13.6.10

மொழியாக்கச் சிறப்பிதழ்

// இரண்டு சின்னப்பெண்கள் எலுமிச்சை பாணம் கொண்டு வந்தார்கள்.மாப்பிள்ளைப் பையன் எடுத்துக்குடிக்க ஆரம்பிக்கு முன்னே  மீண்டும் தன் தகப்பனிடம் காதில் குசுகுசுத்தான்.இந்த முறை அவர் முகம் சுழித்தார் எனினும் அவன் வெளியே ஓடினான்.கூட்டத்தின் கவனத்தைத் திசை திருப்ப ஐயா பீடி இருக்கிறதா என்று ரத்னாகரிடம் கேட்டார். பீடிக் கட்டைத் தேட அடுக்களைக்குப் போன ரத்னாகரின் கண்ணில் மாப்பிள்ளைப் பையனின் உருவம் தென்பட்டது.பாவம் பையனுக்கு பதட்டம் போல என்றபடி அவனைப் பார்த்தான். அசோக மரத்துக்கு அடியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த அவன் முகம் கடுகடுப்பாக இருந்தது.முடிந்து திரும்பி வரவேண்டிய அவன் உறைந்து நின்றான் தலையை அண்ணாந்து பார்த்து தண்ணீரில் மூழ்கியவனைப்
போல பாவனை காட்டினான்.

மறுநாள் தரகர் வந்து பட்டாசுக் கடைக்காரருக்கு ருக்மினியின் பாட்டு பிடித்துப் போனதாகச் சொன்னான். தேதி குறிக்க வேண்டியதையும், மண்டபம் பிடிக்கவேண்டியதையும் சொல்லிக் கொண்டிருக்கும் போது ரத்னாகர் சஞ்சலத்துடன் தலையை ஆட்டினான்.காலையில் பேருந்தைப் பிடித்து குடைவீதிக்குப் போனான்.பட்டாசுக் கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந்த பையனின் தகப்பனார் வரவேற்றார். வருங்கால மாமனார் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்லி பையனைக் குஷிப்படுத்தினார்.'அவருக்கு வணக்கம் சொல்லவேண்டாமா' என்று கேட்டுவிட்டு பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் என்று சொன்னார்.அவருடன் பேசிக்கொண்டிருந்த போதே
பையனின் நடவடிக்கைகளைக் கவனித்த ரத்னாகர் அவனிடம் தனியாகப் பேசவேண்டுமெனக் கேட்டார்.

கடையை விட்டு நடந்த இருவருக்குள்ளும் மௌனம் கூடவே வந்தது.நெடுந்தூரம் நடந்த அவர்கள்  அனுமன் கோவிலுக்கருகே ஒரு ஆலமரத்தடிக்கு வந்தார்கள். அவனை உட்காரச் சொன்ன ரத்னாகர். கொஞ்ச நேரம் அவனைப் பேசவிட்டு அவனது முகம் உதடு,ஆகியவற்றைக் கவனித்தான்.திடீரென்று அவன் மணிக்கட்டைப்பிடித்து

'எங்கிருந்து இதை வாங்கினாய்,ரோட்டோ ரத்திலா?,லாட்ஜிலா?,இல்லை கட்டைச் சுவருக்குப் பின்னாலா?. //

0

சுல்தானின் பேட்டரி

ஆங்கிலம்-அரவிந்த் அடிகா
தமிழில்- எஸ்.காமராஜ்
மொழியாக்கச் சிறுகதையில் ஒரு சிறு பகுதி.





புதுவிசை (ஏப்-ஜூன் 2010 ) காலாண்டிதழில்.

மராத்தி, இந்தி, கவிதைகள்

சலீல் வாஹ,அமிதா கோகடே நிதின் குல்கர்னி,  தமிழில்- மதியழகன் சுப்பையா

சிறுகதைகள்.

மந்திரக்கண்ணாடி- மலையாளம் ;கிரேஸி        தமிழில்- உதயசங்கர்
நிர்வாணம் -ஆங்கிலம்; நர்கீஸ் தலால்          தமிழில்- ஆனந்தசெல்வி
சுல்தானின் பேட்டரி- ஆங்கிலம் ;அரவிந்த் அடிகா தமிழில்- எஸ்.காமராஜ்

மற்றும்

மரு.உமர்பாரூக்,தஞ்சை சாம்பான்,ந.இரவீந்திரன்,எவிடென்ஸ் ஆய்வறிக்கை,முருகவேல்,முனைவர் சி.லட்சுமணன்,கோ.ரகுபதி,சுகவன முருகன் ஆகியோரின் கட்டுரைகள்.

விமர்சனம்

3 பத்தாண்டுகளும் உதயசங்கர் சிறுகதைகளும் - அப்பணசாமி

11 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

சரளமான நடை... அம்மா வீட்டிற்குள் வளைய வரும் புதிதாய் திருமணமான பெண் போலே...

விசை படிக்க விழைகிறது மனசு...

அன்புடன்
ராகவன்

துளசி கோபால் said...

தனிமடல்.

பிரசுரிக்க வேண்டாம்.

மன்னிக்கணும்.

எழுத்துப்பிழைகள் நிறைய :(

பாயஸத்தில் கல் போல.

திருத்திவிடுங்கள்.

காமராஜ் said...

என்னாச்சு ராகவன் ?
என்ன தவமிது ?
நண்பர்களைத்தவிக்கவிட்டு விட்டு,
என்ன தேடினீர்கள்.

ரொம்பக் கஷ்டமாச்சுது ராகவன்.

சலித்துத்திரும்புகையில் எதிர்ப்பட்ட காத்திருப்பாக. ராகவனின் வருகை.

vasu balaji said...

மொழியாக்கமோ என்னமோ. எனக்கு எழுத்தில் காமராஜ் தெரிகிறார்.

க ரா said...

அருமை காமு சார்.

Swengnr said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

நேசமித்ரன் said...

காமு சார்

உங்களின் தனித்துவம் மிளிர்கிறது
மொழிமாற்றத்திலும்

வெள்ளைப் புலி படித்திருக்கிறீர்களா அரவிந்த் அடிகாவினுடையது

சீமான்கனி said...

புதுப்பிக்கப்பட்ட கோவில் பிரஹாரம் போல்...அழகான தெளிவான மொழிபெயர்ப்பு...வாழ்த்துகள் அண்ணே...

பனித்துளி சங்கர் said...

////வானம்பாடிகள் said...
மொழியாக்கமோ என்னமோ. எனக்கு எழுத்தில் காமராஜ் தெரிகிறார்.
////////

அய்யா எதற்காக இங்கு உதாரணத்திற்கு காமராஜ் ????

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
மொழியாக்கமோ என்னமோ. எனக்கு எழுத்தில் காமராஜ் தெரிகிறார்.//

அதேதான்...

ஹேமா said...

விசை வேகம்தான்.நன்றி.