எங்கிருந்தாவது வந்து செவிகுளிரும்,நரம்புகளூடோ டி உதிரம் உருகும்,தலையாடும் காலாடும், சூழல் நிராகரித்துச் சிந்தனை குதியாட்டம் போடும்,இசையால் குழந்தைத் தன்மையைக்கொண்டு வரமுடியும்.
ஒருவருடம் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் கரைந்துபோனது என் பல முன்னிரவுகள்.களிமண் குழைந்து குழைந்து பாண்டமாகும் நுட்பமும்.றுங்கல் உடைந்து உடைந்து சிலையாகும் நுட்பமும் பயிற்சியால் சாத்தியப்படும். அதை நிரூபித்துவிட்டார்கள் அந்தக் குழந்தைகள். ஸ்ரவனைக்குழந்தை என்று ஏற்றுக்கொள்ளத்தான் கொஞ்சம் லாஞ்சனையாக இருக்கிறது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக்கண்டு சில நேரம் வியக்கவும் சில நேரம் முகம் சுழிக்கவும் நேர்ந்தது. அந்த ஸ்ரீகாந்த் சொந்தமாக மூச்சாப்போகத்தெரியாத வயசில் 'ஏரிக்கரைமேலே போறவளே பொன்மயிலே' பாடும் போது அவன் தொலைத்த பால்யம் நினைவுக்கு வராமல் போகாது.
ஒரு வாரமாகக் கொண்டாட்டம்,எதிர்பார்ப்பு,பார்வையாளர்களை ஆர்வத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்த வியாபார உத்தி இவைகளை ஸ்டார் தொலைக் காட்சி கச்சிதமாக்கியது. ஆச்சு. நேற்று எதிர்பார்த்தபடியே அல்கா அஜீத் முதலாவது வந்துவிட்டாள்.அவளது குரலில் ஒரிஜினல் பாடல்கள்கூட கூனிக்குருகும் நுனுக்கமும் பயிற்சியும் பொதிந்து கிடந்தது.எனக்குப்பிடிக்காத பல பாடல்களை அவளின் குரல் விருப்பப்பாடல்களாக உருமாற்றித்தந்தது.
பலநேரங்களில் அலுவலக, இயக்க, குடும்ப நெருக்கடிகளையும் இறுக்கத் தையும் தளர்த்திவிட்டது அல்காவின் குரல் தேடிய இந்த நிகழ்ச்சி.
சின்னச்சின்ன இழப்புகளையும்,தோல்விகளையுமே தாங்க முடியாத இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை இப்படி கூடத்தில் உட்கார்ந்து வரித்துக்கொள்கிறபோது.யுகயுகமாய் தோத்துப்போன உழைப்பாளர்கள் எம்ஜியாரை,ரஜினியை,அஜித்தை நாடிப்போவதில் வியப்பில்லை. வெள்ளத்தனைய நீர்மட்டம். 'விரலுக்கு, விரலுக்குத்தக்கன வீக்கம்.உரலுக்கு உரலுக்குத்தக்கன வீக்கம்'.
சம்பாதிப்பதில் சரிபாதி சந்தோசத்துக்குச் செலவிடும் வளமை கொண்டது மேலை நாடுகள்.வார இறுதியென்பது அவர்களுக்கு ஒரு பொங்கல், தீபாவளியைப் போலவே கழியுமாம். வெறும் ஓய்வோடு நில்லாது உற்சாகத்தை பாடத்திட்டமாக்கும் அவர்களது வாழ்வில் உடனுக்குடன் புத்துணர்வு ரீசார்ஜ் செய்யப்படுகிறது.வறுமையும், அசமத்துவமும் குறைச்சலாகி அன்றாடத் தேவைகளுக்கு அவர்கள் உயிரைப்பணயம் வைக்கத்
தேவையில்லாத வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.
ஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.
அந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா ?
ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா ?.
