
நெருக்கடிகளின் அடர்த்தியில் தானாக முளைக்கிற எதுவும் புரட்சியின் அடையாளமாகும்.தொழிற் புரட்சிக்குப் பிந்தைய ரஷிய சமூக பொருளாதாரப் பின்னடைவுகளில் அங்கிருந்த 50 சதமான தொழிற்சலைகள் மூடப்பட்டன. கோடிக்கணக்கான தொழிலாளர் வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். மீதமிருந்த தொழிற்சாலைகள் அதையே காரணம் காட்டி வாங்கிக்கொண்டிருந்த கூலியில் 50 சதமானத்தை தட்டிப்பறித்தன. அதற்கெதிரான கிளர்ச்சியாக டான்பாஸ் சுரங்கத்தொழிலாளர்கள், யூரல் உலோகத்தொழிலாளர்கள், பக்கு எண்னெய் உற்பத்தித்தொழலாளர்களின், மத்திய ஜவுளி உற்பத்திக்கழக தொழிலாளர்களின் ஆர்ப்பட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நாடுதழுவிய உஷ்ணத்தை உற்பத்தி செய்தது. 1917 ஜூலை முதல் நாள் பெற்றோக்ரேடில் கூடிய ஐந்துலட்சம் ஆர்பாட்டக்காரர்களின் மேல் அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. கூலி உயர்த்திக்கேட்ட தொழிளார்கள் அறுபத்துநான்குபேரின் உயிர்தான் நவம்பர் புரட்சிக்கான முதல் முதலீடானது. அங்கு சிந்திய 650 பேரின் குருதியில் இறுதி வடிவம் நவம்பர் 7 நாளில் மாஸ்கோ பெட்றோக்ரேடில் போல்ஸ்விக்குகளின்புரட்சியாக மாறியது. ப்ரவின்சியல் அரசு தூக்கிவீசப்பட்டு உலகின் முதல் தொழிலாளர் அரசின் செங்கொடி அலையாடியது. வறட்சி வந்தால் புரட்சி வரும் எனும் கிராமச் சொலவடையின் மகோன்னதமான நிஜம் நவம்பர் 7 புரட்சி.பெருகி வரும் வேலையிழப்பு, அரைப்பட்டினி-முழுப்பட்டினி, பட்டினிச்சாவுகள், சோகையான கர்ப்பவதிகள்,குழந்தை தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் என்கிற கணக்கிலடங்கா நெருக்கடிகள் நிறைந்திருக்கிறது இங்கே. தகிக்கும் தனலின் மேல் ஈரத்துணிகள் போர்த்தும் நவவஞ்சகம் ஜெயிக்கிற தேசத்திலிருந்து வலைமக்களுக்கு புரட்சி நினைவுகூறும் வாழ்த்துக்கள். |
8 comments:
பயனுள்ள பதிவு நண்பரே.
அன்பே சிவம் 911 கண்ட கமல்ஹாசனின் பிறந்த நாளும் இன்றே, என்னவொரு பொருத்தம்.
//தகிக்கும் தனலின் மேல் ஈரத்துணிகள் போர்த்தும் நவவஞ்சகம் ஜெயிக்கிற தேசத்திலிருந்து வலைமக்களுக்கு புரட்சி நினைவுகூறும் வாழ்த்துக்கள்.
//
நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா,....
\\வறட்சி வந்தால் புரட்சி வரும்...//
நல்ல பகிர்வு..! ரணமான வரிகள்.
//வறட்சி வந்தால் புரட்சி வரும்//
நன்றி
அறிய செய்தி அறியப்படுத்தியமைக்கு நன்றி....
//வறட்சி வந்தால் புரட்சி வரும்....//
சரிதான்.
நல்ல இடுகை....
புரட்சி நாளைப் போற்றுவோம்.
இடுகைக்கு நன்றி அங்கிள்!
அன்பு காமராஜ்,
நலமா, நிறைய நாட்களாகி விட்டது. உங்கள் பதிவுகளைப் பார்த்து. வேலை அதிகமாகி விட்டது. அருமையான பதிவு, ஆனால் நிறைய சொல்லாமல் விட்டு விட்டீர்கள் என்று தோன்றுகிறது. உங்களுக்கும் நேரமிண்மை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். 1921 வரை நடந்த அந்த civil war பற்றி இன்னும் தகவல்களை குடுத்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இந்த பொருளாதார நசிவுக்குப் பிறகு லெனின் தலைமையில், புதிய கொள்கையின் மூலம் பொருளாதாரம் எப்படி மறுமலர்ச்சியை நோக்கி பயணப்பட்டது என்பதும் உங்களில் யாராவது பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைய எழுதுங்கள் காமராஜ்!
அன்புடன்
ராகவன்
பயனுள்ள இடுகை. பகிர்வுக்கு நன்றி!
Post a Comment