மூன்று நாட்கள் மதுரையில் பனி நிமித்தமான பயிற்சி வகுப்பு நடக்கிறது.அங்கே வலைப்பதிவர் உயர் திரு சீனா
அவர்களைப்பார்க்கிற சந்தர்ப்பமும் சந்தோசமும் கிடைத்தது.வானலை வழியே தொடரும் முகந்தெரியாத நட்பை
சிலாகிக்கக் கிடைத்த அந்த ஒரு மணிநேரம் உன்னதமானது.அந்த மதுரை அதே மூன்றுநாட்கள் ஒரு பெரும் விழாவை எதிர்நோக்கி காத்திருந்தது.
முன்னாள் காவல்துறை மந்திரி கக்கனுக்கு நூற்றாண்டு விழா.மதுரையெங்கும் தேசியக்கொடி பறக்கிறது.திரும்பிய பக்கமெல்லாம் ப்ளக்ஸ் விளம்பரங்கள், தோரணங்கள், ஒலிபெருக்கி தூங்காநகர் விழாக்கோலம் அமளிதுமளிப்படுகிறது. அந்த திருவிழாக் கூட்டத்தில் கக்கன் தொலைந்து போய்விட்டார். ஆமாம் ஐம்பது ப்ளக்ஸுக்கு ஒன்றில் ஒரு மூலையில் வித்தியாசமான முகம் ஒன்று சிறியதாக இருக்கிறது.அதுதான் அமரர் கக்கன் என்று ஊகித்துக்கொள்கிற பொறுப்பை பார்வையாளர்களிடம் விட்டுவிட்டது காங்கிரஸ் கட்சி.
மற்றபடி விளம்பரங்களில் எல்லாம் மத்திய அமைச்சர்கள்,தொடங்கி உள்ளூர் வட்டசெயலாளர் வரை அழகழகாய் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்கள். பரவாயில்லை மற்ற கட்சிகளை விட இங்கே மத்தியப்படுத்தப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஒரு படத்தில் மகன் மேலேயிருக்கிறார் கீழே அப்பா படம் அதற்கு கீழே வாசகம். அது என்ன தெரியுமா ? 'கிங் மேக்கரே வருக வருக'.அந்த caption ஐ சிந்தித்த படைப்பாளியைச் சும்மா சொல்லக்கூடாது.மருந்துக்குக்கூட காமராஜர் உருவம் தென்படவில்லை.அவரது ரீமிக்ஸாக நாம் இன்றைய காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்.சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இது மறு உருவாக்கலின் காலம்.
இடையிடையே முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் ப்ளக்ஸ் படமும் தென்பட்டது.பாஜாக தலைவரின் படத்தை ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன்.கூட வந்தவர் கூவேகொள்ளையே என்று சிரித்தார்.'சிரித்து முடித்துவிட்டு போய்ய்யா நீயும் உன் அரசியல் அறிவும்'.என்று இளக்காரமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.ஏன் சிரித்தார்.தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
ஒரு டிராக்டரில் ஓலைக் குடிசை அமைத்து மதுரை மாநகரைச் சுற்ற விட்டு விட்டார்கள்.கக்கன் எளிமையானவராம்.மகாத்மாக் காந்தியை எளிமையானவராகக் காட்ட தினம் தினம் நாங்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்யவேண்டியிருந்தது என்று அவரோடு சமகாலத்தில் ஆசிரமத்தில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்லியிருக்கிறார்.அதுகூட மகாத்மா வாழும் காலத்தில்.இது மறதியெனும் புதைசேற்றில் அமிழ்ந்துபோன ஒரு சாமன்யத் தலைவரை எளிமையானவர் என்று சொல்ல அந்தக்கட்சிக்கு அவர் இறந்து ஒரு முப்பது ஆண்டுகள் தேவையாய் இருந்திருக்கிறது.அவர் இறந்தது டிசம்பர் மாதம் 1981 ஆம் ஆண்டு.
பால்யப்பருவத்திலேயே சுதந்திரப்போரில் ஈடுபட்டவர்.வெள்லையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டு கைதாகி அலிப்பூர் சிறையிலடைக்கப்பட்டவர்.சுதந்திரத்துக்கு முந்தைய தமிழகத்தில் வைத்தியநாதய்யரோடு ஆலயப்பிரவேசம் போய் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவர் திரு கக்கன்.பாராளுமன்ற உறுப்பினராகவும்,காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் இருந்தவர்.பெருந்தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பர்.அவர் தோளில் கைபோட்டுப்பேசுகிற வாஞ்சைக்குறிய மனிதர்களில் கக்கனும் ஒருவர்.
