அந்த ஜாம்பவானுக்கு பதவி உயர்வுமேல் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டிருந்தது.கேட்ட இடத்துக்கு மாறுதலும் கிடைத்தது. இப்போது அவன் ஒரு உயர் அதிகாரி. அவனுக்கு கீழே ஊழியர்கள் இருக்கனுமில்லையா. இருக்கிறவர்களில் பெரும்பாலும் பெண்கள்.அதில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பெண்.வந்த நாளில் இருந்து அவரை சீண்டுவது மட்டுமே தன் குலத்தொழில் என்பதை கறாறாகக் கடைப்பிடித்து வருகிறான்.சீண்டலின் அளவு நாளாக நாளாகக் கூடிக்கொண்டே வருகிறது.அதையெல்லாம் பட்டியலிட மனசு கூசுகிறது.இயல்பான மத்திய தர நடைமுறை அவரை கூடுதல் பொறுமைசாலி யாக்குகிறது.'பொறுமையென்னும் நகையணிந்து பெண்கள் பெருமை கொள்ளவேண்டும்'.பொறுமையிலே பூமகளாம்,அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் அம்மா அகந்தை கொள்ளக்கூடாது எந்நாளும்'.இப்படியே சொல்லிசொல்லி சோத்திலிருக்கிற உப்பை மட்டுமல்ல பெண்களின் ரத்தத்திலிருக்கும் உப்புசத்தையும் உறிஞ்சி எடுத்து விட்டது சமூகம்.
அவன், அந்த ஜாம்பவான் தனக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிற நேரமெல்லாம் ஏதாவது சொல்லித் திட்டுகிறான். இறுதியாக ஒருநாள் புதிதாக வந்த ஒரு பெண் அலுவலரிடம்,பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தாறுமாறாகத் திட்டுகிறான்.காரணம் அந்தப்புதிய பெண்ணுக்கு எழுந்து நின்று மரியாதை தரவில்லையாம்.புதியவரின் தாயார் வயதிருக்கும் இவருக்கு. ரெண்டுபேரும் அடுத்தடுத்த இருக்கையில் இருந்து வேலைபார்க்கும் அமைப்பு வேறு. அப்படியே மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் இவர் நாள் முழுக்க இருக்கையில் உட்காரவே முடியாது.இதையெல்லாம் சொல்லி ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபொழுது "கோபம் வந்தால் நான் பிறகு யாரைத்தான் திட்டுவதாம் ?" என்று தனது அடாவடிக்கும் ஆதிக்கத்திமிருக்கும் நியாயம் கற்பிக்கிறான்.
நமக்கு நடப்பது சமூகப்பேரவலம் என்பது தெரியாதவரை அதை ஏற்றுக்கொள்கிறது அடிமைத்தனம். அந்த தளையிலிருந்து கல்வியும்,பொது அறிவும் கொஞ்சம் கட்டைத் தளர்த்திவிடுகிறது.தனக்குக் கொடுக்கவேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தைக் கூட ஈவிறக்கமில்லாமல் சிதைக்கிறது இந்தச்சமூகம் என்பதைத் தெரிந்துகொண்டபின் ஏற்படுகிற வலி மிகக்கொடியது.அவர் இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறார். எதிலிருந்து விடுபடப் படித்தாரோ, எதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேலைக்கு வந்தாரோ அதுவே மீண்டும் கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு கூடவே அலைகிறது. அவன் என்ன படித்தானென்று தெரியவில்லை.
"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"
என்று பாரதி பாடினான்.அது நடக்குமா என்பது தெரியவில்லை.ஆமா அவன அந்தச் சொறிநாய என்ன செய்யலாம் ?
0
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தச் செய்தியைப் பதிவிட்ட பின்னாடி படிக்க நேர்ந்த மூன்று
பதிவுகள் சுஷ்மா திவாரியின் வழக்கு குறித்தது.
