முன்னமெல்லாம் நடுவழியில்
வாகனங்களை நிறுத்தி
காசுபுடுங்கினால் அதுக்குப்பேர் வழிப்பறி.
இப்போ அதே சோலியை யூனிபார்ம்
போட்டுக்கிட்டு செஞ்சா
அதுக்குப்பேர் போக்குவரத்து காவல்துறை
இனிமே ரசீது கொடுத்து புடுங்குவான்லா
அதுக்குப்பேர் டோ ல்கேட்.
முன்னமெல்லாம்
ஆலும் வேலும் அவனவன் பல்லுக்குறுதி
இப்பெல்லாம்
பல்விளக்கினால் ப்ராக்டர் அண்ட் கேம்பிள்
கல்லாவுக்கு உறுதி.
முன்னமெல்லாம் பேசாத ஆளைப்பாத்து
பேச்சிமுத்தா அவம் பேசக்காசுகேப்பானின்னு
கேலி பேசுவாங்க.
இப்பல்லாம் யார் யாரோட பேசினாலும்
எடுத்து வைக்கனும் நிமிசத்துக்கு 49 பைசா.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
அரசியலில் புகுந்து அள்ளிக்கொட்டுதல்,
சினிமாவில் சேர்ந்து தூத்திக்கொள்ளுதல்,
பத்து வட்டிக்குக்கொடுத்து பறித்துக்கொள்ளுதல்,
பச்சை நெலத்த கூறுபோட்டு ரியல் எஸ்டேட் நடத்துதல்,
அன்னயாவினும் சுலபவழி ஆங்காங்கே
ஆங்கிலப்பள்ளி எஞ்சினீயரிங் கல்லூரி கட்டுதல்.
13 comments:
மனிதன் மாறி விட்டான், வான் மழையும் செடியும் மலை காற்றும் மாற வில்லை.
காடுகளை வளர்ப்போம் என்பது பாடப்புத்தகத்தில்.
காடுகளை விற்போம் என்பது நடைமுறையில்.
/இனிமே ரசீது கொடுத்து புடுங்குவான்லா
அதுக்குப்பேர் டோல்கேட்./
இவங்க பறிக்கிறது கொள்ளையோ கொள்ளை!
என்னன்னு சொல்ல.. நீங்க கொஞ்சம்தான் சொல்லியிருக்கீங்க..
சும்மா இருக்கிறவன பேசு பேசுன்னு சொல்லி சொல்லியே கல்லா கட்டுறானுவ. 250 கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லைன்னாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கையாம். ஆங்கோர் ஏழைக்கெல்லாம் எழுத்தறிவிக்கிறது கனவிலயும் நடக்குதா?
நம்ம புலம்பிட்டே இருக்கவேண்டியதுதான்
உண்மைதான்.
ஹா ஹா ஹா சரியா சொன்னிங்க...
அன்று அரசர்கள்,
சாலைகள் அமைத்தனர்,
மரங்களை நட்டனர்,
குளங்களை வெட்டினர்,
அணைகளைக் கட்டினர்
இன்று ஆள்பவர்கள்,
சிலைகளை வைத்தனர்,
மரக்காடுகளை வெட்டினர்,
குளங்களை குடியிருப்பாக்கினர்,
அணைகளென்றால் மட்டும்,
செம்மொழி மாநாட்டிற்கு
சென்று விடுகிறார்கள்.
இன்னும் நிரைய இருக்கு சொல்றதுக்கு சார். இருந்தாலும் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்கிற மாதிரி இதுவே போதும் மிச்ச லச்சனத்த சொல்றதுக்கு.
ஒரு கட்டத்தில் மக்களுக்கு சுரண்டல்ன்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் போய் விடும். நம்ம குழந்தை exploitation என்றால் yennavendru keppargal.
மாற்றங்கள் மாறும் போக்கில் மனிதனையும் மாற்றி விடுகிறது மாறாமல் மாரடித்து கிடப்பதென்னவோ பாமரன்...
அண்ணே சூப்பர்...வலியோடு வாழ்த்துகிறேன்...
டோல் கேட்டு தாண்டினவுடனே மரத்தடியில கார் கதவ தெறந்து வச்சிக்கிட்டு காத்திருக்கும் ஹைய்ய்ய்ய்ய்ய்ய்வே பேட்ரோல மறந்துடாதீங்க
Post a Comment