இரண்டு இலாகாக்களுக்கு மந்திரியாய் இருந்தவர். ஒன்று போலீஸ் இலாக்கா,இன்னொன்று அப்போதைய மராமத்து இலாக்கா.அதாவது இப்போதைய பொதுப்பணித்துறை.பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜரின் நிழல்போல தமிழகத்து குக்கிராமங்களுக்கு அலைந்து திரிந்தவர்.தென் தமிழகத்து அரசு ஆரம்பப்பள்ளிகள் அணைத்துக்கும் அடிக்கல் நாட்டியதும் திறந்துவைத்ததும் இந்த இணைபிரியா நண்பர் இருவர்தான்.இன்னும் கூடத் தூர்ந்து போன பள்ளிக் கட்டிடங்களில் அழியாத கல்விக்கனலை கக்கியபடிக்கிடக்கிறது கக்கனின் காமராஜரின் பெயர் பொறித்த சிறு கருங்கற்கள்.
பொதுப்பணித் துறை மந்திரியாயிருந்த போதுதான் மேட்டூ அணையும், வைகை அணையும் கட்டப்பட்டது. அந்தத்துறையில் இப்போது சம்பாதிக்கிற மாதிரி வேண்டாம். அன்று தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அரசுக்கட்டிடங்களில் சிந்திய சிமெண்டெடுத்து கட்டியிருந்தால் கூட இரண்டு பேரும் பெரும்பங்களாக்கள் கட்டியிருக்கலாம்.அதெல்லாம் பாவம் என்கிற கருத்தைப் பிடித்துக்கொண்டு வழ்ந்தவர் கக்கன். தன் அந்திமக் காலங்கள் வரையிலும் மதுரைக்கருகில் உள்ள தும்பைப்பட்டியில் அதே ஓலைக் குடிசையிலேதான் வாழ்ந்தார். இறுதிக்காலத்தில் நோய்வாய்ப் பட்டு யஸ்கின் அரசு மருத்துவமனையில் கேட்பாரற்றுக்கிடந்தார்.அங்கே கட்டில் கூடக் கிடைக்காமல் கீழே கோரப்பாய் விரித்துப் படுத்துக் கிடந்தார்.அதை எளிமை,தியாகம் என்ற வார்த்தைகளில் மூடி மறைப்பதுபோல திருட்டுத்தனம் ஏதுமில்லை.
ஆனால் கக்கன் சீந்துவாரில்லாமல் கிடந்ததைக் கேள்விப்பட்டு பதைபதைக்கிற மனிதாபிமானம் காங்கிரசின் பரம வைரியான திராவிடக்கட்சித் தலைவர் ஒருவரிடம் இருந்தது.ஆம் அது அந்நாளைய முதல்வர் உயர்திரு எம்ஜியார் அவர்கள்.அப்போதும் கூட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது.தலைவர்கள் இருந்தார்கள்.தேனாம்பேட்டையில் இருக்கும் மிகப்பெரிய கட்சி அலுவலகமும் இருந்தது.அனுமார் வால்போல நீண்டுகொண்டு போகும் வனிக வளாகமும் இருந்தது.எல்லாம் இருந்தும் கவனிப்பாரற்று போனார் அமரர் கக்கன்.தாங்கள் காற்றில் பறக்கவிட்டதை,தாங்கள் நிரந்தரமாகத் தொலைத்துவிட்டதை ஞாபகப்படுத்துகிற ஒரு உருவமாக மறியிருக்கிறார் அமரர் கக்கன் அவர்கள்.நடக்கட்டும் யாவாரம்.
18 comments:
காமு சார் திருநாவுக்கரசர் காங்கிரஸ்ல சேர்ந்து மாசங்கள் ஆயிருச்சு :)
நல்ல பதிவு. நூற்றாண்டு விழா நாயகரை விட்டுவிட்டு "கிங்மேக்கரை" முன்னிலைப்படுத்தும் அவலத்தைப் பற்றி என்ன சொல்ல?
கக்கனைப் பற்றி நான் எழுதிய சில பதிவுகள் இங்கே.
கக்கன்
மதுரை வைத்யநாத ஐயர் பற்றி கக்கன்
கக்கனின் தம்பி விஸ்வநாதன் கக்கன் மறைவு
அன்றைக்கு இருந்த வாக்காளர்களும் வேட்பாளர்களின் பணித் திறமை பார்த்து வாக்கு அளித்தார்கள்.
இன்றைய வாக்காளர்களாகியா நாம் வாக்குகளை எட்டாயிரதிர்க்கும், பத்தாயிரத்திற்கும் விற்று கொண்டு இருக்கிறோம்,
இன்று தேர்தல் நாளன்று நாம் வாக்களர்களின் சாதி , மதம் , நமக்கு வாக்குக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்டு வாக்கு அளிக்கிறோம்.