ஒரு வேற்று சாதி ஆடவனை காதலித்து மணந்ததால் வெறியேறிய உயர் மிராண்டிச் சகோதரன் காதலனோடு மூன்று பேரைக் கொன்று போட்டிருக்கிறான். 2004 ல் நடந்த இந்த குற்றத்துக்கு கிடைத்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பாகியிருக்கிறது.
அது குறித்து விமர்சனம் இல்லை. ஆனால் அதற்குக் கூறப்பட்ட விளக்கம் மிக மிக கொடூரமானது. கொலையை ஆதிக்க மனோபாவத்தோடு நியாயப் படுத்துகிறது. ஆழ்ந்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியஇதை அன்புத் தோழர்கள்
முகிலன்
http://pithatralkal.blogspot.com/2010/03/blog-post_13.html
ச.தமிழ்ச்செல்வன்மகளிர் தினமும் இரண்டு கதைகளும்
வெண்ணிற இரவுகள் கார்த்திக்
தங்கள் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதை நண்பர்கள் அன்பு கூர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------
18 comments:
//"கோபம் வந்தால் நான் பிறகு யாரைத்தான் திட்டுவதாம் ?"//
அடப்பாவி
ஆரோ ஒருவர். அவர் வில்லன் உங்கள் பதிவில்.
அவர் கருத்தென்ன என்று அவரிடம் கேட்டால் அவர் இப்பதிவில் சொன்ன அனைத்துமே motivated character assassination என்பார்.
பலபெண்கள் இப்பதிவில் கதா பாத்திரங்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி வஞ்சிக்க்பபட்டார்கள் என நீங்கள் சொல்லி மற்றவர்கள் அறிகிறார்கள்.
அவ்ரிட்ம் கேட்டால், அவர்களை நான் ஏன் அப்படி நடாத்தினேன் என்பதற்கு பிறரை நம்பவைக்கும் விளக்கம் தருவார் என்பது நிச்சயம்.
ஒரு வழக்கு. வாதி. பிரதிவாதி.
வாதி நீங்கள அல்லது அப்பெண்கள் சார்பாக எழுதும் நீங்கள்.
பிரதிவாதி ஆரைக்குற்ற்ம்சாட்டுகிறீர்களே அவர்.
அவர் விளக்கம் எங்கே?
அஃது இங்கே இல்லை.
நீங்கள் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்கிவிட்லாமா?
இதுதான் நீதியா?
இன்றைய கால கட்டத்தில் நல்ல கணவன் அமைவது மட்டும் வரம் அல்ல.
நல்ல பணியிடம் (நல்ல அதிகாரி) அமைவது கூட வரம் தான்.
பத்துக்கு ஒன்பது நிறுவனங்களில் மனிதர்களுக்கு இடையே அன்போ பாசமோ நிலவுவதில்லை. மேசைக்கு மேசை பொறாமையும், காழ்ப்பு உணர்ச்சிகளும் நிலவுகின்றன.
இதனால் தான் படித்த மக்களும் அன்பையும், ஆதரவு வார்த்தைகளையும் தேடி நித்த்யனத, ரவி ஷங்கர், ஜாக்கி இடம் செல்கின்றனர்.
good post as always
வாங்க ஜோ வணக்கம்.
எல்லாவற்றுக்கும் இன்னொரு பக்கமுண்டு.அவரவர்க்கென ஒரு நீதியும் உண்டு. ஆனால் பொது நீதி ஒன்று கட்டாயம் இருந்தே
ஆகவேண்டும். காட்டிக் கொடுப்பவனுக்கு,லஞ்சம் வாங்குபவனுக்கு,யூதாசுக்கு,வன் கொடுமை செய்பவனுக்கு,சுஷ்மாவின் கணவனைக் கொன்றவனுக்கு ஒரு தரப்பு இருந்தே தீரும் ஜோ.
அதை கேட்கவேண்டுமென்பதிலும் இரண்டு
கருத்தில்லை.ஆனால் ஒரு செய்தியைச் சொல்லும்போது எனக்கொரு கருத்திருக்கிறது அதை நான் வழிமொழிவேன்.