22 comments:
மனதை ரொம்ப காயபடுத்தி கொள்ளாதீர்கள்... இதற்கு மிக பெரிய காரணம் கட்டுபடுத்த முடியாத நமது மக்கள்தொகையே... ஏழைகள் பணகார நாடுகளிலும் இருகிறார்கள்... பணக்காரன் வாழும் அதே வாழ்கை தரத்துடன்....
I feel our life is our choice.
எங்கே பார்த்தாலும் போஸ்டர், அந்த குழந்தைகளுக்கு மன அழுத்தம், பெற்றோர்கள் மனதில் பெருங்கவலை..என்னத்தச் சொல்ல போங்க.
/ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா ?./
அது என்னமோ டி.ஆர்.பிங்கறாங்களே. அதுக்கு இது சரி வருங்களா?
wonderful post anna!
அந்த தெருவோர குழந்தை தாராளமாக பங்கு கொண்டு இருக்கலாமே airtel போட்டியில். இதில் நுழைவு கட்டணமோ, பாண் கார்ட் வைத்து இருப்பவர்கள் மட்டும் தான் பங்கு கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் இல்லையே.
it was a open competition, anyone can join and win if they have talent *& interest.
ஒரு செய்தி தெரியுமா, எத்தனயோ சுற்று போட்டிகளுக்கு அல்கா அஜித்தும், அவளது தந்தையும் முன் பதிவு இருக்காய் வசதி இல்லது, மூன்றாம் வகுப்பில் நெருக்கடியில் ரயிலில் உட்காந்து பயணித்து கிடைத்த வெற்றி.
நல்ல பகிர்வு அண்ணா
அல்காவாவின் திறமைக்கு வாழ்த்துச் சொன்னாலும் ஸ்ரீகாந்தை மறக்க முடியாது.அவனின் ஆர்வமும் துணிச்சலும் !
HI FRIEND :)
VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/
//பேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.
ஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.
அந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா ?
[ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா?//
கொட்டு முரசே கொட்டு...
நிச்சயம் வராது...வேறென்ன சொல்வது...
//இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை
இப்படி கூடத்தில் உட்கார்ந்து //
மாற்றும் ஒரு போதையாக / பிரமையாகவே
அழுத்தமான அருமையான பதிவு
நன்றி
ராசராசசோழன் said...
//மனதை ரொம்ப காயபடுத்தி கொள்ளாதீர்கள்... இதற்கு மிக பெரிய காரணம் கட்டுபடுத்த முடியாத நமது மக்கள்தொகையே... ஏழைகள் பணகார நாடுகளிலும் இருகிறார்கள்... பணக்காரன் வாழும் அதே வாழ்கை தரத்துடன்...//
நான் சொல்லவந்ததும் அதைத்தான் தோழரே அங்கேயெல்லாம் ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்கிறது இப்படியில்லை சோத்துக்கு உயிரைப்பணய்ம் வைப்பதும் பட்ட கடனுக்கு கிட்னியை விற்பதும் காயப்படாமல் எப்படி கடந்து போகமுடியும்.
Balu said...
I feel our life is our choice.
சரிதான் தோழர் பாலு.
ஆனால் புற உலகம் அதை அனுமதிப்பதில்லையே. எல்லாருக்கும் நினைத்தபடியா வாழக்கை லவிக்கிறது.
வறுமைக்கோடு,சியாச்சன் கோடு,BSE,SENSET போல இதுவும் ஒரு ரகமக இருக்கலாம் பாலாண்ணா.
நன்றி முல்லை.
ராம்ஜி_யாஹூ said...
//அந்த தெருவோர குழந்தை தாராளமாக பங்கு கொண்டு இருக்கலாமே airtel போட்டியில். இதில் நுழைவு கட்டணமோ, பாண் கார்ட் வைத்து இருப்பவர்கள் மட்டும் தான் பங்கு கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் இல்லையே.
it was a open competition, anyone can join and win if they have talent *& interest.
