7.3.10

தலைமுறைகளைத் தவற விட்டவர்கள்.

தகுதிகான் தேர்வில்
தோற்றுப்போன
கலைச்செல்வியும்

தொண்ணூறு சதவீத
மதிப்பெண்ணிருந்தும்
தகப்பனின் காசநோயால்
வீடு திரும்பிய
மாரீஸ்வரியும்

தீப்பெட்டித்
தொழிற்சாலையில்
படிக்கிறார்கள்
வாழ்க்கையை.

அங்கே
கைப் பிள்ளையைப்
பார்க்கச் சொல்லிவிட்டு
கழிப்பறை செல்லும்
முன்னோடி
காளீஸ்வரியிடம்
படிக்கிறார்கள்
வறுமையை.

அடுத்த
தலைமுறையிலாவது
அவர்களுக்குப் புரியும்
பெண்ணியமும்
திண்ணியமும்


23.11.2008

26 comments:

அன்புடன் நான் said...

கவிதை மிக நல்லயிருக்குங்க.

சாந்தி மாரியப்பன் said...

வறுமைக்கு தின்னக்கொடுத்த வாழ்க்கையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா.

காமராஜ் said...

வாருங்கள் கருணாகரசு.
அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

அமைதிச்சாரல்
வணக்கம்.
கருத்துக்கு வந்தனம்.
அது கவிதையாக்குகிறது
என் எழுத்தை.
நன்றிங்க.

காமராஜ் said...

அன்புத் தங்கைகளே.
நன்றி.

அம்பிகா said...

\\"தலைமுறைகளைத் தவற விட்டவர்கள்."\\

\\அடுத்த
தலைமுறையிலாவது
அவர்களுக்குப் புரியும்
பெண்ணியமும்
திண்ணியமும்\\
வலியை சொல்லும் வரிகள்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு காமு.

காமராஜ் said...

அன்புக்கு நன்றி அம்பிகா.

காமராஜ் said...

வாங்க அன்பு பாரா

vidivelli said...

very nice.............

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம் விடிவெள்ளி.
கருத்துக்கு நன்றி.

சுந்தரா said...

இல்லாமையென்னும் இயலாமைக்குக் கனவுகளைக் காவுகொடுக்கிற வாழ்க்கை...

மனதைத் தைக்கிற கவிதை அண்ணா.

பத்மா said...

நாம் என்ன செய்ய போறோம்னு மனச கேக்க வைக்குதுங்க உங்க கவிதை

காமராஜ் said...

நன்றி சுந்தரா..

காமராஜ் said...

பத்மா
வாருங்கள்
வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி.

thiyaa said...

நல்லயிருக்குங்க.

அன்புடன் அருணா said...

/"தலைமுறைகளைத் தவற விட்டவர்கள்."/
தலைப்பே இதில் இன்னும் நிறைய யோசிக்க வைக்கிறது.

Unknown said...

நல்ல கவிதை காமராஜ்.

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.

காமராஜ் said...

நன்றி தியாவின் பேனா.

காமராஜ் said...

வணக்கம் செல்வராஜ்.
வருகைக்கும் கருத்துக்கும்
அன்புக்கும் நன்றி

அன்புடன் அருணா said...

/"தலைமுறைகளைத் தவற விட்டவர்கள்."/
தலைப்பே இதில் இன்னும் நிறைய யோசிக்க வைக்கிறது.

காமராஜ் said...

மீண்டும் மீண்டும் நன்றி அருணா மேடம்.

☼ வெயிலான் said...

தீப்பெட்டிப் பள்ளிக்கூடங்கள் :(

lily said...

கவிதை மிகவும் அருமை அண்ணா.