15.4.10

செய்திகளுக்கு அப்பால்

அந்த புகைவண்டி நிலையத்துதுக்கு வரும் சாலையோரம் அவர்களின் வசிப்பிடம்.பாலித்தீன் சாக்குகளினால் கட்டப்பட்ட டெண்ட்.மூன்று குழந்தைகள் ஒரு பெரியவரோடு கணவனும் மனைவியும்.சேலம் பக்கத்திலிருந்து வந்த நாடோ டிகள்.பிழைப்புக்கு ஏதாவது செய்வார்கள் அதென்ன அம்பானி குடும்பமா இல்லை ஐம்பது ஏக்கர் நிலமிருக்கும் சம்சாரி குடும்பமா. இரவு வேட்டையாடிய எதோ ஒரு விலங்கு சட்டியில் வெந்து கொண்டிருந்தது.விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் முழுக்கவனமும் தீயின் ஜுவாலையோடு அந்த சட்டியைக் குறிவைத்திருந்தது.காலை ஏழேகால் பாஸஞ்சர் வண்டி வந்து மனிதர்களைத் தட்டிவிட்டுப் போனது.

அவள் தனது மாமனாரோடு ஏதோ விவகாரம் பேசிக்கொண்டே,சட்டியை திறந்து கிளறிவிட்டுக்கொண்டே,விளையாடும் பிள்ளைகளை வண்டி வருது என எச்சரித்துக்கொண்டே,கடைக்குப்போன கனவனை எதிர்பார்த்துக்கொண்டே கலம் நகர்த்தினாள்.பாஸஞ்சர் வண்டியில் இருந்து இறங்கி வந்த சூட்டுப் போட்ட கணவான் ஒருவன் அவளிடம் நேரடியகவே பேரம் பேசியிருக்கிறான்.முதலில் அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்தவளைத் திரும்பவும் துன்புறுத்தச் சினங்கொண்டு எழுந்து அவனது சட்டையைப் பிடித்துவிட்டாள்.கூட்டம் கூடியது சண்டை பார்த்தது,விவரம் கேட்டது,கருத்துச் சொன்னது.

கொடுவா மீசைவைத்த வாகனக்காப்பக சிப்பந்தி வந்து 'ஏத்தா விடு விடு இப்பென்ன கொலையா பண்ணிட்டார், ஒரு ஆம்பளய கைநீட்டி அடிக்கப்போற ?' என்று நாட்டாண்மைத் தீர்ப்புச் சொன்னார்.நான்கு சக்கர வாகனத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த யாருக்கும் இந்த சம்பவம் ஒரு பொருட்டே இல்லை.வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அவளுக்கும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லை. அவள் பெண்ணும் இல்லை,பாதிக்கப்பட்டவளும் இல்லை. கேட்பாரற்றவள். சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு ?

15 comments:

க ரா said...

என்ன சொல்றதுன்னு தெரியல சார். ஏழைகள பார்த்தா நெரைய பேத்துக்கு எலக்காரமாத்தான் இருக்கு நம்ம நாட்டுல.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு.

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள். கண்ணன் நீங்கள் சொல்வது போல இந்தியாவில் மட்டும் அல்ல, எல்லா நாடுகளிலும் இதே நிலைமை தான்

அன்புடன் அருணா said...

யாரைக் குறை சொல்வது?...என்னவென்று சொல்வது?அவ்வப்போது நாம் கூட வேடிக்கை பார்க்கும் மனிதர்களாகி விடுகிறோம்தான்.

vasu balaji said...

சென்னையிலும் அடிக்கடி நான் கண்ட காட்சிதான். ஆனால் கேட்டவன் தவறாமல் பஞ்சாகிப் போவது உறுதி!

Unknown said...

ஒரு பக்கம் ஏழைகள் இப்பிடி கஷ்டப்பட, இன்னொரு பக்கம் IPL கிரிக்கெட் மாட்ச்சில் கோடி கணக்கில் கேட்ட படி விளையாடிக் கொண்டிருக்கிறேன்றனர். நம் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் stadium த்தில் என்ன கொண்டாட்டம். எல்லாம் கொஞ்சம் மாறனும்

பத்மா said...

இதைதான் நாள் முழுக்க மனசுல நெனச்சுட்டே இருந்தேன் .பெண்கள்னா பாதிபேருக்கு இப்படித்தான் .திக்கற்றவர்க்கு தெய்வமே துணை

'பரிவை' சே.குமார் said...

அருமையான ஆதங்க பதிவு அண்ணே.

பா.ராஜாராம் said...

உடல் முழுக்க கண்ணா காமு?

தத்ரூபம்,நேயம்.

சந்தனமுல்லை said...

:-(( மிகுந்த வலியைத் தரும் இடுகை அண்ணா!

உயிரோடை said...

சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு ?

வலி சொல்லும் உண்மை. நல்ல பகிர்வு அண்ணா

க.பாலாசி said...