அன்றைக்கு இருந்த வாக்காளர்களும் வேட்பாளர்களின் பணித் திறமை பார்த்து வாக்கு அளித்தார்கள்.
இன்றைய வாக்காளர்களாகியா நாம் வாக்குகளை எட்டாயிரதிர்க்கும், பத்தாயிரத்திற்கும் விற்று கொண்டு இருக்கிறோம்,
இன்று தேர்தல் நாளன்று நாம் வாக்களர்களின் சாதி , மதம் , நமக்கு வாக்குக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பற்றி மட்டுமே அக்கறை கொண்டு வாக்கு அளிக்கிறோம்.
எனவே அன்று கக்கன், அண்ணாதுரை தோன்றினார்கள் (முதல்வர் ஆன பிறகும் நுங்கம் பாக்கத்தில் முடி திருத்த அருகில் இருக்கும் கடைக்கு தானே நடந்து சென்ற முதல்வர் அவர், வீட்டில் போடப் படும் நாளிதழ்களுக்கு தன் சொந்த பணத்தை கட்டியவர் ).
இன்று ஜெகத்ரட்சகன், ரித்திஷ், மனோஜ் பாண்டியன்களே தோன்றுவர்.
சத்தியாமாய் தலைப்புக்கு சரியான கருத்துக்கள்...கட்டுரை முழுவதும்.
எளிமையை காட்டுவத்ர்க்கே இப்போ ஏகப்பட்ட செலவு செய்யணும் அண்ணே...வாழ்த்துகள்...
இந்த இடுகைக்காக பின்னேழ் பிறகேழ் பிறப்புகள் இருப்பின் உங்களை நேசிக்கத்தோன்றுகிறது காமு சார் சகலமும் இருக்க ....
இதுதான் அரசியல், அதனால்தான் இப்போது கலைஞர் தலைமுறைகள் தாண்டி நிலைக்கும் அளவுக்கு சொத்துகளை சேர்க்கிறார்...
காந்தி அடிகளின் எளிமை பற்றி நிறைய சொல்லலாம். கவிக்குயில் சரொஜினி தேவி சொன்னதுதான் முத்தாய்ப்பானது".It is too costly to keep Gandhi poor" என்று கவிக்குயில் வர்ணித்தார்...காஸ்யபன்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்
கோரப்பாயில் படுக்க வைத்தவர்களின் வாரிசுகள் தான் இன்றைக்கு ஃப்ளக்ஸ் போர்டுகளில் வலம் வருகிறார்கள் என்று சொல்வேன். தியாகம் எளிமை எல்லாம் என்ன விலை என்று கேட்கின்ற காலம் இது.கோடிக்கணக்கில் அரசாங்க செலவில் வைத்தியம் பார்த்த ஒரு மத்திய அமைச்சரையும் தமிழ் பேசும் நல்லுலகம் மறக்காது என்று நினைக்கிறேன். பணக்காரர்கள் ஒரு நேர்மையாளருக்கு மரியாதை உண்மையிலேயே செலுத்துவார்களா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தோழரே!
அரசியல்வாதிகளுக்கு மக்கள் கொடுக்க வேண்டிய ஒரு பொருள் , காண்டம். அரசியல் வாதிகள விட அவனுங்களோட வாரிசு தொல்ல தாங்க முடியலடா சாமி.
கக்கன் ஒரு வரலாறு.
அவர் பேராவது கவனமிருக்கே:(. நேசமித்திரனை வழி மொழிகிறேன்:)
/அந்த திருவிழாக் கூட்டத்தில் கக்கன் தொலைந்து போய்விட்டார்/
இவர்கள் எடுக்கும் திருவிழாவே பெருந்தலைவர்களைத் தொலைத்துத் தங்களை முன்னிறுத்தத்தானே!
/அந்த திருவிழாக் கூட்டத்தில் கக்கன் தொலைந்து போய்விட்டார்/
இவர்கள் எடுக்கும் திருவிழாவே பெருந்தலைவர்களைத் தொலைத்துத் தங்களை முன்னிறுத்தத்தானே!//:-))
நல்ல பகிர்வு.
'கக்கா' மாணவர்கள் என்ன 'கொக்கா'?
இந்தி எதிர்ப்பில் கோஷம் போட்டது
எதிரொலிக்கிறது...இன்னும்..
Dear coms,Now thirunavukkarasar is in congress party.But u told that man that thirunavukkarasar is in B.J.P. I think now u are clear why that man was loughed. Thanks
கருத்துரைத்த நண்பர்கள் அணைவர்க்கும்.அன்புகலந்த வணக்கம்.
Post a Comment