ஒரு கன்னத்திலடித்தால் மறு கன்னத்தைக் காண்பிக்கச் சொன்ன அதே ஜீசஸ் கண்ணுக்கு கண்,பல்லுக்குப்பல் என்று சொன்னார் என்பதை அதன் இடம் காலம் இரண்டோ டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணை,அதுவும் ஒரு தலித் பெண்ணை தினம் தினம் அலுவலக ரீதியாக மான பங்கப்படுத்துகிற நாய்க்கு பின்னால் என்ன இருந்து விடப்போகிறது.
அது என் சகோதரி,என் தாய், அல்லது நான் என்று நினைத்துப்பார்த்தால் கொஞ்சம் வலியுணரலாம்.ஆனாலும் முழுமையாக உணர முடியாது. பசித்த வயிற்றுக்கு ரொட்டி இல்லையா அப்படியானால் கேக் சாப்பிடச் சொல் என்கிற ஜாரின் மனையின் வாதத்துக்கும் கூட ஒரு பக்கமிருக்கிறது ஜோ.
ஆனால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
படித்தேன். இரசித்தேன். நன்றி.
எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அதை எழுதினால் விதண்டாவாதம் ஆகிவிடும்.
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்
தோழரே
வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்
அதிகாரிகள் என்னும் ஆண் மாமியார்கள்
எல்லா நிறுவனங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. (பெண்ணியப் பார்வையில் அந்த வார்த்தை குறித்து வேறு கருத்துக்கள் உண்டு)
ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் போது தலித்கள் சந்திக்கும் பிரச்னைகள் பலதரப்பட்டவை.. குறிப்பாக பெண்கள்.. ஒன்றாய் உணவருந்துவதற்கு மற்ற பெண்களிடமிருந்து அழைப்பு வருவது கூட சிரமம் தான்..
மாமா! குமரேசன்களுக்கு நாள் குறித்தாகிவிட்டது கவலையை விடுங்கள்...
நான் இங்கு உங்களோடு மற்றொரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....
தமிழ்வீதிக்கு சென்றேன்.அந்த பதிவையும் படித்தேன்.அதற்கு ஒரு பின்னூட்டமும் எழுதியுள்ளேன்.
இப்போது “எனது பார்வை” என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டுள்ளேன்.
படித்து விட்டு சொல்லவும்...
வாங்க கதிர் வணக்கம்.
ராம்ஜி யாஹூ
உங்கள் அன்புக்கும்,கருத்துக்கும் நன்றி.
ஆமாம் பாலு,
மிக தெளிவாகச்சொன்னீர்கள்.
ஒரு பணியிடத்தின் ஏனைய ஊழியர்கள்
மாமா மச்சான் என்று உறவுகொண்டாடும் போது
தலித்துக்களை சார் என்று கூப்பிடுவதுகூட ஒரு வகை
ஒதுக்குதல்.
வா அண்டோ ,
இப்பதான் கரண்ட் வந்தது.
அங்கே வருகிறேன்.
\\"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"
என்று பாரதி பாடினான்.\\
அப்பிடியெல்லாம் வெறுமனே சபிச்சு நாம கையாலாதவங்களோ அப்பிடீங்கிற சந்தேகத்த கூட எதிரிகிட்ட விட்டுட்டு போயிடக் கூடாது.
\\அது நடக்குமா என்பது தெரியவில்லை.\\
It should happen..
\\ஆமா அவன அந்தச் சொறிநாய \\
அவன குறைந்தபட்சம் சொறிநாய்ன்னாவது சொன்ன உங்க நிஜ கோபம் அர்த்தம் நிறைந்தது.
\\என்ன செய்யலாம் ?\\
ஊரே சேர்ந்து (ஊர கூட்டுறது நம்ம (உங்க:-)..) வேலை) நடுத்தெருவில நிப்பாட்டி வாயில அவனோட செருப்ப கவ்வ குடுத்து அவனோட இன்னொரு செருப்பாலயே ஊரையே அடிக்க விடனும்.
/மனப்பிறழ்வு ஏற்படுகிற நேரமெல்லாம் / அழகா சொல்லியுள்ளீர்கள்...ங்கோ..
Post a Comment