//அவள் பெண்ணும் இல்லை,பாதிக்கப்பட்டவளும் இல்லை. கேட்பாரற்றவள். சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு ?//

வருந்துகிறேன். என்னுடன் பிறந்த ஆண்கள் கூட்டத்திலும் எத்தனை கழுகுகள்...

ரோகிணிசிவா said...

// க.பாலாசி said...
//அவள் பெண்ணும் இல்லை,பாதிக்கப்பட்டவளும் இல்லை. கேட்பாரற்றவள். சாலையோரம் நடப்பட்ட மரங்களுக்குக் கூட வேலி இருக்கிறது. சாலையோர ஜனங்களுக்கு ?//

வருந்துகிறேன். என்னுடன் பிறந்த ஆண்கள் கூட்டத்திலும் எத்தனை கழுகுகள்...//
நன்றி பாலாசி ,


இது ஏழைகளுக்கு மட்டும் அல்ல ,பொதுவில் பெண்களுக்கு நடக்கும் அநீதி, அவள் கொடுத்துவைத்தவள் ,சட்டை பிடிக்க அவள் பாமரத்தனம் பயன்பட்டது , படித்த நல்ல வேலையில் இருக்கும் பெண்ணால் அதை எதிர்த்து கேட்க கூட முடியாது , புன்னைகையுடன் தாண்டி செல்ல வேண்டிய அவலம் உண்டு ,

vasan said...

அன்புள்ள‌ காம‌ராஜ் ,
இந்த‌ அள‌வு ம‌னித‌ம் செத்து
வ‌ன்ம‌ம் அலைகிற‌தா, சர்வ‌ சாத‌ர‌ண‌மாய்?
யார், யாரெல்லாம் இத‌ற்கு கார‌ண‌ம்?
க‌ண்ட‌ குப்பைக‌ளை ந‌ம் வீட்டு
ஹாலில் அனும‌தியின்றி கொட்டும் டீவீ சான‌ல்க‌ளா?
ந‌டிகை, சினிமாகிசுகிசு ம‌‌ட்டும் விற்கும் ப‌த்திரிக்கைக‌ளா?
சிறு த‌வ‌றுக‌ளுக்கு லஞ்ச‌ம் வாங்கிட்டு,
பெரிய‌ குற்ற‌ங்க‌ளுக்கு ச‌லாம் போடும் காவ‌லா?
நீதிப‌திக‌ளின் தீர்ப்பே, நியாய‌ த‌ராசில் ச‌ரிவ‌தாலா?
அர‌சிய‌ல் ப‌த‌விக‌ள் ஊழிய‌ம் செய்யாம‌ல்
ஊரை அடித்து த‌ன் உலையில் போடுவ‌தாலா?
ப‌ணிவிடை செய்ய‌ வேண்டிய‌ ப‌ண‌மே,
ந‌ம‌து எஜ‌மான் ஆன‌தாலா?
இல்லை.. இல்லை.. இல்ல‌வே இல்லை.
நாம் ஓட்டுப் பிச்சை இட்ட‌தால்
ஐந்தாண்டு பிழைப்பு ந‌ட‌த்திய‌ க‌ட்சிக‌ளிட‌ம்
கை நீட்டி காசு வாங்கி, த‌ன் வாக்கு விற்று,
ந‌ம் வலிமை அறியாது வ‌ழி மாறி,
ஓசிக்கு அலையும், நாம்.. நாம் ம‌ட்டுமே
இத்தகைய‌ இழி நிலைக்கு முழு பொறுப்பு.
`முக‌த்தில் உமிழ்ந்து விடு பாப்பா`
பார‌திக‌ளும், பாப்பாக்க‌ளும், பாரில்,
டாஷ்மாக்கில் அல்ல‌து, இது மாதிரி
பிளாக்குக‌ளில் ம‌ட்டும், ர‌க‌சிய‌மாய்,
ப‌க்க‌ம் பார்த்து `க‌வ‌ன‌மாய்` பித‌ற்றிக் கொண்டு

vasan said...

அன்புள்ள‌ காம‌ராஜ்.
ச‌கோத‌ரி, ரோகிணிசிவாவின்
க‌ருத்து மிக‌ முக்கிய‌மான‌து.

`பாம‌ர‌த்த‌ன‌ம் க‌ய‌மையை எதிர்த்து
போரிட‌ துணிகிற‌து, ஆனால் ப‌டிப்பு
க‌ய‌மை தாங்கி புன்ன‌கைத்து வில‌க‌க்
கற்று த‌ருகிற‌து`

பின்னோட்ட‌ம் இட்ட‌பின் பார்த்தால்
இர‌ண்டாம் முறையாய்..

நேசமித்ரன் said...

எப்படி தவற விட்டேன் இந்த இடுகையை

வலிக்கும் காயத்தில் கீறும் நகம்