ஒரு செய்தி தெரியுமா, எத்தனயோ சுற்று போட்டிகளுக்கு அல்கா அஜித்தும், அவளது தந்தையும் முன் பதிவு இருக்காய் வசதி இல்லது, மூன்றாம் வகுப்பில் நெருக்கடியில் ரயிலில் உட்காந்து பயணித்து கிடைத்த வெற்றி.//
தோழர் ராம்ஜி அதெல்லாம் சரிதான்.சதாகாலமும் சின்ன மீன்களைத் தின்றுகொண்டிருந்த திமிங்கலத்தைப்பார்த்து ஞாயம் கேட்டனவாம் பிஞ்சு மீன்கள்உடனே ' சரி இனி நான் உங்களை விழுங்கமாட்டேன் நீங்கள் என்னை விழுங்கிக்கொள்ளலாம்' என்று வாயைப்பிளந்து கொண்டு நின்றதாம்.
நான் சொல்லவந்தது அதுவல்ல.
அவர்களது பயிற்சியும், முயற்சியும், உழைப்பும் ஈடு இணையற்றது அதில் ரெண்டு கருத்தே இல்லை.ஒரு வருடம் அந்தக்குடும்பம் என்னென்னவெல்லாம் இழந்திருக்கும் என்பதிலும் எந்த விமர்சனமும் இல்லை.
அனுக்ரஹா சாட்டிலைட் நகரில் 25 லட்ச ரூபாய் பெறுமான வீட்டை ஒரு குழந்தைக்கு தானமாய் கிரயம் பண்ணத்துடிக்கிற இவர்கள் இதே மாதிரியான ஏழைத் திறமைகளுக்கு ஏன் அங்கீகாரம் தரக்கூடாது. அதிலேதும் சட்டச்சிக்கல் இருக்கிறதா?
நன்றி லாவண்யா.
Blogger ஹேமா said...
// அல்காவாவின் திறமைக்கு வாழ்த்துச் சொன்னாலும் ஸ்ரீகாந்தை மறக்க முடியாது.அவனின் ஆர்வமும் துணிச்சலும் !//
உண்மை, அந்த அசாத்தியத் திறமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்லலாம்.
நன்றி பாரா,
நன்றி பாலாஜி,
நன்றி கதிர்.
கொஞ்சம் ஆழமாவே அலசி ஆராயிந்து இருகீன்கனே...அல்கா பத்தி நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க...நன்றி...
எனக்கு விஜய் T.V மலையாளிகளின் சொந்த T.V என்ற விடயம் இன்றுவரை தெரியாது. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி பார்த்த போது அவர்கள் மலையாளிகளுக்கு சார்பாக நடக்கின்றார்கள் என்னும் விடயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. நடுவர்கள் கூட தமிழர்கள் இல்லை. விசேட நடுவர்களாக வருபவர்கள் கூட 100% மலையாளிகளாக இருக்கிறார்கள். ஏன் தமிழர்களில் இசை அனுபவம் உள்ளவர்கள் இல்லையா?
இவர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். தற்போது புது நாடகம் போடுகின்றார்கள். அதாவது SMS மூலம் ரசிகர்கள் தான் தெரிவு செய்வார்களாம். அப்போது எதற்கு நடுவர்கள் இருக்கிறார்கள்? எதாவது விமர்சனம் வந்தால் நாங்கள் தெரிவு செய்யவில்லை ரசிகர்கள் தான் தெரிவு செய்தார்கள் என்று கூறி தப்பித்து கொள்வார்கள்.
காட்டு குரலில் கத்தி கத்தி பாடும் அந்த Club Dancer நித்திய ஸ்ரீ யை Final kku ஏன் தெரிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் நன்றாக பாடி வந்த ஓவியாவை ஏன் நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. அந்த உப்பிலியப்பனுக்கே வெளிச்சம்
Post a Comment