21.2.09

அழுகை சங்கீதம், அலறல்....?








முந்திய நாள் மிரட்டிய

ஆசிரியரோ, தெரு நாயோபடுக்கையில்

மூத்திரமாய் நனைத்திருக்கும்.

சளிப்பிடித்தால் கிலிப்பிடித்து மருத்துவர் தேடி ஓடும்

பசியை அடகு வைத்து பலூன் வாங்கிக்கொடுக்கும்.

நெடுநாட்கள் இலையெனினும்

சில மணி நேரப்பிரிவில்தென்படும் பிள்ளைகளெல்லாம் தன்மக்கள்போலிருப்பர்.


விருட்சமோ, செடியோ,

விதைகளைக் கருகவிட்டால்

உலகம் கருகிப்போகும்.

மாமிச வெறி இருந்தாலும் கூட

செல்லப்பிராணியைக்கொல்லாதது மனிதர் உலகம்.



பேருந்து பயணத்தின் அடுத்த இருக்கையிலிருந்து

தாவிக் கை நீட்டும் தளிர் விரல் தொடாத

துப்பாக்கியே உனக்கும், ஙொப்பன்

ராஜபக்சேவுக்கும்

என்னதெரியும் குழந்தையின் மகிமை.

4 comments:

hariharan said...

அண்டை நாடான இலங்கையில் அன்றாடம் இனப்படுகொலை நடந்தேறிவருகிறது.

தமிழகத்தில் தினந்தோறும் அதன் அதிர்வுகளையும் குமுறல்களையும் போராட்டங்களையும் காண்கிறோம், ஆனால் நாம் சகோதரர்களாக பாவிக்கும் அண்டை மாநிலத்தவர்களிடம் சிறு அதிர்வு கூட இல்லையே, தமிழனை அழிப்பதற்க்காக இல்லாவிட்டாலும் சக மனிதனுக்காகவேனும் ஒரு கண்டனம் இல்லையே.. அதனால் தான் இன உணர்வென்பது வெறியாக மாறுகிறது.

ஹேமா said...

ஈழத்தைப் பொறுத்த மட்டில் உயிர் ஏதொ ஒன்றைப் போல.கவலைப்பட யாருமேயில்லை.

subha said...

நல்ல கவிதை. ஆனால் கடைசி மூன்று வரிகள் முழு உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இலங்கையில் தமிழ் பேசும் ராஜபக்சேக்களும் இருக்கிறர்களே. அவர்களுக்கும் குழந்தையின் மஹிமை தெரியவில்லையே.

திருமாவளவன் said...

ராஜபக்ச, பிரபாகரன் இரண்டுபேருமே துப்பாக்கி மேனியாக்கள்தான். இருவருமெ மண்ணுக்காக போராடுகிறார்கள. மனிதர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. இன்னமும் பிரபாதான் பல குழந்தைப் போராளிகளை உருவாக்கி பலிகொடுத்தவர். நீங்கள் ஏன் ஒருதலைப்பட்சமாக பேசுகிறீர்கள். தமிழன் என்பதாலா? துமிழன் மட்டும் கொலைசெய்யலாமா?
கரிகாலன்