16.2.09

நினவுகளின் பதுங்கு குழி








இரண்டு நாட்களாக இந்தப்பாடல் வந்து வந்து அலைக்கழிக்கிறது.


சத்தமில்லாமல் வந்து உயிரைக் கவ்வும் ஒரு பார்வைபோல.

அதிகாலை நேரத்து குளிர் நிசப்தத்தில் தூரத்து

மரத்திலிருந்து எறியப்படும் குயிலின் ஒற்றை குரல்போல.

ஒரு பசிய மாலையில்தன்னந்தனியே நடக்கையில்

கூடவரும் ஒற்றையடிப் பாதைபோல.

ஆளில்லா வீட்டில் நினவுகளைத்

திறந்து உள் நுழையும் காற்றைப்போல.

சந்தடி மிகுந்த நகர நெரிசலில்கண்தெரியாத

இசைக் கலைஞனின்புல்லாங்குழலில் இருந்து கசியும்

மனதுக்குப் பிடித்த திரைப்படப் பாடல் மெட்டைப் போல.


ஒரு சமீபத்து பாடல். அது ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், வாரணம் ஆயிரம் திரைப்படப்பாடல். ''அனல் மேலே பனித்துளி:"...ஒரு அமைதிப் படையல். சுதா ரகுநாதனின் குரலில்.


அம்மாவும் நீயேஅப்பாவும் நீயே, கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே, காற்றினிலே வரும் கீதம், மாலையில் யாரோமனதோடு பேச, இயற்கையெனும் இளைய கன்னி, நிலவு தூங்கும் நேரம், .......................................................................இதே போல ஆயிரம் பாடல்கள் வந்து பொக்கிஷமாகக் கிடக்கும் இசைப்பரப்பில் இன்னொன்று.


"சந்திப்போமா கனாக்களில் சில முறையா பல முறையா, அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா"என்று இனிப்பா கேள்விகளை மீட்டிக்கொண்டே நினவுகளைக் கிளறுகிறது.
புற உலகின் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிடக்கும் நினைவுகளின் பதுங்குகுழி இப்படியான இசை.

8 comments:

Anonymous said...

காமு சார்,

முழுப்படலும் உங்களுக்குக்காக. சமீபத்தில் வந்ததில் நல்ல இலக்கிய நயமிக்க பாடல். எழுதியவர் தாமரை.


அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

காமராஜ் said...

நன்றி வேலன் சார்.
மலைப்பாக இருக்கிறது.
நீங்கள் ஒரு நடமாடும்
என்சைக்ளோபீடியா

Anonymous said...

தோழர்,

உங்க பாராட்ட ஏத்துகிடலாம்னு பார்த்தா மனசாட்சி உறுத்துது. கூகிளாண்டவர்னு ஒருத்தர் இருக்காருங்க. என்ன கேட்டாலும் உடனே தருவார்.

google.com ல போய் உங்கள் தேடலைச் சொன்னால் கைமேல் பதில். சுலபம்.

Anonymous said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

வேலன் சார் கூகிளாண்டவரா, நிஜமாகவா?
சார் ஜோக்கில்லையே.

அன்புடன் அருணா said...

//புற உலகின் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிடக்கும் நினைவுகளின் பதுங்குகுழி இப்படியான இசை//

இசை நிஜம்மாகவே நினைவுகளின் பதுங்கு குழிதான்....
அன்புடன் அருணா

காமராஜ் said...

வணக்கம் மேடம்..

துன்பக்கடலை நீந்தும் போதும்,
இன்பம் பொங்கும் வென்னிலா வீசும் போதும்
ஏதுமற்ற தனிமையில் இனிமையாவதும்
இசைதானே?.
இதோ இரவு 10.22
ஜெயா ப்ளஸ்ஸில்
சுசீலா அம்மா நெஞ்சம் மறப்பதில்லை
என்று உருக்றாங்க.

நன்றி மேடம்.

kovai Ram said...

Ungal vaarthaigal muttrilum Unmai..

Ennathan avasarathilo allathu sogathilo irunthalum, manathai varudum padal varigalai ketkumbothu manasu lesagi kaatril parakkum unarvu...Ninaivugalin Pathungu Kuzhi!....

Nandringal pala pala..