
என்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்". ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து. முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன். சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம். ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது. அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை இயக்கியவால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம். " மோட்டார் சைக்கிள் டைரீஸ் " |
17 comments:
எனக்கு பிடித்த திரைபடங்கலில் இதுவும் ஒன்ரு.. சே மட்டுமே காரனம்...அந்த பால் வடியும் முகமா பின்னாலில் அமெரிக்கா பயப்படும் படி செய்தது, நம்பமுடியவில்லை, ஆனால் னேருப்பு எங்கிருந்து புரப்படும் என்ரு யாருக்கு தெரியும்..
அப்புரம் அந்த பயனம், பயனங்கல் எப்பொலுதுமெ சுகம்..அதுவும் ஒரு நல்ல நன்பனொடு, எந்த கட்டுப்பாடும் இல்லத ஒரு பயனம்....பைகில் தலை முடி காட்ரில் பரக்க.. நினைக்கும் பொது ஒரு சிகரெட் பட்ரவைத்து,.. இந்த படம் பார்த பொலுது நானும் ஒரு பயனம் போனென்...
இந்த மாதிரி பயனங்கலில் பல நல்லவர்கலை பார்கலாம்..உஙல் பயனம் எந்த நகரத்தை நொக்கி போஹாதவரை....
சே பற்றிய அபிமானம் என்னை நீண்ட நாளாக ஆட்கொண்டுள்ளது. நண்பர்களுடன் கதைக்கின்றபோது சே பற்றி கதைக்கும் போதெல்லாம் ஒரு வித பரவாத்தை உணர்வேன். சே பற்ற் அண்மையில் கூட சே 1, சே 2 என்கிற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவரது கனவிலிருந்து போராட்டத்துக்கு, பொஸ்னிய டைரிக் குறிபுகல் போன்ற புத்தகங்களை வாசித்துப் பாருங்கள்....
சே பற்றி நான் எழுதிய பதிவு, அதுவும் இதே திரைப் படத்தை முன் வைத்து
http://solvathellamunmai.blogspot.com/2009/02/slum-dog-millionaire.html
பேனாக் கத்தி என்ன. பேனாவைக் கூடப் பயன் படுத்தாத ஒரு புரட்சிக்காரரின் பெயரை வைத்திருக்கிறீர்கள். நன்றாக எழுதுகிறீர்கள்.
http://kgjawarlal.wordpress.com
நல்ல தலைப்பு நல்ல வர்ணனை..
பாராட்டுகள் நண்பா
அருமையான கவிதை... போன்றதொரு விமர்சனம்... நன்றி
அன்பு வேண்டுகோள்.... அனுபவித்துப் படிக்கும் உங்கள் வரிகளை சில எழுத்துப்பிழைகள் ஈ போல் மொய்த்து தொந்தரவு செய்கிறது.. கவனியுங்கள் நண்பரே
வணக்கம் நண்பா, நான் முரளி. சே வின் முழுவாழ்க்கையும் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று பாகம் வெளிவந்து விட்டது. இன்னும் நாலு பாகங்கள் வெளிவர இருக்கின்றன. அவசியம் பாருங்கள்.
உதவிக்கி IMDB.COM ல் தேடவும்.
எனக்கும் மிகவும் பிடித்த படம் இது. சே வாகவும் அவரது நண்பர் அல்பர்டோவாகவும் நடித்தவர்கள் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.
ஆனால் இதில் சே மிகவும் சீரியஸாக இருப்பார். நிஜத்தில் சே இன்னும் சூட்டிகையாக இருப்பதாக அவரது புகைப்படங்கள் காட்டுகின்றன இல்லையா?
உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா ‘சே’ என்கிற அந்த் பெயரும் அங்கு வாழ்ந்த இந்தியா வம்சாவளியினார் கொடுத்த பெயர் தான் ...
Sorry for writing in English. Walter Seles didn't direct 'City of God'. He was the executive producer of the movie.
வருகைக்கு நன்றி தீபா.
வாருங்கள் கமா வணக்கம்.
கருத்துக்கு நன்றி
வாருங்கள் அருண்மொழிவர்மன்
நிச்சயம் படிப்பேன்.
வாருங்கள் ஜவர்லால்
வணக்கம் கருத்துக்கு நன்றி
நன்றி ஞானசேகரன்
திருத்திக்கொள்கிறேன் கதிர், நன்றி
நன்றி முரளிகுமார்
நன்றி அக்னிப்பார்வை
நன்றி பிரசன்னா
உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி தீபா.
நன்றி யூத்புல் விகடன்
தலைப்பை ரசித்தேன்.
Post a Comment