்ஸ் லெனின் சேகுவாராக்களா இருக்கிறார்கள். ஒன்று பழய்ய கொள்ளைக்காரர்கள் இல்லை புதிய கொள்ளைக்காரர்களும் தானே முன்நிறுத்தப்படுகிறார்கள் .விடிந்து எழுந்தால் புறநானூற்றுத் தமிழர்கள் அதன் மூஞ்சியில் தான் முழிக்கிறார்கள்.
அடிக்கிற கொள்ளையில் எதிர்க்கட்சிக்கும் கொஞ்சம் ஒதுக்கிவிடுகிற கூட்டுக்களவானிகளை புரட்சியாளராக்கியவர்கள் நாம். அப்படி லஞ்சப் புரட்சியை அமலுக்கு கொண்டுவந்தவரைக் கோவில் கட்டிக்கும்பிடுகிற தேசம் இது.கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்ட இந்த விஷம் மொத்த இந்தியர்களின் ரத்தநிறத்தை மாற்றிவிட்டது. சந்தேகக் கொலை ஜாதிக்கொலை இந்துக்கொலை முஸ்லீம்கொலை முன்விரோதக்கொலை கருணைக்கொலை கற்பழிப்புக்கொலை அரசியல்கொலை இப்படி ரக ரகமான கொலைச்சம்பவங்கள் இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.
அது நிமிடத்துக்கு நிமிடம் எங்காவது பதிவாகிக்கொண்டிருக்கிறது.ஆனால் எங்காவது லஞ்சம் வாங்கியவரை கொலை செய்த சேதி படித்திருக்கிறீர்களா நண்பர்களே. கிடைக்கவே கிடைக்காது. இயக்குநர் சங்கர் மட்டும் தான் அப்படிச்செய்வார். 162 கோடி செலவு செய்து அதைக் கல்லாக்கட்டுவார். அதுவும் கூட பத்துப்பைசா இருபது பைசா மற்றும் ஏழை எளியவர்களின் குற்றங்களுக்குத்தான் அவர் தீர்ப்புச்சொல்லுவார்.அம்பானிகளின் குற்றங்களை ஜாய்சில் விட்டுவிடுவார். நிஜத்தில் லஞ்சத்துக்கு எதிராகப்போராடியவர்கள் புழுப்பூச்சிகளைப்போல நசுக்கப்பட்டிருக்கிறார்கள். அதைச்சொல்லுமா இந்த இந்து சந்து பொந்து நாளேடுகளும் ஸ்டார் சன்குழும மின்னனு ஊடகங்களும் ?
இந்த உண்மை உச்சியில் இருக்கும் உயர்திருமன்மோகனுக்கும் கீழேகிடக்கும் பஞ்சமக் கூலித் தொழிலாளிக்கும் நன்றாகவே தெரியும்.
தேசம் முழுக்க புதர்மண்டிக்கிடக்கிறது
தீக்குச்சிகள் நமுத்துப்போய்கிடக்கின்றன.
எரிநட்சத்திரத்தில் கங்கெடுத்துப்பற்றவைக்கிற
கைகள் இங்கே இல்லை.
எங்காவது பற்றுகிற தீயைக்கூட
தண்ணீர் ஊற்றி அணைக்கிற
காரியங்கள் வெற்றியாகிறது.
கொழுந்து விட்டு எரியவேண்டிய தழலை
மூட்டம் போட்டு புகைய விடுகிற
ஏற்பாடு கச்சிதமாக நடக்கிறது.
கரும்புகை வெண்புகை என சந்தையில்
இரண்டே வகை புகை மட்டுமே கிடைக்கிறது
அந்தப்புகை நடுவே பயணம் செய்யவே
இந்தியர்களுக்கு விதித்திருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)